For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

1 வாரம் நீங்கள் சர்க்கரை எடுத்துக்கொள்வதை நிறுத்தினால் உங்கள் உடலில் என்னென்ன மாற்றங்கள் நடக்கும் தெரியுமா?

சுத்திகரிக்கப்பட்ட வெள்ளை சர்க்கரை நம் உடலுக்கு மிகவும் தீங்கு விளைவிக்கும் உணவுப் பொருட்களில் ஒன்றாகும் என்று நாம் அனைவருமே அறிவோம்.

|

சுத்திகரிக்கப்பட்ட வெள்ளை சர்க்கரை நம் உடலுக்கு மிகவும் தீங்கு விளைவிக்கும் உணவுப் பொருட்களில் ஒன்றாகும் என்று நாம் அனைவருமே அறிவோம். குளிர்பானங்கள், காபி, தேநீர், ஐஸ்கிரீம்கள், பிஸ்கட்கள், சாக்லேட்கள் மற்றும் பல வகைகளில் சர்க்கரையை நாம் பல்வேறு வடிவங்களில் உட்கொள்கிறோம்.

Things That Happen When You Stop Eating Sugar for 7 Days

சர்க்கரை வெற்று கலோரிகளால் நிரம்பியுள்ளது மட்டுமல்லாமல் முகப்பரு, தாமதமான செரிமானம், இரத்த சர்க்கரை, வீக்கம் மற்றும் இரத்த அழுத்தம் ஆகியவற்றை ஏற்படுத்துகிறது. ஆனால் உங்கள் உணவில் இருந்து சர்க்கரையை முற்றிலுமாக நீக்கினால் என்ன நடக்கும்? ஒரு வாரம் முழுவதும் வெள்ளை சர்க்கரையை உட்கொள்வதை நிறுத்தினால் உங்கள் உடலில் ஏற்படும் மாற்றங்கள் என்னென்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
இரத்த சர்க்கரை கட்டுப்பாட்டை ஊக்குவிக்கிறது

இரத்த சர்க்கரை கட்டுப்பாட்டை ஊக்குவிக்கிறது

சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரைகள் இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கச் செய்யலாம், இது நீரிழிவு நோயாளிகளுக்கு குறிப்பாக தீங்கு விளைவிக்கும். உணவில் இருந்து சர்க்கரையை குறைப்பது இரத்த சர்க்கரை கட்டுப்பாட்டை கணிசமாக மேம்படுத்தும். சர்க்கரைக்குப் பதிலாக, ஸ்டீவியா போன்ற ஆரோக்கியமான இனிப்புகளைத் தேர்ந்தெடுப்பது உங்கள் உணவு அல்லது பானங்களை இனிமையாக்கவும் மற்றும் குளுக்கோஸ் ஸ்பைக்குகளைத் தடுக்கவும் உதவும்.

செரிமானத்தை ஊக்குவிக்கிறது

செரிமானத்தை ஊக்குவிக்கிறது

பலவீனமான குடல் உள்ளவர்களுக்கு, சேர்க்கப்பட்ட சர்க்கரைகளை உட்கொள்வது வீக்கம், வாயு மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற செரிமான பிரச்சனைகளுக்கு பங்களிக்கும். செரிமானத்தை எளிதாகவும் வேகமாகவும் செய்ய, ஒரு வாரத்திற்கு சர்க்கரையை நிறுத்தி விட்டு, மாற்றத்தை நீங்களே கவனித்துப் பாருங்கள்.

வீக்கத்தைக் குறைக்கிறது

வீக்கத்தைக் குறைக்கிறது

உட்புற வீக்கமானது சோர்வு, தசை வலி மற்றும் உங்களை அடிக்கடி நோய்வாய்ப்படுத்தும். சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரையை உட்கொள்வது உடலில் வீக்கத்தை அதிகரிப்பதுடன் தொடர்புடையது, இது அனைத்து உடல்நலப் பிரச்சினைகளுக்கும் வழிவகுக்கும். சர்க்கரையை நிறுத்துவது, சர்க்கரை உட்கொள்ளலை நிறுத்திய ஒரு வாரத்திற்குள் உள் வீக்கத்தைக் குறைக்கத் தொடங்கும்.

நல்ல தூக்கம்

நல்ல தூக்கம்

உணவில் இருந்து சர்க்கரையை நீக்குவதன் மற்றொரு நன்மை சிறந்த தூக்கம். குளிர் பானங்கள், டீ அல்லது காபி போன்ற சர்க்கரை நிறைந்த பானங்களை, குறிப்பாக தூங்கும் போது உட்கொள்ளும் பழக்கம் உங்களுக்கு இருந்தால், உங்கள் தூக்கம் தடைபடுவதற்கான வாய்ப்புகள் அதிகம். அதனால்தான் சர்க்கரையை கைவிடுவது தூக்க முறைகளை மேம்படுத்தும்.

எடைக்குறைப்பு

எடைக்குறைப்பு

நீங்கள் உடல் எடையை குறைக்க விரும்பினால், முதலில் செய்ய வேண்டியது உங்கள் உணவில் இருந்து சர்க்கரையை குறைக்க வேண்டும். சர்க்கரையில் வெற்று கலோரிகள் அதிகமாக உள்ளன, அவை திடீர் எடை அதிகரிப்புக்கு காரணமாகின்றன. வெள்ளை சர்க்கரை மட்டுமல்ல, குளிர் பானங்கள், சாக்லேட்கள், கேக்குகள், பிஸ்கட்கள் மற்றும் ஐஸ்கிரீம்கள் போன்ற சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை உள்ள உணவுகளையும் நீங்கள் நிறுத்த வேண்டும்.

ஆற்றல் அளவு அதிகரிக்கும்

ஆற்றல் அளவு அதிகரிக்கும்

கடந்த சில நாட்களாக நீங்கள் மிகவும் சோர்வாகவும் சோம்பலாகவும் உணர்ந்தால், உங்கள் சர்க்கரை அளவைச் சரிபார்க்க வேண்டும். சர்க்கரையை உட்கொள்வது உடனடி சர்க்கரை வேகத்தை கொடுக்கலாம், ஆனால் பின்னர் உங்கள் ஆற்றலை இரண்டு மடங்கு வேகத்தில் குறைக்கும். ஆரோக்கியமான சர்க்கரை மாற்றுகளுக்கு மாறுவது ஆற்றல் மட்டங்களை உறுதிப்படுத்தும் மற்றும் நாள் முழுவதும் உங்களை உற்சாகமாக வைத்திருக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Things That Happen When You Stop Eating Sugar for 7 Days

Read to know what happens to your body when you quit sugar for 1 week.
Desktop Bottom Promotion