For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கழிவறையில் தண்ணீருக்கு மாற்றாக டாய்லெட் பேப்பர் பயன்படுத்துவது நல்லதா?

மலம் கழித்தவுடன் டாய்லட் பேப்பர் பயன்படுத்தி சுத்தம் செய்வது கிருமிகளை வரவேற்க அனுமதிக்கும் ஒரு வழிமுறையாகும். அதனால் மலம் கழித்தபின் தண்ணீர் கொண்டு அந்த இடங்களை சுத்தம் செய்வது அவசியமாகும்.

|

மேற்கு ஆசிய கலாச்சாரத்தில் கழிவறையில் தண்ணீருக்கு மாற்றாக டாய்லட் பேப்பர் பயன்படுத்துவது ஒரு பழக்கம். கழிவறையில் தண்ணீர் பயன்படுத்துவதை விட டாய்லட் பேப்பர் பயன்படுத்துவது நல்லது என்று மேற்கத்திய மருத்துவர்கள் சிலர் கூறுகின்றனர்.

Using Toilet Paper Instead Of Water? Is It Beneficial?

ஆனால் மருத்துவர் இவன் கோல்டஸ்ட்டின், நியூயார்க் மாநகரத்தின் மலக்குடல் அறுவை சிகிச்சை மருத்துவர் கூறுவது என்னவென்றால், மலம் கழித்த பின்னர் டாய்லட் பேப்பர் பயன்படுத்தி சுத்தம் செய்வதால் தொற்று நோய்கள் ஏற்படலாம். தண்ணீர் பயன்படுத்தி மலத்தை சுத்தம் செய்வதால் பல்வேறு நோய்களில் இருந்து பாதுகாப்பு பெறலாம் என்று அவர் கூறுகிறார்.

MOST READ: சர்க்கரை நல்லதா அல்லது வெல்லம் நல்லதா? ஒரே குழப்பமா இருக்கா... அப்ப இத படிங்க...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
இது பற்றி ஆராய்ச்சியாளர்கள் என்ன கூறுகின்றனர்?

இது பற்றி ஆராய்ச்சியாளர்கள் என்ன கூறுகின்றனர்?

யூராலஜி துறையின் முதன்மை மருத்துவர் பிலிப் பாபிங்டன் கூறுவதாவது, மலம் கழித்தவுடன் டாய்லட் பேப்பர் பயன்படுத்தி சுத்தம் செய்வது கிருமிகளை வரவேற்க அனுமதிக்கும் ஒரு வழிமுறையாகும். அதனால் மலம் கழித்தபின் தண்ணீர் கொண்டு அந்த இடங்களை சுத்தம் செய்வது அவசியமாகும். இது தவிர, மலம் கழித்த பின் வெதுவெதுப்பான நீர் அல்லது வெந்நீர் கொண்டு அந்த பகுதிகளை சுத்தம் செய்வதால் மலக்குடல் தொடர்பான கோளாறுகள் மற்றும் அறுவை சிகிச்சைக்கு பின்னர் உண்டாகும் கோளாறுகள் தவிர்க்கப்படுகிறது.

கழிவறையில் தண்ணீர் பயன்படுத்துவதால் உண்டாகும் நன்மைகள்:

கழிவறையில் தண்ணீர் பயன்படுத்துவதால் உண்டாகும் நன்மைகள்:

