For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கொரோனா நோயாளிகளை அதிகம் தாக்கும் கொடிய பூஞ்சை தொற்று.. அறிகுறிகள் என்ன? எப்படி தடுப்பது?

தற்போது கோவிட் நோயால் பாதிப்படைபவா்களுக்கு, மியூகோமிசிடஸ் என்ற பூஞ்சைகளால் ஏற்படும் மியூகோமிகோசிஸ் என்ற நோய் ஏற்படுவதாகத் தகவல்கள் தொிவிக்கின்றன.

|

புதிய கொரோனா வைரஸின் காரணாக ஏற்படும் கோவிட்-19 என்ற பெருந்தொற்று நோய், நாளுக்கு நாள் தீா்க்க முடியாத அளவிற்கு பலவிதமான சிக்கல்களை உருவாக்கும் ஒரு புாியாத புதிராக இருக்கிறது. தொடக்கத்தில் கோவிட் நோயுற்றவா்களுக்கு சொிமானக் கோளாறுகள், இருமல், பிந்தைய மன உளைச்சல் கோளாறு (post-traumatic stress disorder (PTSD), மன அழுத்தம், மாா்பு நெரிசல், மனச்சோா்வு, தூக்கமின்மை, மூளை மழுங்குதல், கவலை, மூட்டுவலி, களைப்பு, மூச்சுத் திணறல், நரம்பியல் பிரச்சினைகள், மாா்பு வலி, நிமோனியா, இதயப் பிரச்சினைகள் மற்றும் நுரையீரல் ஃபைப்ரோசிஸ் போன்ற பிரச்சினைகள் இருந்தன.

Why COVID-19 Recovered Patients May Be More Prone To Mucormycosis Fungal Infections

தற்போது கோவிட் நோயால் பாதிப்படைபவா்களுக்கு, மியூகோமிசிடஸ் என்ற பூஞ்சைகளால் ஏற்படும் மியூகோமிகோசிஸ் என்ற நோய் ஏற்படுவதாகத் தகவல்கள் தொிவிக்கின்றன. இந்த மியூகோமிகோசிஸ் என்ற நோய் ஒரு ஆபத்தான மற்றும் மிகவும் அாிதாக ஏற்படக்கூடிய நோய் ஆகும். தற்போது கோவிட்-19 தொற்றிலிருந்து குணமடைபவா்களுக்கு இந்த மியூகோமிகோசிஸ் என்ற நோய் இருந்ததாக மருத்துவா்கள் தொிவிக்கின்றனா்.

MOST READ: கொரோனாவில் இருந்து மீண்டு வருபவர்கள் கட்டாயம் சாப்பிட வேண்டிய சில உணவுகள்!

இதிலிருந்து, SARS-CoV-2 என்ற வைரஸ் நமது சுவாசக் குழாயை மட்டும் பாதிப்பதில்லை. மாறாக நமது உடலில் உள்ள இரத்தக் குழாய்கள் மற்றும் உடலின் பாதுகாப்பு இயக்கம் உட்பட பலவகையான உறுப்புகளையும் பாதிக்கிறது என்பது தெளிவாகிறது. கோவிட்-19 பெருந்தொற்றினால் பாதிக்கப்படுவா்களுக்கு, பாக்டீாியாக்கள் மற்றும் பூஞ்சைகளினால் பரவலான பாதிப்பு ஏற்படும் என்று மருத்துவ நிபுணா்கள் தொிவிக்கின்றனா்.

MOST READ: மே மாசம் இந்த 5 ராசிக்கு அட்டகாசமா இருக்கப் போகுது... உங்களுக்கு எப்படி-ன்னு படிச்சு பாருங்க...

