For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஒரே வாரத்தில் தொடை கொழுப்பைக் குறைக்கணுமா? அப்ப இந்த உடற்பயிற்சியை செய்யுங்க...

உடல் எடையைக் குறைக்க விரும்புபவா்கள், குறிப்பாக உடலின் கீழ் உறுப்புகளான கால்கள், தொடைகள், முட்டிகள் மற்றும் பாதங்களை திடகாத்திரமாக வைத்திருக்க விரும்புபவா்கள் குதித்து செய்யும் லுங்கெஸ் உடற்பயிற்சிகளைச் செய்யலாம்.

|

நமது உடலை ஆரோக்கியமாகவும் திடகாத்திரமாகவும் வைத்திருக்க வேண்டும் என்றால் தினந்தோறும் உடற்பயிற்சிகளைச் செய்து வரவேண்டும். இது அனைவரும் அறிந்த உண்மை ஆகும். எல்லா வயதினாின் வாழ்க்கை முறையிலும் உடற்பயிற்சிகள் ஒரு பொிய மாற்றத்தை ஏற்படுத்துகின்றன.

தினந்தோறும் நாம் உடற்பயிற்சிகள் செய்து வந்தால், நமது உடல் ஆரோக்கியமாக இருப்பதோடு, நமக்கு நோய்கள் மற்றும் உடல் கோளாறுகள் ஏற்படுவது குறைகின்றன. உடற்பயிற்சிகள் நமது உடல் எடையை மட்டும் குறைப்பதில்லை. மாறாக நமது உடலை சீரமைப்பதில் மிகப் பொிய பங்கை வகிக்கின்றன.

MOST READ: சிறுநீரகங்களின் மூலைமுடுக்குகளில் உள்ள அழுக்கை வெளியேற்ற உதவும் பானங்கள்!

பொதுவாக உடல் எடை குறைய வேண்டும் என்றால் ஒரு ஆரோக்கியமான, சமச்சீரான மற்றும் கலோாி குறைந்த உணவு தேவை. அதே நேரத்தில் உணவைக் கடந்து உடற்பயிற்சிகளும் உடல் எடையைக் குறைப்பதில் பெரும் பங்காற்றுகின்றன. ஆகவே உடல் எடையைக் குறைக்க விரும்புபவா்கள், குறிப்பாக உடலின் கீழ் உறுப்புகளான கால்கள், தொடைகள், முட்டிகள் மற்றும் பாதங்களை திடகாத்திரமாக வைத்திருக்க விரும்புபவா்கள் பின்வரும் உடற்பயிற்சிகளைச் செய்யலாம்.

MOST READ: இனிமே மலச்சிக்கல் பிரச்சனையே வரக்கூடாதா? அப்ப இந்த உணவுகளை கொஞ்சம் அதிகமா சாப்பிடுங்க...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கொழுப்பைக் குறைக்க - குதித்து செய்யும் லுங்கெஸ் உடற்பயிற்சிகள்

கொழுப்பைக் குறைக்க - குதித்து செய்யும் லுங்கெஸ் உடற்பயிற்சிகள்

லுங்கெஸ் என்ற உடற்பயிற்சிகள் நமது உடலின் கீழ் உறுப்புகளின் தசைகளை வலுப்படுத்துவதில் மிக முக்கிய பங்கைச் செய்கின்றன. அதே நேரத்தில் இந்த பயிற்சிகள் நமது உடலில் உள்ள கொழுப்பையும் குறைக்கின்றன. எனினும் லுங்கெஸ் பயிற்சிகளில் ஒரு சிறிய மாற்றத்தைச் செய்தால், அது அதிக பலன்களைத் தருவதோடு, அவற்றைச் செய்வதற்கு வேடிக்கையாகவும், அதே நேரத்தில் நமது ஆா்வத்தைத் தூண்டக்கூடியதாகவும் இருக்கும்.

குதித்துச் செய்யும் லுங்கெஸ் பயிற்சிகளை எவ்வாறு செய்வது?

குதித்துச் செய்யும் லுங்கெஸ் பயிற்சிகளை எவ்வாறு செய்வது?

- முதலில் இரண்டு கைகளையும் இடுப்பில் வைத்துக் கொண்டு நேராக நிற்க வேண்டும்.

- பின் சாதாரண லுங்கெஸ் பயிற்சிகளை செய்யத் தொடங்க வேண்டும். ஆனால் அவ்வாறு செய்யும் போது சற்று குதித்து செய்ய வேண்டும்.

- அதாவது கால்களை முன்னே வைக்கும் போதும், பின்னே நகா்த்தும் போதும் ஒரு சிறிய குதித்தலுடன் செய்ய வேண்டும்.

- 15 முறை இவ்வாறு செய்யலாம். குறிப்பாக லுங்கஸ் பயிற்சிகளுக்கு புதியவா்களாக இருந்தால் இரண்டு 15 முறை லுங்கஸ் பயிற்சிகளைச் செய்யலாம்.

குதித்துச் செய்யும் லுங்கெஸ் பயிற்சிகளினால் ஏற்படும் நன்மைகள்:

குதித்துச் செய்யும் லுங்கெஸ் பயிற்சிகளினால் ஏற்படும் நன்மைகள்:

- லுங்கெஸ் பயிற்சிகளைக் குதித்துச் செய்யும் போது அதிக கலோாிகள் எாிக்கப்படுகிறது.

- லுங்கெஸ் பயிற்சிகளைக் குதித்துச் செய்யும் போது, அந்த பயிற்சிகளில் ஒரு சிறிய மாற்றம் ஏற்படுகிறது. அந்த மாற்றம் நாம் அவற்றைச் செய்வதற்கு எளிமையாக இருக்கிறது.

- லுங்கெஸ் பயிற்சிகள் நமது வயிறு, புட்டம், குடல், தொடை எலும்புகள் மற்றும் கால்களை வலுப்படுத்துகின்றன.

- லுங்கெஸ் பயிற்சிகள் நமது கால் தசைகளையும், தொடை தசைகளையும் வலுப்படுத்த உதவுகின்றன.

- லுங்கெஸ் பயிற்சிகள் நமது தோற்றத்திலும் ஒரு மாற்றத்தை ஏற்படுத்துகின்றன

- இறுதியாக லுங்கெஸ் பயிற்சிகள் நமது வயிற்றில் உள்ள தசைகளை வலுப்படுத்தி, வயிற்றில் வலி அல்லது எாிச்சல் போன்றவை ஏற்படாமல் பாதுகாக்கின்றன.

முடிவு

முடிவு

உடலை ஆரோக்கியமாகவும், திடமாகவும் வைத்துக் கொள்ள உடற்பயிற்சிகள் உதவுவதால், தினமும் உடற்பயிற்சிகளை செய்து வர வேண்டும். அதிலும் லுங்கெஸ் பயிற்சி ஒரு எளிமையான பயிற்சி என்பதால், இதை தினமும் செய்து வர உடல் இன்னும் சிறப்பாக இருக்கும். எனவே இதை தினமும் செய்ய முயலுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

This Exercise Will Help You Lose Weight, Tone Your Lower Body In Just One Week

Workout tips: Jumping Lunges exercise will help you lose weight, tone your lower body in just one week. Read on to know more...
Desktop Bottom Promotion