For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இரவு தூங்கும் போது சாக்ஸ் அணிந்து கொண்டு தூங்குவதால் பெறும் நன்மைகள் என்னென்ன தெரியுமா?

அசதியா வரும் நிறைய பேர் சாக்ஸை கூட கழட்டாமல் அப்படியே தூங்குவது உண்டு. சிலருக்கு கால் அதிகமாக சில்லென்று இருக்கும் போது சாக்ஸை போட்டுக் கொண்டு தூங்குவார்கள். இப்படி தூங்குவது நமக்கு நன்மை அளிக்கிறது.

|

இந்த அவசர உலகில் ஆபிஸ் முடிந்து வரும் போதே களைப்பாகத் தான் வருவோம். எப்படா வருவோம் எப்படா பெட்ல படுத்து தூங்குவோம் என்று இருக்கும். இப்படி அசதியா வரும் நிறைய பேர் சாக்ஸை கூட கழட்டாமல் அப்படியே தூங்குவது உண்டு. சிலருக்கு கால் அதிகமாக சில்லென்று இருக்கும் போது சாக்ஸை போட்டுக் கொண்டு தூங்குவார்கள்.

Sleeping With Socks On, An Advantage or Not?

உண்மையில் இப்படி தூங்குவது நமக்கு சில விதத்தில் நன்மை அளிக்கிறது. அதே சில தீமைகளும் இருக்கிறது. சாக்ஸை அணிந்து தூங்கும் போது உடல் குளிர்ச்சியை போக்கி உங்களுக்கு ஒருவித வெதுவெதுப்பை கொடுக்கும். இப்படி எந்த விதமான நன்மைகளை எல்லாம் தருகிறது என்று பார்க்கலாம்.

MOST READ: அடிக்கடி முதுகு வலிக்குதா? அப்ப உங்க உடம்புல இந்த சத்து கம்மியா இருக்குன்னு அர்த்தம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது

இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது

சாக்ஸை அணிந்து கொண்டு தூங்கும் போது உங்க பாதங்களில் இரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. ஆக்ஸிஜன் நிறைந்த இரத்தம் நுரையீரல், இதயம், தசைகள் என்று எல்லா இடங்களிலும் பரவுகிறது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

வெப்பநிலையை சீராக்குதல்

வெப்பநிலையை சீராக்குதல்

தெர்மோர்குலேஷன் நிகழ்வு மூலம் உடல் வெப்பநிலையை சீராக்க உதவுகிறது. இதனால் குளிர்காலத்தில் கூட உங்கள் உடல் சூடு சமநிலையில் இருக்கும். எனவே குளிர்காலத்தில் உங்க உடம்பை சூடாக வைக்க சாக்ஸை அணிந்து கொண்டு தூங்குங்கள்.

ரேனாட் தாக்குதலை தடுத்தல்

ரேனாட் தாக்குதலை தடுத்தல்

அதிகப்படியான குளிரால் நம் பாதங்கள் மற்றும் விரல்கள் விறைத்து போய் உணர்வில்லாமல் போய் விடும். இதை கண்டிக்காமல் விட்டால் தீவிர பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. இதற்கு முக்கிய காரணம் அந்த இடத்தில் இரத்த ஓட்டம் இல்லாமல் இருப்பதே. இரத்தம் உறைந்து போய் சருமம் வெளிர் நிறத்தில் தென்படும்.

வெள்ளைப்படுதல்

வெள்ளைப்படுதல்

பெண்கள் தூங்கும் போது சாக்ஸ் அணிந்து கொண்டு இருப்பது அவர்களுடைய ஹார்மோன் மாற்றத்தை கட்டுப்பாட்டில் வைக்க உதவுகிறது. பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதல் பிரச்சனை ஹார்மோன் மாற்றத்தை உண்டு பண்ணுகிறது. எனவே நீங்கள் பாதங்களை சூடாக வைக்கும் போது வாசோடைலேசன் நிகழ்வு மூலம் இரத்த குழாய்கள் பெரிதாகி உடலில் இருந்து வெப்பம் வெளியேற்றப்படுகிறது. இதனால் பாதங்கள் சீக்கிரமாக வியர்த்து குளிர்ந்து நிம்மதியான தூக்கம் மற்றும் வெள்ளைப்படுதல் பிரச்சனையை போக்குகிறது.

தீமைகள்:

தீமைகள்:

இரத்த ஓட்டக் குறைவு ஏற்படுதல்

இரத்த ஓட்டம் அதிகரிப்பதும் குறைவதும் நீங்கள் எந்த மாதிரியான சாக்ஸை அணிகிறீர்கள் என்பதை பொருத்து உள்ளது. இறுக்கமான சாக்ஸை அணிந்தீர்கள் என்றால் உங்கள் இரத்த ஓட்டம் தடைபட வாய்ப்புள்ளது.

சுகாதாரமின்மை

சுகாதாரமின்மை

இறுக்கமான சாக்ஸ்களை அணிந்து தூங்கும் போது பாதத்தில் உள்ள சருமத்திற்கு போதிய காற்று செல்வதில்லை. இதனால் அந்த பகுதி பூஞ்சை தொற்றுகள், கெட்ட துர்நாற்றம் வீச வாய்ப்பு இருக்கிறது.

அதிக சூடாகுதல்

அதிக சூடாகுதல்

இறுக்கமான சாக்ஸை அணிந்தீர்கள் என்றால் வாசோடைலேசன் நிகழ்வு மூலம் போதிய காற்று இல்லாமல் வியர்த்து உங்க பாத சூடு அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது.

சாக்ஸ் அணியாமல் கால்களை எப்படி சூடாக வைப்பது?

சாக்ஸ் அணியாமல் கால்களை எப்படி சூடாக வைப்பது?

உங்களுக்கு சாக்ஸ் அணிந்து தூங்க விருப்பமில்லை என்றால் படுக்கைக்கு கீழே சூடான தண்ணீர் பாட்டிலை வைத்து தூங்குங்கள். மேலும் தூங்குவதற்கு முன் சூடான குளியல் போட்டுக் கூட தூங்க செல்லலாம். உங்களுக்கு எது வசதியோ அதை செய்து உங்க வெப்பநிலையை நீங்கள் காத்துக் கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Sleeping With Socks On, An Advantage or Not?

Wearing those comfy socks can indeed be super cosy, but there's a surprising amount of science behind how it affects your health and sleep.
Desktop Bottom Promotion