For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த அறிகுறிகள் இருந்தால் உங்க கல்லீரல் கொழுப்பு அதிகமாகி ஆபத்தான நிலையில் இருக்குனு அர்த்தமாம்...!

மது அருந்துபவர்களுக்கு மட்டும்தான் பெரும்பாலும் கல்லீரல் நோய் ஏற்படும் என்ற பொதுவான கருத்து முற்றிலும் தவறானது.

|

மது அருந்துபவர்களுக்கு மட்டும்தான் பெரும்பாலும் கல்லீரல் நோய் ஏற்படும் என்ற பொதுவான கருத்து முற்றிலும் தவறானது. ஆல்கஹால் அல்லாத கொழுப்பு கல்லீரல் நோய் (NAFLD) என்பது ஒரு மோசமான நிலை, இது சிறிதும் மது அருந்தாத நபர்களையும் பாதிக்கலாம். கல்லீரலில் அதிகப்படியான கொழுப்பு சேமிக்கப்படும் போது, அது கடுமையான துயரத்தை ஏற்படுத்தும் கல்லீரல் நிலைமைகளுக்கு வழிவகுக்கும்.

Signs of Non Alcoholic Fatty Liver Disease in Tamil

இந்த நிலைக்கு சிகிச்சையளிக்கப்படாவிட்டால், NAFLD முன்னேறி, ஆல்கஹாலிக் ஸ்டீடோஹெபடைடிஸ் (NASH) என அறியப்படும் ஒன்றாக உருவாகலாம், இது மேலும் சிரோசிஸ் அல்லது கல்லீரல் செயலிழப்பை ஏற்படுத்தும். நீங்கள் மது அருந்தினாலும் இல்லாவிட்டாலும், ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சை அளிக்காவிட்டால், பாதிப்பு ஒரே மாதிரியாக இருக்கும். நீங்கள் புறக்கணிக்கக் கூடாத ஆல்கஹால் அல்லாத கொழுப்பு கல்லீரல் நோயின் அறிகுறிகள் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சோர்வு

சோர்வு

நாள்பட்ட சோர்வு என்பது கல்லீரல் நோயின் அறிகுறியாகும். கனடியன் ஜர்னல் ஆஃப் காஸ்ட்ரோஎன்டாலஜியில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின்படி, மூளையில் உள்ள நரம்பியக்கடத்திகளில் ஏற்படும் மாற்றங்கள் இதற்கு காரணமாக இருக்கலாம். காரணம் எதுவாக இருந்தாலும், மது அல்லது மது அருந்தாதவர்கள், நீங்கள் எப்போதும் சோர்வாக இருந்தால், உங்கள் கல்லீரலைப் பரிசோதிப்பது நல்லது.

பசியின்மை

பசியின்மை

உங்களுக்கு சாப்பிட ஆசை இல்லாமல் இருப்பதற்கு பல காரணங்கள் உள்ளன. இருப்பினும், குமட்டல், தலைவலி மற்றும் வாந்தியெடுத்தல் போன்ற திடீர் வலிகளுடன் கணிசமான நேரத்திற்கு நீங்கள் பசியை இழந்தால், அது மிகவும் கடுமையானதாக இருக்கலாம். ஆல்கஹால் அல்லாத கொழுப்பு கல்லீரல் நோயின் பொதுவான அறிகுறிகளில் ஒன்று பசியின்மை. எனவே நீங்கள் இதை அனுபவித்திருந்தால், கல்லீரல் பரிசோதனைக்கு செல்வது நல்லது.

MOST READ: இந்த 6 ராசிக்காரங்களுக்கு சாப்பாடு உயிர் மாதிரியாம்... இவங்க சாப்பிடுறதுக்காகவே வாழ்றவங்களாம்...!

தோல் அரிப்பு

தோல் அரிப்பு

உங்கள் கல்லீரல் ஆரோக்கியமாக உள்ளதா இல்லையா என்பதை உங்கள் சருமம் வெளிப்படுத்தும். கல்லீரல் நோய் உங்கள் பித்த நாளங்களை பாதிக்கக்கூடும் என்பதால், அதன் விளைவுகள் உங்கள் தோலில் காணப்படுவதற்கான வாய்ப்பு உள்ளது. கல்லீரல் நோய் பித்த உப்புகளின் அளவை அதிகரிக்கலாம், இது தோலின் கீழ் குவிந்து, தோல் அரிப்பு ஏற்படலாம் என்று ஆராய்ச்சி கூறுகிறது. இருப்பினும், உங்கள் தோல் அரிப்பு ஏற்படுவதற்கு பல காரணங்கள் உள்ளன என்பதை மறந்து விடாதீர்கள்.

கண்கள் மற்றும் சருமம் மஞ்சள் நிறமாக மாறுதல்

கண்கள் மற்றும் சருமம் மஞ்சள் நிறமாக மாறுதல்

மஞ்சள் நிற தோல் அல்லது கண்கள் மஞ்சள் நிறத்தில் மாறுவது உடலில் பிலிரூபின் அளவு அதிகரிப்பதாகும், இது கல்லீரலில் சுரக்கும் மஞ்சள் நிற நிறமி ஆகும். இது பொதுவாக மஞ்சள் காமாலை என்று அழைக்கப்படுகிறது மற்றும்இதற்கு உடனடி சிகிச்சை தேவைப்படுகிறது.

திடீர் எடைக்குறைவு

திடீர் எடைக்குறைவு

திடீர் எடை இழப்பு ஆரோக்கியமற்ற கல்லீரலின் அறிகுறியாக இருக்கலாம். இது கல்லீரல் இழைநார் வளர்ச்சியின் அறிகுறியாக இருக்க முடியாது, ஆனால் இது ஹெபடைடிஸ் சி எனப்படும் வைரஸ் தொற்றுநோயைக் குறிக்கலாம், இது கல்லீரலின் வீக்கத்திற்கு வழிவகுக்கும், வலி மற்றும் வீக்கத்தை ஏற்படுத்தும்.

MOST READ: இரத்தத்தில் சர்க்கரையை குறைக்க ஆயுர்வேதம் கூறும் எளிய வழிகள்...இனி சர்க்கரை நோயை பாத்து பயப்படாதீங்க!

எளிதில் காயம் ஏற்படுவது

எளிதில் காயம் ஏற்படுவது

கல்லீரல் சேதம் அடிக்கடி, எளிதாக சிராய்ப்புண் ஏற்படலாம். உங்கள் கல்லீரல் சேதமடைந்தால், அது போதுமான அளவு உறைதல் புரதங்களை உற்பத்தி செய்யத் தவறிவிடுகிறது, இதனால் வழக்கத்தை விட அதிக இரத்தப்போக்கு ஏற்படலாம், இதன் விளைவாக சிராய்ப்பு ஏற்படும். இருப்பினும், உடலில் எளிதில் சிராய்ப்பு ஏற்படக்கூடிய வேறு சில காரணங்களும் உள்ளன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Signs of Non Alcoholic Fatty Liver Disease in Tamil

Check out the signs of non alcoholic fatty liver disease.
Desktop Bottom Promotion