For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த பழம் உங்க இதய & எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் இரத்த சர்க்கரை அளவை குறைக்கவும் உதவுமாம்!

உங்கள் உணவில் திராட்சையை சேர்த்துக்கொள்வது மனநிலை மற்றும் நினைவாற்றலை மேம்படுத்த உதவும் என்று குறிப்பிடத்தக்க ஆய்வுகள் தெரிவிக்கின்றன

|

பொதுவாக பழங்கள் நம் ஆரோக்கியத்தோடு நெருக்கமாக இணைக்கப்பட்டுள்ளது. பழங்களில் பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருப்பதால், அது உங்கள் உடலுக்கு பல அதிசயங்களை செய்யும். அந்த வகையில், உங்கள் சருமம் மற்றும் உடல் ஆரோக்கியத்தில் குறிப்பிடத்தக்க விளைவுகளை ஏற்படுத்தும் ஒரு பழம் திராட்சை. ஆம், திராட்சை உங்கள் சருமத்திற்கு அதிசயங்களை செய்ய முடியும். சமீபத்திய ஆய்வின்படி, தீங்கு விளைவிக்கும் புற ஊதா கதிர்களில் இருந்து உங்கள் சருமத்தைப் பாதுகாக்க திராட்சை உதவுகிறது என்று கூறப்படுகிறது. மேலும், திராட்சையின் நன்மைகள் தோலுக்கு அப்பாற்பட்டவை. இந்த பழம் கண், இதயம், எலும்பு உட்பட பல ஆரோக்கிய நன்மைகளை நமக்கு வழங்குகிறது.

why-grapes-should-be-a-part-of-your-diet-in-tamil

புரதம், கொழுப்பு, நார்ச்சத்து, தாமிரம், வைட்டமின்கள், பொட்டாசியம் மற்றும் பல அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களால் நிரம்பிய திராட்சையின் ஆரோக்கிய நன்மைகளைப் பற்றியும், அவற்றை ஏன் நம் உணவில் சேர்க்க வேண்டும் என்பது பற்றியும் இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது

இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது

பொட்டாசியத்தின் நல்ல மூலமாக திராட்சைப்பழம் உள்ளது. இது உங்கள் உடலில் திரவங்களை சமநிலைப்படுத்த உதவும் ஒரு கனிமமாகும். இவை உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கிறது. திராட்சையில் கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க உதவும் பண்புகள் உள்ளன. இது இதய நோய்களிலிருந்து உங்களைப் பாதுகாக்க உதவுகிறது.

இரத்த சர்க்கரை அளவை குறைக்கலாம்

இரத்த சர்க்கரை அளவை குறைக்கலாம்

திராட்சையில் அதிக சர்க்கரை உள்ளடக்கம் இருந்தாலும், நீரிழிவு நோயாளிகள் பொதுவாக இந்த பழத்தை சாப்பிடலாம். ஏனெனில், நீரிழிவு நோயாளிகளுக்கு கார்போஹைட்ரேட்டுகளின் சிறந்த மூலமாக திராட்சை உள்ளது. அவை தாதுக்கள், வைட்டமின்கள் மற்றும் பலவிதமான நோயை எதிர்த்துப் போராடும் பைட்டோ கெமிக்கல்கள் போன்ற நன்மை பயக்கும் நுண்ணூட்டச்சத்துக்களைக் கொண்டுள்ளன. திராட்சையில் இயற்கையான சர்க்கரை இருப்பதால், அவை உங்கள் பற்களையும் சுவை மொட்டுக்களையும் திருப்திபடுத்தும்.

உங்கள் கண் ஆரோக்கியத்திற்கு நல்லது

உங்கள் கண் ஆரோக்கியத்திற்கு நல்லது

திராட்சையில் லுடீன் மற்றும் ஜியாக்சாண்டின் போன்ற ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன. அவை பொதுவான கண் நோய்களிலிருந்து உங்களைப் பாதுகாக்க உதவும். உங்கள் உணவில் திராட்சையை சேர்ப்பது விழித்திரை அமைப்பு மற்றும் செயல்பாட்டில் ஒரு பாதுகாப்பு விளைவைக் கொண்டுள்ளது. ஆராய்ச்சியின் படி, அதிக திராட்சை சாப்பிடுவது அழற்சி புரத அளவைக் குறைக்கிறது மற்றும் விழித்திரையில் பாதுகாப்பு புரதங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கிறது. இது உங்கள் கண் ஆரோக்கியத்தை பாதுகாக்க உதவுகிறது.

