For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இத காலையில சாப்பிட்டா, உடம்பில் உள்ள நச்சுக்கள் நீங்குவதோடு, உடல் எடையும் குறையும் தெரியுமா?

தினமும் காலை உணவைத் தவறாமல் உண்பதோடு, இதுவரை உங்களது காலை உணவாக இருந்த சில ஆரோக்கியமற்ற உணவுகளைத் தவிர்த்து, ஆரோக்கியமான உணவுகளுக்கு மாறினால், உங்கள் வாழ்க்கை முறையிலும் ஒரு நல்ல மாற்றத்தைக் காணலாம்.

|

ஒரு தினத்தை எடுத்துக் கொண்டால், அதில் காலை உணவு மிகவும் முக்கியமாகும். ஆரோக்கியமான காலை உணவை ஒருவர் உட்கொண்டால், நாள் முழுவதும் உடலின் செயல்பாடுகளுக்கு வேண்டிய ஆற்றல் கிடைக்கும். அதற்கு சரியான காலை உணவைத் தேர்ந்தெடுத்து உட்கொள்ள வேண்டியது அவசியம்.

இன்றைய அவசர உலகில் பலர் காலை உணவைத் தவிர்க்கின்றனர். இப்படி காலை உணவைத் தவிர்ப்பதால், அலுவலகத்தில் செய்யும் வேலையில் முழுமையாக கவனத்தை செலுத்த முடியாமல், மிகுந்த பசியினால் உடலில் ஆற்றல் இல்லாமல் வேலையையும் செய்ய முடியாமல், ஒருவித மன அழுத்தத்திற்கு உள்ளாகின்றனர். இப்படி தினமும் இருக்கும் போது, அதன் விளைவாக பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளாலும் அவஸ்தைப்படுகின்றனர்.

The Healthiest Breakfast: Clean Your Body From Toxins And Lose Weight In No Time

இதைத் தவிர்க்க வேண்டுமானால், தினமும் காலை உணவைத் தவறாமல் உண்பதோடு, இதுவரை உங்களது காலை உணவாக இருந்த சில ஆரோக்கியமற்ற உணவுகளைத் தவிர்த்து, ஆரோக்கியமான உணவுகளுக்கு மாறினால், உங்கள் வாழ்க்கை முறையிலும் ஒரு நல்ல மாற்றத்தைக் காணலாம். உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்க வேண்டுமானால், மாற்றத்தை உடனே ஆரம்பியுங்கள்.

MOST READ: நீங்க ஃபிட்டா இருக்க ஆசைப்படுறீங்களா? அப்ப தினமும் காலையில இத குடிங்க...

எனவே தமிழ் போல்ட் ஸ்கை சிறப்பான மற்றும் ஆரோக்கியமான ஒரு காலை உணவை உங்களுக்காக கொடுத்துள்ளது. அந்த உணவைத் தேர்ந்தெடுத்து உட்கொண்டால், உங்கள் உடலில் ஒரு நல்ல மாற்றத்தைக் காண வாய்ப்புள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஆளி விதை

ஆளி விதை

ஆளி விதையில் புரோட்டீன்கள் அதிகம் உள்ளது. இந்த ஆளி விதையை தினமும் ஒரு டீஸ்பூன் சாப்பிட்டால், அதுவும் நார்ச்சத்துள்ள உணவுகளுடன் சேர்த்து உட்கொண்டால், இதில் உள்ள புரோட்டீன் பசியை நீண்ட நேரம் கட்டுப்படுத்தும். இதன் விளைவாக அளவுக்கு அதிகமாக சாப்பிடுவது தடுக்கப்பட்டு, உடல் எடையைக் குறைக்க உதவும். மேலும் ஆளி விதையில் ஸ்டார்ச் மற்றும் சர்க்கரை குறைவு மற்றும் கலோரிகள் அதிகம் இல்லை.

ப்ளம்ஸ்

ப்ளம்ஸ்

ப்ளம்ஸ் மிகவும் சுவையான மற்றும் ஆரோக்கியமான பழங்களுள் ஒன்று. இதில் கலோரிகள் குறைவு மற்றும் ஊட்டச்சத்துக்கள் அதிகம். குறிப்பாக இதில் நார்ச்சத்து மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் ஏராளமாக இருப்பதால், இது பல்வேறு நாள்பட்ட நோய்களின் அபாயத்தைக் குறைக்க உதவும். அதோடு இப்பழம் க்ளைசீமிக் இன்டெக்ஸ் குறைவாக உள்ள பழங்களுள் ஒன்றாக கருதப்படுகிறது. இந்த பழத்தை ஒருவர் அளவாக உட்கொண்டால், உடல் எடையைக் குறைக்க உதவி புரியும்.

