For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சமையலறையில் இருக்கும் இந்த பொருட்கள் உங்களுக்கு மரணத்தை விரைவில் கொண்டுவருமாம்... ஜாக்கிரதை...!

பெரும்பாலும் வீட்டில் சமைத்த உணவை உண்பவர்கள், வெளியிடங்களில் ஆரோக்கியமற்ற ஜங்க் உணவுகளை சாப்பிடுவதில்லை என்பதில் பெருமை கொள்கிறார்கள்.

|

பெரும்பாலும் வீட்டில் சமைத்த உணவை உண்பவர்கள், வெளியிடங்களில் ஆரோக்கியமற்ற ஜங்க் உணவுகளை சாப்பிடுவதில்லை என்பதில் பெருமை கொள்கிறார்கள். இருப்பினும், உங்கள் சமையலறை மற்றும் வீட்டில் சமைத்த உணவுகளில் காணப்படும் அனைத்து பொருட்களும் முற்றிலும் ஆரோக்கியமானவை மற்றும் ஆபத்து இல்லாதவை என்று உங்களால் உறுதியாக கூற முடியுமா? நிச்சயமாக இல்லை.

பெரும்பாலும் வீட்டில் சமைத்த உணவை உண்பவர்கள், வெளியிடங்களில் ஆரோக்கியமற்ற ஜங்க் உணவுகளை சாப்பிடுவதில்லை என்பதில் பெருமை கொள்கிறார்கள். இருப்பினும், உங்கள் சமையலறை மற்றும் வீட்டில் சமைத்த உணவுகளில் காணப்படும் அனைத்து பொருட்களும் முற்றிலும் ஆரோக்கியமானவை மற்றும் ஆபத்து இல்லாதவை என்று உங்களால் உறுதியாக கூற முடியுமா? நிச்சயமாக இல்லை. அனைத்து வகையான உணவுகளையும் சமைப்பதற்கு தேவையான பல பொருட்கள் உள்ளன. அவற்றை பயன்படுத்துவதற்கு முன் இருமுறை சிந்திக்கவேண்டும், குறிப்பாக நீங்கள் அவற்றை அதிகமாகப் பயன்படுத்தினால் அதிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உங்கள் சமையலறையில் இருக்கும் ஆபத்தான பொருட்கள் என்னென்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

அனைத்து வகையான உணவுகளையும் சமைப்பதற்கு தேவையான பல பொருட்கள் உள்ளன. அவற்றை பயன்படுத்துவதற்கு முன் இருமுறை சிந்திக்கவேண்டும், குறிப்பாக நீங்கள் அவற்றை அதிகமாகப் பயன்படுத்தினால் அதிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உங்கள் சமையலறையில் இருக்கும் ஆபத்தான பொருட்கள் என்னென்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சர்க்கரை

சர்க்கரை

வெள்ளை சர்க்கரை கிட்டத்தட்ட அனைத்து சமையலறையிலும் காணப்படுகிறது. இந்த இனிப்பு சர்க்கரை தேநீர், காபி, மில்க் ஷேக்குகள் மற்றும் பிற சமையல் வகைகளில் அதிகளவில் ஊடுருவுகிறது. இருப்பினும், அதிகப்படியான சர்க்கரையை உட்கொள்வது அதிக இரத்த அழுத்தம், வீக்கம், எடை அதிகரிப்பு, நீரிழிவு மற்றும் கொழுப்பு கல்லீரல் நோய்க்கு வழிவகுக்கும். மேலும், இந்த நிலைமைகள் அனைத்தும் உங்கள் பக்கவாதம் மற்றும் இதய நோய் அபாயத்தை அதிகரிக்கின்றன.

சுத்திகரிக்கப்பட்ட மாவு

சுத்திகரிக்கப்பட்ட மாவு

மைதா என்று அழைக்கப்படும் சுத்திகரிக்கப்பட்ட மாவு, உங்கள் சமையலறையில் உள்ள குக்கீகள், கேக்குகள், தானியங்கள், ரொட்டிகள் மற்றும் பாஸ்தா போன்றவற்றில் இருக்கும். அதிகப்படியான சுத்திகரிக்கப்பட்ட மாவு நுகர்வு எடை அதிகரிப்பு, வளர்சிதை மாற்ற பிரச்சனைகள், இருதய நோய் மற்றும் புற்றுநோயுடன் கூட இணைக்கப்படலாம். மேலும், சுத்திகரிப்பு செயல்முறை உணவு நார்ச்சத்து, பி வைட்டமின்கள், இரும்பு, மெக்னீசியம் மற்றும் வைட்டமின் ஈ ஆகியவற்றின் கணிசமான இழப்புக்கு வழிவகுக்கிறது.

உப்பு

உப்பு

அதிகப்படியான உப்பு உயர் இரத்த அழுத்தம், இதய நோய் மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கிறது. உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, பெரும்பாலான மக்கள் அதிக உப்பை உட்கொள்கிறார்கள, சராசரியாக ஒரு நாளைக்கு 9-12 கிராம் அல்லது பரிந்துரைக்கப்பட்ட அதிகபட்ச அளவை விட இரண்டு மடங்கு உப்பை உட்கொள்கிறார்கள். சோடியம் உட்கொள்வதைக் குறைப்பது பல ஆபத்துகளைத் தடுக்கும்.

எண்ணெய்

எண்ணெய்

அனைத்து இல்லங்களிலும் அதிக எண்ணெயில் சமைத்த உணவுகளை விரும்புபவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். எண்ணெயில் வறுத்த உணவுகளை உங்கள் குடும்பத்தினர் விரும்பி சாப்பிடுகிறார்களா? இந்தக் கேள்விக்கான பதில் ஆம் எனில், நீங்களும் உங்கள் குடும்பத்தினரும் மாரடைப்பு, பக்கவாதம், மார்பக/கருப்பை புற்றுநோய், நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், ஆரோக்கியமற்ற எடை அதிகரிப்பு மற்றும் மூட்டு வலி போன்றவற்றின் அபாயங்களை அதிகரிக்கிறீர்கள்.

கவனத்தில் கொள்ள வேண்டியவை

கவனத்தில் கொள்ள வேண்டியவை

எண்ணெய் அல்லது உப்பு அல்லது வேறு எந்த உணவுப் பொருளையும் சாப்பிடுவதை நிறுத்தக்கூடாது. அதற்கு பதிலாக, ஆரோக்கியமான மாற்றுகளில் கவனம் செலுத்துவதும், இந்த உணவுகளை குறைந்த அளவுகளில் மட்டுமே உட்கொள்வதும் முக்கியம். உதாரணமாக, சுத்திகரிக்கப்பட்ட மாவுக்குப் பதிலாக ராகி அல்லது முழு கோதுமை போன்ற ஆரோக்கியமான மற்றும் நார்ச்சத்து நிறைந்த மாவுகளைக் கொண்டு மாற்றவும். சர்க்கரைக்குப் பதிலாக வெல்லத்தைத் தேர்ந்தெடுக்கவும். இந்த சிறிய மாற்றங்கள் உங்கள் ஆரோக்கியத்தையும் உங்கள் குடும்ப உறுப்பினர்களின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Silent Killers in Your Kitchen That Ruin Your Health in Tamil

Here is the list of silent killers in your kitchen that may be secretly ruining your health.
Story first published: Monday, October 31, 2022, 17:55 [IST]
Desktop Bottom Promotion