For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பதட்டம் & மன அழுத்தத்தை குறைத்து... அப்பாடா என உங்களுக்கு நிம்மதி தரும் டீ-க்கள் என்னென்ன தெரியுமா?

|

பல்வேறு காரணங்களால் நமக்கு மன உளைச்சல் மற்றும் மன அழுத்தம் ஏற்படலாம். அதிலிருந்து வெளியே வர நாம் பல முயற்சிகளை செய்யலாம். பொதுவாக தியானம் மேற்கொள்வது மன அழுத்தத்திலிருந்து நம்மை விடுவிக்கும். ஆனால், சில தேநீர் அருந்தினாலும், உங்கள் மன அழுத்தம் குறையும் என்பது உங்களுக்கு தெரியுமா? ஆம். பல நூற்றாண்டுகளாக, தேநீர் மிகவும் பயனுள்ள மன அழுத்தத்தை குறைக்கும் ஒரு பானமாக கருதப்படுகிறது. வீடு மற்றும் அலுவலகத்தில் ஏதாவது பிரச்சனை என்றால், உடனே ஒரு டீ சாப்பிடுவது, அந்த பிரச்சனையிலிருந்து உங்களை சற்று விடுவிக்கும்.

உங்களின் மன அழுத்தத்தை குறைக்கும் பண்புகள் அந்த தேநீரில் உள்ளன. குறிப்பாக தினமும் காலையிலும் மாலையிலும் ஒரு கப் மூலிகை தேநீர் பருகுவது அனைவருக்கும் நிம்மதியை அளிக்கும். குறிப்பாக கவலை மற்றும் மன அழுத்தத்தால் பாதிக்கப்படுபவர்களுக்கு இது நல்ல பலன்களை தருகிறது. அன்றாட மன அழுத்தத்தை நிர்வகிக்க உதவும் சில டீகள் பற்றி இக்கட்டுரையில் காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அஸ்வகந்தா தேநீர்

அஸ்வகந்தா தேநீர்

அஸ்வகந்தா பல நூற்றாண்டுகளாக பாரம்பரிய மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது. இந்த மூலிகை ஒரு அடாப்டோஜென் ஆகும். இது உடல் மன அழுத்தத்திற்கு ஏற்ப உதவும் ஒரு இயற்கையான பொருளாகும். காதா அல்லது தேநீர் வடிவில் அவற்றை எளிதாக உட்கொள்ளலாம். அஸ்வகந்தா உடலில் உள்ள ஹார்மோன்களை சமநிலைப்படுத்துகிறது. ஏனெனில் ஹார்மோன் சமநிலையின்மை அடிக்கடி மனநிலையில் ஏற்ற இறக்கம், எடை அதிகரிப்பு மற்றும் மன அழுத்தத்திற்கு வழிவகுக்கிறது. அஸ்வகந்தா மனச்சோர்வு, பதட்டம் மற்றும் அறிவாற்றல் செயல்பாட்டை மேம்படுத்துவதற்கான மன அழுத்தத்தை குறைக்கும் பண்புகளைக் கொண்டுள்ளது.

இலவங்கப்பட்டை பிளாக் டீ

இலவங்கப்பட்டை பிளாக் டீ

இலவங்கப்பட்டையின் ஆசுவாசப்படுத்தும் நறுமணம் உங்கள் உடலை ரிலாக்ஸ் செய்து, மன அழுத்தத்தை குறைக்கும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. உங்கள் சூடான கப் தேநீரில் இலவங்கப்பட்டையைச் சேர்ப்பது தேநீரின் சுவையை அதிகரிப்பது மட்டுமல்லாமல், மன அழுத்தத்தைப் போக்குவது உட்பட பல ஆரோக்கிய நன்மைகளையும் உங்களுக்கு வழங்கும். இதயத் தடுப்பு, உடல் பருமன் மற்றும் உயர் இரத்த அழுத்தம் உள்ளிட்ட பல உடல்நலப் பிரச்சினைகளுக்கு மன அழுத்தம் முக்கிய காரணங்களில் ஒன்றாகும். இலவங்கப்பட்டையில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மன அழுத்தத்தைப் போக்கும்.

கிரீன் டீ

கிரீன் டீ

கிரீன் டீயின் ஆரோக்கிய நன்மைகள் உலகிற்கு இரகசியமல்ல. வளர்சிதை மாற்றம், எடை இழப்பு மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துதல் போன்ற ஆரோக்கிய நன்மைகளை நமக்கு வழங்குகின்றன. தேயிலை செடியில் காணப்படும் தியானைன் என்ற அமினோ அமிலம், பதட்டத்திற்கு சிகிச்சையளிக்க அடிக்கடி பயன்படுத்தப்படுகிறது. இது மன அழுத்தத்தை போக்க உதவுகிறது. ஜப்பானில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் கூட, கிரீன் டீயை உட்கொள்ளும் மாணவர்கள் குறைந்த அளவிலான மன அழுத்தத்தை அனுபவிப்பதாகக் கண்டறிந்துள்ளனர்.

துளசி தேநீர்

துளசி தேநீர்

துளசியின் வழக்கமான நுகர்வு உடலின் செல்கள் மற்றும் உறுப்புகளை நச்சுத்தன்மையாக்க உதவுகிறது. துளசி மனதை அமைதிப்படுத்தவும் மன அழுத்தத்தை போக்கவும் உதவுகிறது. அதுமட்டுமின்றி, இது மன அழுத்த எதிர்ப்பு செயல்பாடு மற்றும் நினைவாற்றல் மற்றும் அறிவாற்றல் செயல்பாட்டில் நேர்மறையான விளைவுகள் உட்பட பல உளவியல் நன்மைகளை வழங்குகிறது. துளசியால் நமக்கு எந்த பக்க விளைவுகளும் ஏற்படுவதில்லை. பொதுவாக பெரும்பாலான மக்களுக்கு இது பாதுகாப்பானது.

லாவெண்டர்

லாவெண்டர்

நம்மில் பலருக்கு, லாவெண்டர் கவலை, தலைவலி மற்றும் மன அழுத்தத்தைத் தணிக்கும் வாசனையாக இருக்கிறது. இது ஒரு அமைதியான விளைவைக் கொண்டுள்ளது. லாவெண்டர் செடியின் உலர்ந்த மொட்டுகளில் இருந்து தயாரிக்கப்படும் லாவெண்டர் தேநீர், தசைகளை அமைதிப்படுத்துகிறது மற்றும் நரம்புகளை தளர்த்துகிறது. மேலும், இது மன அழுத்தத்தை குறைக்கிறது மற்றும் தசை வலியை குறைக்கிறது.

இறுதிகுறிப்பு

இறுதிகுறிப்பு

மேலே குறிப்பிடப்பட்ட மூலிகைகள் பல ஆண்டுகளாக ஆராய்ச்சிக்கு உட்படுத்தபடுகின்றன மற்றும் மிதமான அளவில் உட்கொள்ளும் போது பாதிப்பில்லாதவை. இருப்பினும், நீங்கள் சில வகையான மருந்துகளை உட்கொண்டால் அல்லது சில உணவுப் பொருட்களுக்கு ஒவ்வாமை இருந்தால், மேற்கண்ட மூலிகைகளை உட்கொள்ளும் முன் உங்கள் மருத்துவரை அணுக வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

teas that can aid in calming down anxiety in tamil

Here we are talking about the teas that can aid in calming down anxiety in tamil.
Story first published: Tuesday, November 16, 2021, 16:38 [IST]
Desktop Bottom Promotion