For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

எச்சரிக்கை! மறந்தும் இந்த சத்து மாத்திரைகளை ஒன்னா சாப்பிட்ராதீங்க... இல்லன்னா அது ஆபத்தை உண்டாக்கும்...

சத்து மாத்திரைகளை உட்கொள்வதாக இருந்தால், எந்த சத்து மாத்திரைகளை எதனுடன் சேர்த்து உட்கொள்ளக்கூடாது என்ற விஷயத்தை ஒருவர் கட்டாயம் அறிந்திருக்க வேண்டும்.

|

தற்போது மக்களிடையே சப்ளிமெண்ட்டுகளை சாப்பிடுவது ஆரோக்கியமானதாக கருதப்படுகிறது. மேலும் நிறைய பேர் சப்ளிமெண்ட்டுகள் எவ்வித பக்கவிளைவுகளையும் ஏற்படுத்தாது என்று நம்புகிறார்கள். சப்ளிமெண்ட்டுகள் என்பது வேறொன்றும் இல்லை சத்து மாத்திரைகள் தான். ஏராளமானோர் சத்து மாத்திரைகள் எந்த ஒரு பக்கவிளைவுகளையும் ஏற்படுத்தாது என்ற எண்ணத்தில் மருத்துவர்களின் பரிந்துரையின்றி சத்து மாத்திரைகளை எடுக்கிறார்கள்.

Which Supplements Should Not Be Taken Together In Tamil

வெறும் ஒரு சத்து மாத்திரையை சாப்பிட்டால் எவ்வித பிரச்சனையும் இல்லை. ஆனால் ஒன்றிற்கு மேற்பட்ட சில சத்து மாத்திரைகளை ஒன்றாக எடுக்கும் போது, அது உடலுக்கு தீங்கை விளைவிக்கும். எனவே சத்து மாத்திரைகளை உட்கொள்வதாக இருந்தால், எந்த சத்து மாத்திரைகளை எதனுடன் சேர்த்து உட்கொள்ளக்கூடாது என்ற விஷயத்தை ஒருவர் கட்டாயம் அறிந்திருக்க வேண்டும். இப்போது எந்த சத்து மாத்திரைகளை ஒன்றாக உட்கொள்ளக்கூடாது என்பதைக் காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
க்ரீன் டீ மற்றும் இரும்புச்சத்து மாத்திரை

க்ரீன் டீ மற்றும் இரும்புச்சத்து மாத்திரை

க்ரீன் டீயானது இரும்புச்சத்தை உடல் உறிஞ்சும் திறனைக் குறைக்கும் என்பது தெரியுமா? உடலானது இரும்புச்சத்தை உறிஞ்சுவதற்கு வைட்டமின் சி அவசியம் என்பதை அனைவருமே அறிவோம். மேலும் க்ரீன் டியானது ஆரோக்கியமான பானங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. ஆனால் அந்த க்ரீன் டீ இரும்புச்சத்தை உடல் உறிஞ்சுவதில் இடையூறை ஏற்படுத்தும். உடலுக்கு தேவையான மிகவும் அவசியமான சத்துக்களில் ஒன்று தான் இரும்புச்சத்து. இந்த சத்து நோயெதிர்ப்பு சக்தியில் முக்கிய பங்கை வகிக்கிறது. எனவே இரும்புச்சத்து மாத்திரைகளை எடுப்பவராக இருந்தால், க்ரீன் டீயை அதிகம் குடிப்பதைத் தவிர்த்திடுங்கள்.

