For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

காபியில மட்டும் தான் காப்ஃபைன் இருக்குனு நீங்க நினைச்சுட்டு இருக்கீங்களா! இத படிச்சா ஷாக் ஆவீங்க...

காபியில் உள்ள காப்ஃபைன் என்ற பொருள்தான் ஒருவரை அதற்கு அடிமையாக்குவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இந்த காப்ஃபைன் காபியில் மட்டுமின்றி நாம் தினசரி பயன்படுத்தும் வேறு பல பொருட்களிலும் உள்ளது.

|

நம்மில் பெரும்பாலானோர் விரும்பி குடிக்கும் பானமாக காபி இருக்கிறது. இரவு நீண்ட நேரம் பணி செய்வதாக இருந்தாலும் சரி, காலையில் சீக்கிரம் எழுந்து ஏதேனும் உடற்பயற்சி செய்வதாக இருந்தாலும் சரி, ஒரு குவளை காபி குடித்து விட்டுத் தான் நம்மில் சிலர் அடுத்த வேலையை கவனிப்போம். நமக்கு புத்துணர்வு கொடுப்பதற்கும், சுறுசுறுப்பாகவும் விழிப்புணர்வுடன் வேலை செய்ய வைப்பதற்கும் ஒரு குவளை காபி போதுமானதாகும்.

Surprising Foods That Contain Caffeine

அறிஞர்களின் கருத்துப்படி ஒரு சராசரி வயது வந்தோர் தினசரி 400 மில்லி லிட்டர் காபி அருந்தலாம். காபியை இந்த அளவில் குடிப்பது பெரிய பிரச்சனை இல்லை. ஆனால் அதற்கு அடிமையாவது பெரிய சிக்கல்களை தரவல்லது. அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பது போல, வரம்பு மீறி நீங்கள் குடிக்கும் காபியால், உங்களுக்கு நீர்ச்சத்து குறைபாடு, மன அழுத்தம் போன்ற எதிர்மறையான விளைவுகள் உங்கள் உடலில் ஏற்படும்.

MOST READ: உடம்புல இருக்குற அதிகமான கொழுப்பு வேகமா குறையணுமா? அப்ப பூண்டை இப்படி சாப்பிடுங்க...

காபியில் உள்ள காப்ஃபைன் என்ற பொருள்தான் ஒருவரை அதற்கு அடிமையாக்குவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இந்த காப்ஃபைன் காபியில் மட்டுமின்றி நாம் தினசரி பயன்படுத்தும் வேறு பல பொருட்களிலும் கணிசமான அளவில் இருக்கிறது. இந்த வகையான பொருட்களை திடீரென்று கைவிடும் பொழுது உங்களுக்கு சில சிரமங்கள் கூட ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த கட்டுரையில் அவ்வாறான 5 பொருட்களைப் பற்றி காணவிருக்கிறோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வலி நிவாரண மாத்திரைகள்

வலி நிவாரண மாத்திரைகள்

நமக்கு ஏதேனும் உடல் வலியோ, தலை வலியோ அல்லது மூட்டு வலியோ, உடனே சில வலி நிவாரணி மாத்திரைகளை எடுத்துக் கொள்வோம். இதனால் வலியில் இருந்து நமக்கு ஒருவித ஆறுதல் கிடைக்கும். அனால் இவ்வாறு எடுத்து கொள்ளும் வலி நிவாரண மாத்திரைகளில் காப்ஃபைன் சிறிய அளவில் இருக்கிறது. ஆய்வுகளின் படி, சிறிய அளவில் காஃப்பைனை எடுத்துக் கொள்ளும் பொழுது அது வலியை கட்டுப்படுத்துவதாக இருப்பதால், மருந்து நிறுவனங்கள், வலி நிவாரண மாத்திரைகள் தயாரிப்பில் காஃப்பைனையும் ஒரு மூல பொருளாக பயன்படுத்துகிறார்கள்.

சாக்லேட் சாப்பிடுபவரா நீங்கள்?

சாக்லேட் சாப்பிடுபவரா நீங்கள்?