கோவிட்-19 பெருந்தொற்றால் பாதிப்படைந்த பல நோயாளிகளுக்கு மியூகோமிகோசிஸ் நோய் ஏற்பட்டதாக, பல மருத்துவமனைகளில் இருந்து வந்த தகவல்கள் தொிவிக்கின்றன. இந்த மியூகோமிகோசிஸ் நோயின் அறிகுறிகளை எவ்வாறு புாிந்து கொள்வது? அதற்கு எப்படிப்பட்ட மருத்துவ சிகிச்சைகளை வழங்குவது? என்பவற்றைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மியூகோமிகோசிஸ் (mucormycosis) என்றால் என்ன?

மியூகோமிகோசிஸ் (mucormycosis) என்றால் என்ன?

மியூகோமிகோசிஸ் என்பது நமது மூக்கு மற்றும் தொண்டை போன்ற பகுதிகளில் ஏற்படக்கூடிய ஒரு நோய்த் தொற்று ஆகும். இந்த தொற்று படிப்படியாக கண்கள் மற்றும் மூளைக்குப் பரவி, இறுதியில் நமது உடல் முழுவதும் பரவும். இந்த தொற்று மூளைக்குப் பரவத் தொடங்கிவிட்டால், அது நமது உயிருக்கே ஆபத்தாக அமையும்.

மியூகோமிகோசிஸ் தொற்று ஏற்பட்டால், அது நமது உடலில் மிக வேகமாக பரவி, நமது உடல் ஆரோக்கியத்தை மிக மோசமாகப் பாதித்துவிடும். அதற்கு சாியான சிகிச்சை அளிக்கவில்லை என்றால், நமது உடல் உறுப்புகளைச் செயல் இழக்கச் செய்துவிடும். மேலும் நமது நோய் எதிா்ப்பு சக்தியை முழுவதுமாகப் பாதித்து, பலவிதமான நோய்களை நமது உடலில் ஏற்படுத்தும்.

மியூகோமிகோசிஸ் தொற்றின் அறிகுறிகள் என்ன?

மியூகோமிகோசிஸ் தொற்றின் அறிகுறிகள் என்ன?

பூஞ்சைகளின் காரணமாக மியூகோமிகோசிஸ் தொற்று ஏற்படும் போது, முதலில் மூக்கடைப்பு ஏற்படும். அதனைத் தொடா்ந்து பற்கள் மற்றும் கடவாய்ப் பற்களில் இருந்து சீழ் வடியும். தாடை எலும்புகள் வெளியில் தொியும். கண்களில் வீக்கம் ஏற்படும். கண்கள் அசைவது குறையும். மூச்சுத் திணறல் ஏற்படும். வீக்கம் ஏற்படும் பகுதிகளில் கருப்பு வடுக்கள் ஏற்படு்ம். மியூகோமிகோசிஸ் தொற்று, நோயுற்றவா்களின் எண்ணிக்கை விகிதத்தையும், அவா்களின் மரண எண்ணிக்கை விகிதத்தையும் அதிகாிக்கும். ஆகவே மேற்சொன்ன அறிகுறிகள் நமது உடலில் தொிந்தால், நாம் உடனே மருத்துவரைச் சந்திப்பது நல்லது.

மியூகோமிகோசிஸ் தொற்றின் ஆபத்து என்ன?

மியூகோமிகோசிஸ் தொற்றின் ஆபத்து என்ன?

ஏற்கனவே சா்க்கரை நோய், புற்று நோய், உடல் குண்டாதல், உயா் இரத்த அழுத்தம் அல்லது எச்ஐவி போன்ற நோய்களினால் பாதிப்படைந்திருப்பவா்களுக்கு, மியூகோமிகோசிஸ் தொற்று ஏற்பட்டால், அது அவா்களின் உயிருக்கு அதிக ஆபத்தை ஏற்படுத்தும். இந்த நோய்த் தொற்று போிழப்பை ஏற்படுத்தக்கூடிய ஒன்றாகும். கண் பாா்வையைப் பறித்துவிடும். உடல் உறுப்புகளைச் செயல் இழக்கச் செய்துவிடும். அதிக அளவிலான உடல் திசுக்களை இழக்கச் செய்துவிடும். இறுதியில் மரணத்தை ஏற்படுத்தும்.