மக்னீசியம் மற்றும் கால்சியம்

மக்னீசியம் மற்றும் கால்சியம்

மற்றொரு ஆபத்தான ஒரு சப்ளிமெண்ட் காம்போ தான் மக்னீசியம் மற்றும் கால்சியம். இதில் மக்னீசியமானது கால்சியத்தை உறிஞ்ச உதவி புரிந்து, ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற எலும்பு தொடர்பான பிரச்சனைகளை தடுக்கிறது. ஆனால், இந்த இரண்டு சத்து மாத்திரைகளையும் ஒன்றாக உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். அப்படி எடுக்கும் போது உடலால் மக்னீசியம் உறிஞ்சுவது குறைந்து, மக்னீசியம் குறைபாடு ஏற்படுவதற்கான அபாயம் அதிகரிக்கும். நரம்புகள் மற்றும் தசைகளின் செயல்பாட்டிற்கு அத்தியாவசியமான சத்து தான் மக்னீசியம். மேலும் இது இரத்த சர்க்கரை மற்றும் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துகிறது. பெரும்பாலும் மக்னீசியம் குறைபாடானது வயதானவர்கள், டைப்-2 சர்க்கரை நோய் அல்லது இரைப்பை குடல் நோய் உள்ளவர்களிடையே காணப்படுகிறது.

வைட்டமின் சி மற்றும் காப்பர்

வைட்டமின் சி மற்றும் காப்பர்

வைட்டமின் சி மிகவும் சக்தி வாய்ந்த மற்றும் மிகவும் அத்தியாவசியமான வைட்டமின்களில் ஒன்று என்பதை அனைவரும் அறிவோம். குறிப்பாக நோயெதிர்ப்பு மண்டலம் வலுவாக இருக்கவும், இரத்த அழுத்தத்தைக் குறைக்கவும் வைட்டமின் சி அவசியம். அதேப்போல் காப்பர் சத்தும் அவசியமான ஒன்றாகும். இது இணைப்புத் திசுக்களை உருவாக்க உதவுகிறது மற்றும் இதயம் தொடர்பான நோய்களின் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது. ஆனால் இந்த இரண்டு சத்து மாத்திரைகளையும் ஒன்றாக சாப்பிடக்கூடாது. ஏனெனில் வைட்டமின் சி, உடலால் காப்பர் உறிஞ்சும் திறனில் இடையூறை ஏற்படுத்தும்.

வைட்டமின் டி, ஈ மற்றும் கே

வைட்டமின் டி, ஈ மற்றும் கே

வைட்டமின் டி, ஈ மற்றும் கே ஆகிய வைட்டமின்கள் ஒவ்வொன்றுமே உடலுக்க மிகவும் அவசியமான சத்துக்களாகும். ஆனால் இந்த மூன்று வைட்டமின் மாத்திரைகளையும் ஒரே வேளையில் உட்கொள்ளக்கூடாது என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். ஏனெனில் இவற்றில் உடலால் வைட்டமின் கே உறிஞ்சும் திறனானது, வைட்டமின் டி மற்றும் ஈ ஆகியவற்றினால் தொந்தரவு செய்யப்படுகிறது. எனவே ஒவ்வொரு சத்து மாத்திரைகளையும் 2 மணிநேர இடைவெளியில் எடுக்க முயலுங்கள். இதனால் அனைத்து வைட்டமின்களும் உடலுக்கு கிடைக்கும்.

காப்பர் மற்றும் ஜிங்க்

காப்பர் மற்றும் ஜிங்க்

மற்றொரு ஆபத்தான சப்ளிமெண்ட் காம்போ தான் காப்பர் மற்றும் ஜிங்க். இவற்றில் ஜிங்க் சத்தானது உடலால் காப்பர் உறிஞ்சப்படுவதற்கான வாய்ப்புக்களைக் குறைக்கிறது. இந்த காம்போக்களை ஒன்றாக எடுக்கும் போது, கடுமையான களைப்பு, குளிர்ச்சி மற்றும் எலும்பு முறிவு போன்றவற்றால் பாதிக்கப்பட நேரிடும். எனவே நீங்கள் இந்த இரண்டு சத்து மாத்திரைகளையும் எடுப்பதாக இருந்தால், இரண்டு மணிநேர இடைவெளியில் எடுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Which Supplements Should Not Be Taken Together In Tamil

In this article, we have shared about which supplements should not be taken together. Read on to know more...
Story first published: Monday, January 30, 2023, 17:40 [IST]
Desktop Bottom Promotion