கொக்கோ பீன்ஸில் காப்ஃபைன் என்ற பொருள் இயற்கையாகவே காணக் கிடைக்கிறது. இந்த பொருள் தான் சாக்லேட் தயாரிப்பின் முக்கியமான மூலப்பொருள். எனவே, நீங்கள் சாக்லேட்டை விரும்பி சாப்பிடுபவராக இருந்தால், நீங்கள் காப்ஃபைன் உற்சாகமூட்டியயையும் எடுத்துக் கொள்கிறீர்கள் என்று அர்த்தம். பால் சாக்லேட்களில் குறைவான அளவே காப்ஃபைன் உள்ளது, அதே சமயம், டார்க் சாக்லேட்களில் 10 மில்லி கிராமிற்கு அதிகமாக காப்ஃபைன் இருக்கிறது. அதுமட்டுமல்ல, சாக்லேட் ஐஸ் கிரீம்களில் கூட காப்ஃபைன் இருக்கிறது.

வாய் நாற்றத்தை போக்க சூயிங் கம் சாப்பிடுவாரா நீங்கள்?

வாய் நாற்றத்தை போக்க சூயிங் கம் சாப்பிடுவாரா நீங்கள்?

வாய் துர்நாற்றத்தை போக்க நம்மில் சிலர் சாப்பிட்டவுடன் அல்லது வேறு சமயங்களில் சூயிங் கம்மை வாயில் போட்டு மெல்லுவோம். இவ்வாறு மெல்லும் சூயிங் கம் மட்டுமில்லாமல், கிட்டத்தட்ட எல்லா வகையான வாய் புத்துணர்ச்சி தரக்கூடிய பொருட்களிலும் சில அளவு காப்ஃபைன் உள்ளது. சில நிறுவன தயாரிப்புகளில் உள்ள காப்ஃபைன் அளவானது, நாம் குடிக்கும் ஒரு குவளை காபியில் உள்ள காப்ஃபைன் அளவிற்கு சமமாக இருக்கிறது. எனவே அடுத்த முறை, நீங்கள் ஏதேனும் சூயிங் கம் போன்ற பொருட்களை வாங்குவதற்கு முன்பு, அதில் காப்ஃபைன் உள்ளதா என்பதை கவனியுங்கள்.

குளிர்பானத்திலும் காப்ஃபைன்

குளிர்பானத்திலும் காப்ஃபைன்

நம்மில் பலர், வெயில் நேரங்களில் குளுமைப்படுத்துவதற்கு, குளிர் பானங்களை அருந்துவதை வழக்கமாக கொண்டிருப்போம். அவ்வாறு அருந்தும் கோலா மற்றும் பல அடர் நிறத்திலுள்ள குளிர் பானங்களில் காப்ஃபைன் அதிகமாக இருக்கிறது. ஒவ்வொரு பாட்டிலிலும் அந்தந்த நிறுவன தயாரிப்பை பொறுத்து 23 முதல் 41 மில்லி கிராம் வரை காப்ஃபைன் இருக்கிறது. குளிர் பானம் மட்டுமின்றி, நீங்கள் உடற்பயற்சி அல்லது வேறு கடினமான வேலைகளை செய்வதற்கு முன் அருந்தும் உற்சாக பானங்களிலும் காப்ஃபைன் அதிகமாகவே இருக்கிறது.

அடிக்கடி ஐஸ் டீ குடிப்பவரா?

அடிக்கடி ஐஸ் டீ குடிப்பவரா?

சாதாரண டீயில் சிறிதளவு காப்ஃபைன் இருக்கும் என்பது நாம் எல்லாருக்கும் தெரியும். எனவே ஐஸ் டீயிலும் அந்த காப்ஃபைன் இருக்கும். சாதாரண ஐஸ் டீ இல்லாமல், சில சுவையூட்டிகளான எலுமிச்சை, பீச் சேர்ந்து தயாரிக்கப்படும் ஐஸ் டீயிலும் காப்ஃபைன் காணப்படுகிறது. இவ்வகையான பானங்களில் காப்ஃபைன் அளவானது அரை லிட்டருக்கு 42 மில்லி கிராம் என்ற அளவில் இருக்கிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Surprising Foods That Contain Caffeine

Here we listed some suprising foods that contain caffine. Read on...
Desktop Bottom Promotion