For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கல்லீரலை பாதிக்கும் நச்சுக்களை வெளியேற்ற அடிக்கடி இந்த ஜூஸ் குடிங்க...

உடலில் உள்ள நச்சுக்களை நீக்க உதவும் பானம் சக்தி வாய்ந்த ஊட்டச்சத்துக்கள் நிறைந்த மஞ்சள், இஞ்சி, கேரட், ஆரஞ்சு கொண்டு தயாரிக்கப்படுவதாகும். இது உடலில் உள்ள தீங்கு விளைவிக்கும் நச்சுக்களை நீக்கும்.

|

உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த நாம் சாப்பிடும் பல உணவுகளால் உடலில் நச்சுக்கள் சேரும். இப்படி உடலில் சேரும் நச்சுக்களின் அளவு அதிகமானால், முதலில் கல்லீரல் தான் பாதிக்கப்படும். அதிலும் ஒருவர் அதிகமாக ஜங்க் உணவுகளை உட்கொண்டால், உடலில் நச்சுக்கள் மிக அதிகமாக சேரும். ஒருவரது கல்லீரல் பாதிக்கப்பட ஆரம்பித்தால், உடலின் இதர உறுப்புக்களும் பாதிப்பிற்குள்ளாகும்.

This 4-Ingredient Healthy Juice May Help You Detox

எனவே நீங்கள் அடிக்கடி ஜங்க் உணவுகளை உண்பவராயின், உடல் ஆரோக்கியமாக நோய் தாக்குதலின்றி இருக்க வேண்டுமானால், உடலை அவ்வப்போது சுத்தம் செய்ய வேண்டும். அதற்கு அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஆரோக்கியமான உணவுகளை உண்ண வேண்டும். உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உணவுப் பொருட்கள் மட்டுமின்றி, சில வகை ஜூஸ்களும் உதவி புரியும்.

MOST READ: 10 பயங்கரமான உணவு வகைகள்.. சாப்ட்டீங்க.. செத்துருவீங்க!

ஆனால் அந்த ஜூஸ்களில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் அதிகம் நிறைந்ததாக இருக்க வேண்டும். இந்த கட்டுரையில் உடலை சுத்தம் செய்ய உதவும் ஒரு பானம் குறித்து கொடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நச்சுக்களை நீக்கும் அற்புத பானம்

நச்சுக்களை நீக்கும் அற்புத பானம்

உடலில் உள்ள நச்சுக்களை நீக்க உதவும் இந்த பானம் சக்தி வாய்ந்த ஊட்டச்சத்துக்கள் நிறைந்த மஞ்சள், இஞ்சி, கேரட், ஆரஞ்சு போன்றவை கொண்டு தயாரிக்கப்படுவதாகும். இந்த பானம் உடலில் உள்ள தீங்கு விளைவிக்கும் நச்சுக்களை வெளியேற்ற உதவுவதோடு, அதிகப்படியான உடல் எடையைக் குறைக்கவும் உதவும்.

அடிக்கடி உடலை சுத்தம் செய்வதால் கிடைக்கும் நன்மைகள்

அடிக்கடி உடலை சுத்தம் செய்வதால் கிடைக்கும் நன்மைகள்

* செரிமானம் மேம்படும்

* நோயெதிர்ப்பு மண்டலம் வலுபெறும்

* நல்ல தூக்கம் கிடைக்கும்

* தலைமுடி ஆரோக்கியமாகும்

* உடலில் ஆற்றல் மேம்படும்

* உடல் எடை குறையும்

தேவையான பொருட்கள்:

தேவையான பொருட்கள்:

* கேரட் - 3 (சிறியது)

* நற்பதமான மஞ்சள் - 2-3 செ.மீ

* ஆரஞ்சு - 2

* இஞ்சி - 1 செ.மீ

* எலுமிச்சை சாறு - சுவைக்கேற்ப

கேரட்

கேரட்

கேரட்டில் பீட்டா-கரோட்டீன் என்னும் வைட்டமின் ஏ அதிகம் உள்ளது. மேலும் இதில் நார்ச்சத்து ஏராளமாக உள்ளதால், செரிமானத்திற்கும், உடல் எடையைக் குறைக்கவும் உறுதுணையாக இருக்கும். நார்ச்சத்து நீண்ட நேரம் பசி எடுக்காமல் தடுக்கும் மற்றும் அடிக்கடி பசியுணர்வைத் தடுக்கும். அதுமட்டுமின்றி கேரட் உயர் கொலஸ்ட்ராலை எதிர்க்கும். மேலும் கேரட் கால்சியத்தின் ஒரு வடிவத்தைக் கொண்டுள்ளதால், இது உடலால் எளிதில் ஒருங்கிணைக்கப்படுகிறது மற்றும் இது கெட்ட கொழுப்பின் அளவைக் குறைக்க உதவும்.

ஆரஞ்சு

ஆரஞ்சு

ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. இது சருமத்திற்கு பொலிவான தோற்றத்தைக் கொடுக்க உதவும். ஆரஞ்சு செரிமானத்திற்கு நல்லது மற்றும் இதில் அல்கலைசிங் பண்புகள் மற்றும் இரத்தத்தை சுத்தப்படுத்தும் பண்புகள் ஏராளமாக நிறைந்துள்ளது.

இஞ்சி

இஞ்சி

இஞ்சி செரிமானத்தை மேம்படுத்த உதவும் சிறப்பான பொருள். இது வயிற்று உப்புசம், வயிற்று பிடிப்புகளைப் போக்கும் மற்றும் செரிமான திரவத்தின் ஓட்டத்திற்கு உதவும். இதில் உள்ள உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள், சளி, காய்ச்சல் அறிகுறிகளைப் போக்கும் மற்றும் நோயெதிர்ப்பு சக்தியை வலிமையாக்கும்.

மஞ்சள்

மஞ்சள்

மஞ்சளில் ஆன்டி-பாக்டீரியல், ஆன்டி-வைரல் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்கள் அதிகம் உள்ளது. மேலும் இதில் குர்குமின் என்னும் பொருள் உள்ளதால், இது ஆர்த்ரிடிஸ், சர்க்கரை நோய், இதய நோய், குடல் நோய்கள் போன்றவற்றை குணப்படுத்தும்.

செய்முறை:

செய்முறை:

* கேரட்டில் இருந்து தனியாக ஜூஸ் தயாரித்துக் கொள்ள வேண்டும்.

* பின் ஆரஞ்சு பழத்தில் இருந்து ஜூஸை தனியாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

* பின்பு இந்த இரண்டு ஜூஸ்களையும் பிளெண்டரில் ஊற்றி, அத்துடன் இஞ்சி மற்றும் மஞ்சளை சேர்த்து நன்கு அரைத்து வடிகட்டிக் கொள்ள வேண்டும்.

* இறுதியில் வேண்டுமானால் சுவைக்கு சிறிது எலுமிச்சை சாற்றினை கலந்து கொள்ளலாம்.

* இப்போது உடலில் உள்ள நச்சுக்களை நீக்கும் அற்புத பானம் தயார் இந்த பானத்தை ஒருவர் அடிக்கடி குடிக்க, உடல் சுத்தமாக இருக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

This 4-Ingredient Healthy Juice May Help You Detox

One of the easiest ways to incorporate all the major nutrients in diet is by drinking juice of fruits and vegetables.
Story first published: Saturday, November 2, 2019, 13:43 [IST]
Desktop Bottom Promotion