For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆகஸ்ட் மாதத்தில் கொரோனா தடுப்பூசி வெளியிடப்படுவதாக கூறும் ரஷ்ய விஞ்ஞானிகள் - உண்மை என்ன?

ரஷ்யாவின் செச்செனோவ் பல்கலைகழகம், தாங்கள் உருவாக்கப்பட்ட கோவிட்-19 தடுப்பூசி, உலகின் முதல் கொரோனா வைரஸ் தடுப்பூசியாக இருக்கும் என்றும், மனிதர்களிடத்தில் வெற்றிகரமாக சோதனைகளை செய்துள்ளதாகவும் கூறுகிறது

|

உலகெங்கிலும் நாவல் கொரோனா வைரஸ் வழக்குகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்ற நிலையில், அந்த வைரஸிற்கான தடுப்பு மருந்துகளைக் கண்டுபிடிக்கும் பணியில் உலகின் பல பகுதிகளில் உள்ள விஞ்ஞானிகள் மிகவும் தீவிரமாக முயற்சித்து வருகின்றனர். இந்த சூழ்நிலையில் ரஷ்யாவின் செச்செனோவ் பல்கலைகழகம், தாங்கள் உருவாக்கப்பட்ட கோவிட்-19 தடுப்பூசி, உலகின் முதல் கொரோனா வைரஸ் தடுப்பூசியாக இருக்கும் என்றும், மனிதர்களிடத்தில் வெற்றிகரமாக சோதனைகளை செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

Russian Scientists Planning To Launch Coronavirus Vaccine By Mid-August

உலகிலேயே தன்னார்வலர்கள் மீதான சோதனைகளை முடித்துள்ளதால், கொரோனா வைரஸ் தடுப்பூசியை உருவாக்கிய உலகின் முதல் நாடுகளில் ரஷ்யாவும் இருக்கலாம் என்றும் ரஷ்ய ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

MOST READ: அறிகுறி எதுவுமே இல்லாமல் கொரோனா பாசிட்டிவ் காமிக்குதா? அப்ப இத ஃபாலோ பண்ணுங்க...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ரஷ்ய தடுப்பூசி

ரஷ்ய தடுப்பூசி

ரஷ்யாவின் தலைநகரான மாஸ்கோவில் உள்ள கமலே இன்ஸ்டிடியூட் ஆஃப் எபிடெமியாலஜி அண்ட் மைக்ரோபயாலஜியை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கிய தடுப்பு மருந்தை, செச்செனோவ் பல்கலைக்கழகம் மனிதர்களிடத்தில் பரிசோதிக்கும் பணியை கடந்த ஜூன் 18ஆம் தேதி தொடங்கியது.

தடுப்பூசி போடப்பட்டவர்களின் மருத்துவ பரிசோதனைகள்

தடுப்பூசி போடப்பட்டவர்களின் மருத்துவ பரிசோதனைகள்

இந்த தடுப்பூசியின் மனிதர்கள் மீதான சோதனை ஜூன் நடுப்பகுதியில் தொடங்கிய சோதனையில், முதல் குழுவில்18 தன்னார்வலர்களும், இரண்டாவது குழுவின் 23 தன்னார்வலர்களும் இருந்தனர். அவர்களுக்கு கமலே இன்ஸ்டிடியூட் ஆப் எபிடெமியாலஜி அண்ட் மைக்ரோபயாலஜியில், தடுப்பூசியின் முதல் டோஸ் செலுத்தப்பட்டது. 18 முதல் 65 வயதிற்குட்பட்ட அனைத்து தன்னார்வலர்களும் 28 நாட்கள் மற்ற நோய்த்தொற்றுகள் வராமல் தடுக்கும் பொருட்டு தனிமைப்படுத்தப்பட்டனர். அதோடு அவர்கள் ஆறு மாதங்களுக்கு கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள்.

தடுப்பூசியின் பக்கவிளைவுகள்

தடுப்பூசியின் பக்கவிளைவுகள்

செச்செனோவ் பல்கலைகழகத்தின் தலைவரும், தலைமை ஆராய்ச்சியாளருமான எலெனா ஸ்டோல்யார்ச்சுக் கூறுகையில், ஆய்வில் பங்கு கொண்ட சில தன்னார்வலர்கள் போடப்பட்ட தடுப்பூசியால் தலைவலி மற்றும் காய்ச்சல் போன்ற சிறிய பக்கவிளைவுகளை சந்தித்தனர். இருப்பினும் 24 மணிநேரத்திற்குள் அந்த அறிகுறிகளும் குறைந்துவிட்டன என்று கூறினார்.

ரஷ்யாவின் கொரோனா தடுப்பூசி பாதுகாப்பானது

ரஷ்யாவின் கொரோனா தடுப்பூசி பாதுகாப்பானது

ரஷ்யாவின் மனிதர்கள் மீதான பரிசோதனையில் பங்கு கொண்ட முதல் தன்னார்வலர் குழுவினர் ஜூலை 15 ஆம் தேதியும், இரண்டாவது குழுவினர் 20 ஆம் தேதியும் வீடு திரும்புவதாக குறிப்பிட்டனர். செச்செனோவ் பல்கலைகழகத்தின் இயக்குநரான அலெக்சாண்டர் லுகாஷேவ், இந்த சோதனையில் நாங்கள் உருவாக்கியுள்ள தடுப்பூசி மனிதர்களுக்கு பாதுகாப்பானதா என்பதை கண்டறிவதையே நோக்கமாக கொண்டிருந்தோம். முடிவில் இந்த தடுப்பூசி பாதுகாப்பானது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

அதோடு தாங்கள் கண்டுபிடித்த தடுப்பூசியை தன்னார்வலர்கள் மீது சோதனைகளைத் தொடங்குவாற்கு முன்பு, இயக்குநர் உட்பட கமலே நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர்கள் தங்களுக்கு தாங்களே தடுப்பூசி போட்டுக் கொண்டனர் என்றும் கூறினார்.

தடுப்பூசி ஆகஸ்ட் 12-14-க்குள் அறிமுகப்படுத்தப்படலாம்

தடுப்பூசி ஆகஸ்ட் 12-14-க்குள் அறிமுகப்படுத்தப்படலாம்

கமலே நிறுவனத்தின் இயக்குநரான அலெக்சாண்டர் ஆகஸ்ட் நடுப்பகுதியில் உலகின் முதல் கொரோனா வைரஸ் தடுப்பூசி வெளியிடப்படும் என்று நம்புவதாக கூறுகிறார். மேலும் செப்டம்பர் 2020-க்குள் மருந்து தயாரிப்பாளர்களால் பெருமளவில் உற்பத்தி தொடங்கப்படலாம் என்று அவர் மேலும் கூறினார்.

குறிப்பு

குறிப்பு

ஆனால், உலக சுகாதார நிறுவனம் ரஷ்யா கண்டுபிடித்த கொரோனா தடுப்பூசி முதல் கட்ட மனித பரிசோதனையில் தான் உள்ளதாக கூறுகிறது. மேலும் எந்த ஒரு தடுப்பூசியையும் பெரிய அளவிலான உற்பத்திக்கு ஒப்புதல் பெறுவதற்கு, அந்த தடுப்பூசி மூன்று கட்ட மனித பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்றும் உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Russian Scientists Planning To Launch Coronavirus Vaccine By Mid-August

According to a report, the Russian scientists are hopeful to launch the world’s first coronavirus vaccine by mid-August.
Desktop Bottom Promotion