நினைவாற்றல் மற்றும் மனநிலைக்கு நல்லது

நினைவாற்றல் மற்றும் மனநிலைக்கு நல்லது

உங்கள் உணவில் திராட்சையை சேர்த்துக்கொள்வது மனநிலை மற்றும் நினைவாற்றலை மேம்படுத்த உதவும் என்று குறிப்பிடத்தக்க ஆய்வுகள் தெரிவிக்கின்றன. திராட்சைப்பழத்தில் ரெஸ்வெராட்ரோல் என்ற நினைவாற்றலை அதிகரிக்கும் கலவையும் பாலிஃபீனால்களும் நிறைந்துள்ளன. இது மூளையை அணுகும் ஆக்ஸிஜனேற்றியாகும். இதன் காரணமாக திராட்சையை உங்கள் உணவில் சேர்த்து நினைவாற்றல் மற்றும் மூளை ஆரோக்கியத்தை அதிகரிக்கலாம்.

வீக்கத்தைக் குறைக்கிறது

வீக்கத்தைக் குறைக்கிறது

திராட்சையில் ஃபிளவன்கள், அந்தோசயினின்கள், ஃபிளாவனால்கள் மற்றும் ஸ்டில்பீன்கள் (எ.கா., ரெஸ்வெராட்ரோல்) போன்ற ஏராளமான பாலிபினால்கள் உள்ளன. இந்த அழற்சி எதிர்ப்பு பண்புகள், இதய நோய், நீரிழிவு, மூட்டுவலி, புற்றுநோய் மற்றும் ஆட்டோ இம்யூன் கோளாறுகள் போன்ற நிலைமைகளை சமாளிக்க உதவும்.

எலும்பு ஆரோக்கியத்திற்கு நன்மை

எலும்பு ஆரோக்கியத்திற்கு நன்மை

திராட்சையில் எலும்பு ஆரோக்கியத்திற்குத் தேவையான பல தாதுக்கள் உள்ளன. பொட்டாசியம், மாங்கனீசு மற்றும் வைட்டமின்கள் பி, சி மற்றும் கே உட்பட பல சத்துக்கள் உள்ளன. இது உடையக்கூடிய எலும்புகளுக்கு வழிவகுக்கும் எலும்புப்புரையைத் தடுக்க உதவுகிறது. கூடுதலாக, சில ஆய்வுகள் ரெஸ்வெராட்ரோல் எலும்பு அடர்த்தியை மேம்படுத்தலாம் என்பதை நிரூபிக்கிறது. திராட்சை எலும்பு ஆரோக்கியத்திற்கு சிறந்தவை. இந்த பண்புகள் ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற நோய்கள் வராமல் தடுக்கவும் உதவும்.

சருமத்தை பாதுகாக்கிறது

சருமத்தை பாதுகாக்கிறது

திராட்சை உங்கள் சருமத்தை ஃப்ரீ ரேடிக்கல்கள் மற்றும் புற ஊதா கதிர்வீச்சிலிருந்து பாதுகாக்கிறது. இது சுருக்கங்கள், கரும்புள்ளிகள் மற்றும் தோல் புற்றுநோய் போன்ற வயதான அறிகுறிகளிலிருந்து உங்களைப் பாதுகாக்கிறது. உங்கள் சருமம் கொலாஜனை உற்பத்தி செய்ய கூடுதல் வைட்டமின் சி முக்கியமானது. இது உங்கள் முகம் இளமையாக தோற்றமளிக்க உதவுகிறது. திராட்சையில் வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளதால், அவை உங்கள் சருமத்தை இளமையாக மாற்றவும் உதவும்.

இறுதி குறிப்பு

இறுதி குறிப்பு

திராட்சை உங்களுக்கு பல ஆரோக்கிய நன்மைகளை அளிக்கும் அதே வேளையில், இது உங்களுக்கு சிறந்ததா என்பதை அறிய உங்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது நல்லது. எந்த உணவுகளில் எவ்வளவு நன்மைகள் நிறைந்திருந்தாலும், அவை அளவாக எடுத்துக்கொள்வதே சிறந்தது. அதனால், திராட்சை உட்பட எல்லாவற்றையும் நீங்கள் மிதமாக சாப்பிட வேண்டும் என்பதை மறந்துவிடாதீர்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

why grapes should be a part of your diet in tamil

why grapes should be a part of your diet in tamil
Story first published: Wednesday, January 25, 2023, 15:28 [IST]
Desktop Bottom Promotion