ஓட்ஸ்

ஓட்ஸ்

உடல் எடையைக் குறைக்க நினைப்போருக்கு சிறந்த உணவுப் பொருளாக ஓட்ஸ் கருதப்படுகிறது. இதற்கு காரணம், இதில் கலோரிகள், கொழுப்பு போன்றவை மிகவும் குறைவு. மேலும் மற்ற உணவுகளுடன் ஒப்பிடுகையில், ஓட்ஸ் நீண்ட நேரம் பசி எடுக்காமல் தடுக்கும். ஓட்ஸில் உள்ள அதிகப்படியான நார்ச்சத்து, செரிமான பிரச்சனைகள் ஏதும் வராமல் தடுக்கும்.

கொழுப்பு குறைவான யோகர்ட்

கொழுப்பு குறைவான யோகர்ட்

உடல் பருமனைக் கொண்டவர்கள் தங்களது கலோரி குறைவான டயட்டில் மூன்று வேளை கொழுப்பு இல்லாத யோகர்ட்டை தவறாமல் சேர்த்துக் கொண்டதில் 22% எடை இழப்பும் மற்றும் 61% உடல் கொழுப்பும் குறைந்திருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர். மேலும் யோகர்ட் சாப்பிடாதவர்களை விட, யோகர்ட்டை சாப்பிடுபவர்களின் வயிற்றுப் பகுதியில் 81% கொழுப்பு குறைந்திருப்பதாகவும் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

கொக்கோ

கொக்கோ

உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள், கொக்கொ பவுடரை உணவில் சேர்ப்பதன் மூலம் கொழுப்பு வளர்சிதை மாற்றம் மேம்படுவதோடு, உடலின் ஆற்றல் அதிகரித்து, உடல் எடையை குறைக்கலாம் என்று கூறப்படுகிறது. எனவே விரைவான எடை இழப்புக்கு இதை உட்கொள்ளலாம்.

இந்த காலை உணவை உண்பதால் பெறும் நன்மைகள்:

இந்த காலை உணவை உண்பதால் பெறும் நன்மைகள்:

* நோயெதிர்ப்பு மண்டலம் வலுபெறும்

* காலை உணவு உடல் எடையைக் குறைக்க உதவும்.

* தொற்றுக்கள் மற்றும் வைரஸ் தாக்குதலை எதிர்த்துப் போராடும் திறன் மேம்படும்.

* தலைமுடியின் ஆரோக்கியம் மேம்படும்

தேவையான பொருட்கள்:

தேவையான பொருட்கள்:

* கொக்கோ பவுடர் - 1 டீஸ்பூன்

* ஆளி விதை பவுடர் - 1 டீஸ்பூன்

* நற்பதமான ப்ளம்ஸ் - 5-7

* ஓட்ஸ் - 2 டேபிள் ஸ்பூன்

* கொழுப்பு குறைவான யோகர்ட் - 1 கப் (250 மிலி)

செய்முறை:

செய்முறை:

* ஒரு பௌலில் ப்ளம்ஸ் மற்றும் 100 மிலி நன்கு கொதிக்க வைத்த நீரை ஊற்றி, 10 நிமிடம் மூடி வைக்க வேண்டும்.

* அதே சமயம் மற்றொரு பௌலில் ஓட்ஸ், ஆளி விதை பவுடர் மற்றும் கொக்கோ சேர்த்து, அத்துடன் கொழுப்பு குறைவான யோகர்ட் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

* பின்பு அதில் ஊற வைத்துள்ள ப்ளம்ஸை பொடியாக நறுக்கி சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

* இறுதியில் அந்த கலவை பௌலை ஃப்ரிட்ஜில் வைக்கவும். மறு நாள் காலையில் இந்த கலவையை காலை உணவாக உண்ணவும்.

குறிப்பு

குறிப்பு

மேலே கொடுக்கப்பட்டுள்ள காலை உணவை முந்தைய நாள் மாலை வேளையிலேயே தயாரித்து சாப்பிட பரிந்துரைக்கப்படுகிறது. மேலும் இந்த காலை உணவால் சிறப்பான பலன் கிடைக்க வேண்டுமானால், தினமும் காலையில் இதை சாப்பிட வேண்டும். ஆரம்பத்தில் இதன் சுவை வித்தியாசமாக சாப்பிட பிடிக்காதவாறு தான் இருக்கும். ஆனால் போக போக இதன் சுவை பழகிவிடும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

The Healthiest Breakfast: Clean Your Body From Toxins And Lose Weight In No Time

Do you know this healthy breakfast clean your body from toxins and lose weight in no time? Read on to know more...
Desktop Bottom Promotion