தண்ணீர் பயன்படுத்துவதால் டாய்லெட் பேப்பர் பயன்பாடு குறைகிறது. ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்காவில் 26 பில்லியன் பேப்பர் ரோல்கள் பயன்படுத்தப்படுகின்றன. அதாவது ஒவ்வொரு நபரும் 23 ரோல் பேப்பர் பயன்படுத்துகின்றனர். இந்த டாய்லட் பேப்பர் தயாரிப்பிற்கு கிட்டத்தட்ட 10 மில்லியன் மரங்கள் வெட்டப்படுகின்றன. இது சுற்றுப்புறத்திற்கு பெரும் தீங்கை உண்டாக்கும் செயலாகும். மேலும் டாய்லட் பேப்பர் பயன்படுத்துவதால் மக்கள் பெருமளவு உடல் பாதிப்பிற்கு உள்ளாவதால் தண்ணீர் பயன்படுத்த பரிந்துரைக்கப்படுகிறது. மேலும் இதனால் பிரச்சனைகள் குறைகிறது. சுத்தம் பற்றி குறிப்பிடும் போது, டாய்லட் பேப்பர் பயன்படுத்தி சுத்தம் செய்வதை விட தண்ணீர் கொண்டு சுத்தம் செய்வது இன்னும் அதிக சுத்தத்தைத் தருகிறது. இது தவிர முதியவர்கள் மலத்தை சுத்தம் செய்ய தண்ணீர் பயன்படுத்துவதால் அதிக சுத்தத்துடன் இருக்கின்றனர் மற்றும் நோய்களில் இருந்து பாதுகாக்கப்படுகின்றனர். இதன் நன்மைகள் குறித்து இப்போது பார்க்கலாம்..

நன்மைகள்:

நன்மைகள்:

* சிறுநீர்ப்பை மற்றும் பிறப்புறுப்பில் உண்டாகும் தொற்று பாதிப்பிற்கான அபாயம் குறைகிறது.

* டாய்லட் பேப்பர் பயன்படுத்துவதால் பல நோய்கள் உண்டாகின்றன.

* வயது முதிர்வுடன் கூடிய உடலியல் சார்ந்த மாற்றங்களுடன் சிறப்பான சுகாதாரத்தை அனுபவிக்க தண்ணீர் ஒரு சிறந்த மாற்று.

* சிறுநீரகம் தொடர்பான நோய்கள் தடுக்கப்படுகிறது.

வயது முதிர்ந்தவர்களுக்கு எளிதானது மற்றும் நன்மை தருவது:

வயது முதிர்ந்தவர்களுக்கு எளிதானது மற்றும் நன்மை தருவது:

தண்ணீர் ஷவர் பயன்படுத்துவது வயது முதிர்ந்தவர்களுக்கு இன்னும் எளிமையானது. கைகள் மற்றும் கண் தொடர்பான பாதிப்புகள் மோசமான சுகாதார பழக்கங்களினால் உண்டாகிறது என்பது பலமுறை கண்டறியப்பட்ட உண்மையாகும். தண்ணீர் பயன்படுத்தி சுத்தம் செய்வதால் பல தொற்று பாதிப்புகள் குறைவதாகவும், வயதானவர்கள் தங்கள் சுதந்திரத்தை நிர்வகிக்க முடிவதாகவும் ஆராய்ச்சிகள் கூறுகின்றன. குடும்ப உறுப்பினர்கள் உதவி இல்லாமல் தங்கள் காலைக் கடன்களை அவர்கள் தானாக சமாளிக்க முடிகிறது என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றன.

கழிவறைகளை தண்ணீர் கொண்டு சுத்தம் செய்யுங்கள்:

கழிவறைகளை தண்ணீர் கொண்டு சுத்தம் செய்யுங்கள்:

தண்ணீர் கொண்டு மலத்தை சுத்தம் செய்வதால் வீட்டில் உள்ளவர்களின் ஒட்டுமொத்த சுகாதாரமும் பாதுகாக்கப்படுகிறது. டாய்லட் பேப்பருடன் ஒப்பிடும் போது , தண்ணீர் பயன்படுத்துவது வயதானவர்களுக்கு இன்னும் பல நன்மைகளைத் தருகிறது. அதனால் நமது தனிப்பட்ட வாழ்க்கையில் மலம் கழித்த பின் டாய்லட் பேப்பர் பயன்படுத்துவதை விட தண்ணீர் பயன்படுத்துவது குடல் இயக்கத்திற்கு நல்லது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Using Toilet Paper Instead Of Water? Is It Beneficial?

Using toilet paper instead of water? Is it beneficial? Read on...
Desktop Bottom Promotion