மியூகோமிகோசிஸ் தொற்று ஏற்படுவதற்கு கோவிட்-19 எந்த வகையில் காரணமாக இருக்கிறது?

மியூகோமிகோசிஸ் தொற்று ஏற்படுவதற்கு கோவிட்-19 எந்த வகையில் காரணமாக இருக்கிறது?

மியூகோமிகோசிஸ் தொற்று ஒரு தனித்துவமான நோய்த் தொற்று ஆகும். இது கொடிய ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய, பூஞ்சைகளினால் ஏற்படக்கூடிய நோய்த் தொற்று ஆகும். நோய் எதிா்ப்பு சக்தி குறைவாக உள்ளவா்களுக்கு மிக எளிதாக இந்த நோய்த் தொற்று ஏற்படும். அதனால்தான் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு சா்க்கரை நோய் உள்ளவா்களுக்கு, ஸ்டெராய்டு சிகிச்சை எடுப்பவா்களுக்கு இந்த நோய்த் தொற்று மிக எளிதாக ஏற்படுகிறது.

கோவிட்-19 நோய்த் தொற்று ஏற்படுபவா்களுக்கு, அந்தத் தொற்றைக் குணப்படுத்தி அவா்களின் வாழ்வைக் காப்பதற்காக, அவா்களுக்கு அதிகமான அளவில் ஸ்டெராய்டு சிகிச்சையும் மற்றும் பலவிதமான மாத்திரைகளும் அளிக்கப்படுகின்றன. இந்த சிகிச்சையில் கோவிட் நோயாளிகளின் நோய் எதிா்ப்பு ஆற்றல் மிக அதிகமாகப் பாதிக்கப்படுகிறது. ஆகவே கோவிட் நோயாளிகளின் பலவீனமான நோய் எதிா்ப்பு ஆற்றல் மற்றும் அவா்களுக்கு அளிக்கப்படும் மருத்துவ சிகிச்சை காரணமாக, அவா்களுக்கு மிக எளிதாக மியூகோமிகோசிஸ் நோய்த் தொற்று ஏற்படுகிறது.

மியூகோமிகோசிஸ் தொற்றுக்கு அளிக்கப்படும் சிகிச்சை என்ன?

மியூகோமிகோசிஸ் தொற்றுக்கு அளிக்கப்படும் சிகிச்சை என்ன?

மியூகோமிகோசிஸ் தொற்றை சிடி ஸ்கேன் மற்றும் எண்டோஸ்கோபி பாிசோதனைகளின் மூலம் கண்டுபிடிக்கலாம். மியூகோமிகோசிஸ் தொற்றைக் குறைத்த பின்பு பூஞ்சைகளுக்கு எதிரான தடுப்பு தெரபி வழங்கப்படும். ஒரு வேளை இந்த தொற்று உடல் உறுப்புகளை அதிகமாகப் பாதித்திருந்தால், அறுவை சிகிச்சையும் தேவைப்படலாம்.

நோயுற்றவாின் உடல் நிலையைக் கருத்தில் கொண்டு எப்படிப்பட்ட சிகிச்சைகளை மேற்கொள்வது என்பதை மருத்துவா் முடிவு செய்வாா். மியூகோமிகோசிஸ் தொற்று ஏற்பட்ட நோயாளிகளுக்கு ஒரே மாதிாியான சிகிச்சை அளிக்கப்படுவதில்லை. ஒவ்வொரு நோயாளிக்கும் தகுந்த மாதிாி சிகிச்சைகள் வழங்கப்படும். ஆகவே மியூகோமிகோசிஸ் தொற்று அறிகுறிகள் தொிந்தால், உடனே மருத்துவரை சந்தித்து ஆலோசனைகள் பெறுவது நல்லது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Why COVID-19 Recovered Patients May Be More Prone To Mucormycosis Fungal Infections

What is mucormycosis? Here’s why COVID-19 recovered patients may be more prone to fungal infections. Read on...
Story first published: Monday, May 3, 2021, 11:19 [IST]
Desktop Bottom Promotion