For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

படுத்ததும் ஆழ்ந்த தூக்கத்தை பெறணுமா? அப்ப இத தினமும் நைட் குடிங்க...

ஒருவருக்கு சரியான அளவு தூக்கம் கிடைக்கப் பெறாமல் போனால், அதன் விளைவாக பல நோய்களின் அபாயம் அதிகரிக்கும். குறிப்பாக மோசமான தூக்கம் இதய நோயின் அபாயத்தை அதிகரிக்கும்.

|

உடலுறுப்புக்கள் சிறப்பாக செயல்பட வேண்டுமானால், நல்ல தரமான மற்றும் போதுமான அளவு தூக்கத்தைப் பெற வேண்டியது மிகவும் முக்கியம். ஒருவருக்கு சரியான அளவு தூக்கம் கிடைக்கப் பெறாமல் போனால், அதன் விளைவாக பல நோய்களின் அபாயம் அதிகரிக்கும். குறிப்பாக மோசமான தூக்கம் இதய நோயின் அபாயத்தை அதிகரிக்கும்.

Snooze Better To Keep Your Heart Safe: 5 Drinks To Try

பி.எல்.ஓ.எஸ் உயிரியல் இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின்படி, மோசமான தூக்கம் பெருந்தமனி தடிப்பு அழற்சியைத் தூண்டுவதாக தெரிய வந்தது. இது ஒரு அபாயகரமான இதய நோய்.

MOST READ: தினமும் காலையில் 1 டம்ளர் துளசி பால் குடிப்பதால் பெறும் நன்மைகள்!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஆய்வு

ஆய்வு

சுமார் 1600-க்கும் மேற்பட்ட நடுத்தர வயதினர் மற்றும் முதியவர்கள் மீது நடத்தப்பட்ட இந்த ஆய்வில், அவர்களின் இரத்த மாதிரிகள் மற்றும் கால்சியம் அளவுகள் போன்றவற்றை ஆய்வு செய்தனர். இது பிளேக் கட்டமைப்பின் குறிகாட்டியாகும். அதே சமயம் ஒரு வாரம் இந்த ஆய்வில் பங்கேற்றவர்களின் தூக்க முறைகளையும் கண்காணித்தனர். அதில் தூக்க முறையில் இடையூறை சந்தித்தவர்களுக்கு பெருந்தமனி தடிப்பு அழற்சிக்கான அபாயம் இருப்பது தெரிய வந்தது. எனவே இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த நல்ல நிம்மதியான தூக்கத்தை தினமும் மேற்கொள்ள வேண்டியது அவசியம்.

இரவில் தூக்கத்தைப் பெற உதவும் பானங்கள்

இரவில் தூக்கத்தைப் பெற உதவும் பானங்கள்

இரவு தூங்கும் முன் நாம் சாப்பிடும் உணவுகள் நல்ல தரமான ஆழ்ந்த தூக்கத்தைப் பெற உதவுவதாக சான்றுகள் தெரிவிக்கின்றன. கீழே இரவு நேரத்தில் நல்ல நிம்மதியான தூக்கத்தை பெற உதவும் சில பானங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை இரவு தூங்கும் முன் குடித்தால், நிச்சயம் ஆழ்ந்த தூக்கத்தைப் பெறலாம்.

வெதுவெதுப்பான பால்

வெதுவெதுப்பான பால்

பலரும் இரவு நேரத்தில் ஏன் பால் குடிக்கும் பழக்கத்தைக் கொண்டுள்ளார்கள் தெரியுமா? அதோடு ஆரோக்கிய நிபுணர்களும் தூக்கமின்மையால் அவஸ்தைப்படுபவர்களை ஏன் இரவில் பால் குடிக்க சொல்கிறார்கள் தெரியுமா? ஏனெனில் பாலில் குறிப்பிடத்தக்க அளவு ட்ரிப்டோபன் என்னும் அமினோ அமிலம் உள்ளது. இது உடலினுள் செல்லும் போது, மெலடோனினாக மாற்றமடைந்து, நமது தூக்க நிலையை சீராக்க உதவுகிறது.

பாதாம் பால்

பாதாம் பால்

இரவில் நல்ல தூக்கத்தைத் தூண்டும் மற்றொரு சிறப்பான பானம் தான் பாதாம் பால். பல ஆய்வுகளின் படி, மூளையில் செரடோனின் அளவு சிறப்பாக இருப்பது தூக்கத்தைத் தூண்ட உதவும். நமது மத்திய நரம்பு மண்டலத்தில் செரடோனின் அளவு பொதுவாக ட்ரிப்டோபன் அளவு இருப்பதைப் பொறுத்தது. இது இயற்கையாகவே பாதாம் பாலில் உள்ளது. மேலும் பாதாம் பாலில் மக்னீசியம் அதிகமாக உள்ளது. இது தூக்கத்தின் தரத்தை மேம்படுத்தக்கூடிய மற்றொரு முக்கியமான ஊட்டச்சத்து ஆகும்.

சீமைச்சாமந்தி டீ

சீமைச்சாமந்தி டீ

வெதுவெதுப்பான பாலைப் போன்றே சீமைச்சாமந்தி டீயும் நல்ல தூக்கத்தைத் தூண்டும் மற்றொரு பானம். பல ஆண்டுகளாக தூக்கமின்மையைப் போக்க நிபுணர்களும் சீமைச்சாமந்தி டீயை பரிந்துரைத்து வருகின்றனர். இந்த டீ அற்புதமாக இருப்பதோடு, காப்ஃபைன் இல்லாததும் கூட. இது தான் இந்த டீ தூக்கத்தைத் தூண்டுவதற்கு மிகவும் உகந்ததாக ஆக்குகிறது.

இளநீர்

இளநீர்

இளநீரில் உடலின் ஆற்றலை அதிகரிக்கும் பண்புகளுடன், மக்னீசியம் மற்றும் பொட்டாசியம் போன்ற சத்துக்களும் அதிகம் உள்ளது. இந்த கனிமச்சத்துக்கள் தசைகளை ரிலாக்ஸ் அடையச் செய்வதோடு, நல்ல தூக்கத்தையும் பெற உதவுகிறது. மேலும் இதில் வைட்டமின் பி அதிகம் உள்ளதால், இது தூக்கத்திற்கு இடையூறை உண்டாக்கும் மன அழுத்தத்தைப் போக்கும்.

செர்ரி ஜூஸ்

செர்ரி ஜூஸ்

2010 ஆம் ஆண்டு ஜர்னல் ஆஃப் மெடிசனல் ஃபுட் என்னும் இதழிலில் வெளியிடப்பட்ட ஆய்வில் பகல் பொழுதில் 500 மிலி செர்ரி ஜூஸ் குடிப்பது, தூக்கமின்மை பிரச்சனையை கணிசமாக குறைப்பதாக கண்டறியப்பட்டது. ஆகவே செர்ரி ஜூஸ் கிடைத்தால், தவறாமல் வாங்கி குடியுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Snooze Better To Keep Your Heart Safe: 5 Drinks To Try

Recent research suggests that poor sleep quality can lead to fatal heart diseases. Read on to know how some beverages can help you snooze better.
Story first published: Saturday, June 27, 2020, 16:01 [IST]
Desktop Bottom Promotion