For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த பொருட்களை தொட்டா மறக்காம கை கழுவுங்க... இல்லைன்னா கொரோனா வந்துடும்...

|

தற்போது உலகத்தையே கொரோனா வைரஸ் பதற வைத்துக் கொண்டிருக்கிறது. உலகெங்கிலும் சுமார் 2,50,000-த்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். 10,000-த்திற்கும் அதிகமானோர் இறந்துள்ளனர். நாளுக்கு நாள் கொரோனா வைரஸின் தாக்கத்திற்கு ஏராளமானோர் பாதிக்கப்பட்டும் வருகின்றனர். இந்நிலையில் இந்த பெருந்தொற்றில் இருந்து பாதுகாப்புடன் இருப்பதற்கான நடவடிக்கைகளை ஒவ்வொருவரையும் மேற்கொள்ளுமாறு உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தி வருகிறது.

MOST READ: வரலாற்றில் 200 மில்லியன் மக்களை கொன்று குவித்த உலகின் மிகவும் கொடூரமான தொற்றுநோய் எது தெரியுமா?

இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 195 ஆக உள்ளது. இதுவரை இந்தியாவில் 4 பேர் இறந்துள்ளனர். மேலும் ஒவ்வொரு நாளும் கொரோனா வைரஸ் வழக்குகள் அதிகரித்தவாறு தான் உள்ளன. இந்தியாவில் மக்கள்தொகை மிகவும் அதிகம். இங்கு இந்த வைரஸ் தொற்று பரவ ஆரம்பித்தால், பல உயிர்களை இழக்க வேண்டியிருக்கும். ஏனெனில் இந்த வைரஸ் தொற்றிற்கு இன்னும் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை.

MOST READ: இந்த பழக்கம் இருப்பவர்களை கொரோனா வைரஸ் வேகமா தாக்க வாய்ப்பிருக்காம்.. எச்சரிக்கையா இருங்க...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கொரோனா வைரஸ்

கொரோனா வைரஸ்

கொரோனா வைரஸ் சீனாவின் வுஹான் மாகாணத்தை பிறப்பிடமாக கொண்டது. இது நுரையீரலைத் தாக்கும் ஒரு தொற்று நோய். சளி, இருமல் வழியாக மனிதரிடமிருந்து மற்றவருக்கு பரவக்கூடியது. இந்த வைரஸ் ஒருவரைத் தாக்கினால், அது காய்ச்சல், இருமல், தும்மல், சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகளை வெளிக்காட்டும்.

அதிகம் பாதிக்கப்படுபவர்கள் யார்?

அதிகம் பாதிக்கப்படுபவர்கள் யார்?

கொரோனா வைரஸ் நோயெதிர்ப்பு குறைவாக இருப்பவர்களை எளிதில் தாக்கும் என மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். பெரும்பாலும் நோயெதிர்ப்பு சக்தி முதியவர்கள், குழந்தைகள், உடல்நல பிரச்சனைகளான சர்க்கரை நோய், இதய நோய் உள்ளவர்களுக்கு குறைவாக இருக்கும். எனவே இவர்கள் கொரோனா வைரஸ் பரவும் இக்காலத்தில் மிகவும் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். அதோடு ஒவ்வொருவரும் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுப் பொருட்கள், ஜூஸ்கள் போன்றவற்றை எடுக்கவும் மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

அடிப்படை பாதுகாப்பு நடவடிக்கைகள்

அடிப்படை பாதுகாப்பு நடவடிக்கைகள்

உலக சுகாதார அமைப்பு கொரோனா வைரஸைத் தடுக்க ஒருசில அடிப்படை பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க அறிவுறுத்துகிறது. அவையாவன:

* அடிக்கடி கைகளை சோப்பு அல்லது சானிடைசர் கொண்டு கழுவ வேண்டும்.

* தும்மல் அல்லது இருமல் பிரச்சனை உள்ளவர்களிடம் இருந்து குறைந்தது 1 மீட்டர் அல்லது 3 அடி இடைவெளியைப் பராமரிக்கவும்.

* அசுத்தமான கைகளால் கண்கள், மூக்கு மற்றும் வாய் பகுதியை தேவையில்லாமல் தொடாதீர்கள்.

* தும்மல் அல்லது இருமலின் போது, வாய் மற்றும் மூக்குப் பகுதியை டிஸ்யூ பேப்பர் அல்லது துணியால் மூடிக் கொள்ளவும்.

* காய்ச்சல், இருமல் மற்றும் சுவாசிப்பதில் சிரமத்தை சந்தித்தால், சற்றும் தாமதிக்காமல் மருத்துவரை அணுகவும்.

சுவாச நோய்

சுவாச நோய்

புதிய கொரோனா வைரஸ் முதன்மையாக ஒரு சுவாச நோயாகும். இது பாதிக்கப்பட்ட நபர் இருமலின் போது அல்லது தும்மும் போது பொதுவாக வான்வழி நீர்த்துளிகள் வழியாக பரவுகிறது. இந்த வைரஸ் துகள்களைச் சுமக்கும் நீர்த்துளிகள் உங்கள் மூக்கு அல்லது வாய் அல்லது கண்களில் இறங்கினால் நோய்வாய்ப்படலாம். புதிய ஆய்வின் கூற்றுப்படி, கொரோனா வைரஸ் நிலப்பரப்புக்களில் ஒரு நாளைக்கு 1 மணிநேரம் வரை உயிருடன் இருக்குமாம். அதோடு வைரஸ்களை எடுத்துச் செல்வதில் மென்மையான, அசாதாரண மேற்பரப்புகள் சிறந்தது என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

எனவே ஒருசில இடங்கள் மற்றும் பொருட்களைத் தொட்டால், மறக்காமல் கைகளைக் கழுவுங்கள். இப்போது அவை எந்தெந்த பொருட்கள் மற்றும் இடங்கள் என்று காண்போம்.

எதெல்லாம் தொட்டால் கைகளைக் கழுவ வேண்டும்?

எதெல்லாம் தொட்டால் கைகளைக் கழுவ வேண்டும்?

* பணம், நாணயங்கள்

* கதவுகள் அல்லது கைப்பிடிகள்

* மாடிப்படி கைப்பிடி

* டேபிள் டாப்

* செல்லப்பிராணிகள்

* மொபைல்/ஸ்மார்ட்போன்

* காய்கறி வெட்டும் பலகை

* சமையலறை ஸ்பாஞ்ச்

* பேனாக்கள்

* அடி பம்புகள்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Wash Your Hands After Touching These Things To Avoid Coronavirus

Wash your hands after touching these things to avoid coronavirus. Read on...
Story first published: Friday, March 20, 2020, 18:36 [IST]
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more