For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஜிஎம் டயட்டை ஏன் பின்பற்ற வேண்டாம் என்பதற்கான சில காரணங்கள்!

ஜெனரல் மோட்டார் டயட் என்பதை நாம் பொதுவாக ஜிஎம் டயட் என்று கூறுவோம். கழிவுகளை அகற்றும் உணவுகளை உண்பதற்கு இந்த டயட் பரிந்துரைக்கிறது. ஆனால் இதனை பின்பற்றுவது பாதுகாப்பானதா?

|

ஜெனரல் மோட்டார் டயட் என்பதை நாம் பொதுவாக ஜிஎம் டயட் என்று கூறுவோம். கழிவுகளை அகற்றும் உணவுகளை உண்பதற்கு இந்த டயட் பரிந்துரைக்கிறது. ஒரு முறை இந்த டயட் பின்பற்றும் 7 நாட்களில் 7 கிலோ குறைவதாக இந்த டயட் குறிப்பிடுகிறது.

Reasons Why You Should Say No To GM Diet In Tamil

ஆனால் இதனை பின்பற்றுவது பாதுகாப்பானதா? இப்போது ஜிஎம் டயட் எப்போதும் பின்பற்றுவது உகந்தது அல்ல என்பதற்கான 5 திடமான காரணங்களை நாம் அறிந்து கொள்வோம்.

MOST READ: சீனாவில் ஆண்களுக்கு மலட்டுத்தன்மையை உண்டாக்கும் புதிய பாக்டீரியா பரவுதாம் - எச்சரிக்கும் அரசு

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
இந்த தற்காலிக டயட்டை பின்பற்ற ஆதரவளிக்கும் எந்த ஒரு ஆதாரமும் இல்லை

இந்த தற்காலிக டயட்டை பின்பற்ற ஆதரவளிக்கும் எந்த ஒரு ஆதாரமும் இல்லை

இந்த 7 நாள் டயட் திட்டம் குறித்த எந்த ஒரு நிஜமான ஆதாரமும் இல்லை. பழங்கள் மற்றும் காய்கறிகள் உட்கொள்வது எடை குறைப்பிற்கு மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு உகந்தது என்றாலும் வெறும் பழங்கள் மற்றும் காய்கறிகள் மட்டும் 3 நாட்கள் தொடர்ந்து எடுத்துக் கொள்வது என்பது ஆரோக்கியமானது அல்ல மற்றும் இதனை பரிந்துரைப்பதும் தவறு.

இந்த டயட் திட்டத்தில் சில முக்கிய ஊட்டச்சத்துகள் எடுத்துக் கொள்ளப்படுவதில்லை

இந்த டயட் திட்டத்தில் சில முக்கிய ஊட்டச்சத்துகள் எடுத்துக் கொள்ளப்படுவதில்லை

காய்கறிகள் மற்றும் பழங்கள் மட்டும் உட்கொள்வது என்பது கேட்பதற்கு ஆரோக்கியமானதாக இருக்கலாம். ஆனால் வெறும் பழங்கள் மற்றும் காய்கறிகள் மட்டும் உட்கொள்வதால் பல்வேறு இதர வைட்டமின்கள், ஊட்டசத்துகள் மற்றும் கனிமங்கள் ஆகியவற்றை உடல் இழக்கிறது. உடல் சீராக செயல்பட சில அத்தியாவசிய வைட்டமின், கனிமம் மற்றும் ஊட்டச்சத்துகள் தேவை. போதுமான அளவு பழங்கள் மற்றும் காய்கறிகள் எடுத்துக் கொண்டாலும், உடல் செயல்பாட்டிற்கு முக்கியமாக உதவும் புரதம் போதிய அளவு கிடைப்பதில்லை. போதுமான அளவு புரதம் உடலுக்கு கிடைக்காமல் இருந்தால் உங்கள் பசியுணர்வு அதிகரிக்கும் , மயக்கம் உண்டாகும், மற்றும் உங்கள் நோயெதிர்ப்பு மண்டலம் பலவீனமாகும். புரத சத்து குறைபாடு காரணமாக ஏற்படும் இதர பாதிப்புகள், முடி இழப்பு, தசை வலி, எடீமா போன்றவை. மேலும் இந்த டயட்டில் வைட்டமின் பி12, இரும்பு, கால்சியம் மற்றும் கொழுப்பு போன்ற சத்துகளின் குறைபாடு உள்ளது.

இந்த டயட் திட்டத்தில் இறைச்சி உட்கொள்ளல் அளவு அதிகரிக்கிறது

இந்த டயட் திட்டத்தில் இறைச்சி உட்கொள்ளல் அளவு அதிகரிக்கிறது

மீன், பீன்ஸ், சிக்கன் போன்றவற்றில் குறைவான அளவு கொலஸ்ட்ரால் மற்றும் நிறைவுற்ற கொழுப்பு இருப்பதால் சிவப்பு இறைச்சிக்கு மாற்றாக இவற்றை பயன்படுத்தலாம் என்று அமெரிக்க ஹார்ட் அசோசியேஷன் பரிந்துரைக்கிறது. ஜிஎம் டயட்டில் இரண்டு நாட்களில் அதாவது 13 முறை உட்கொள்ளல் அளவில் 40 அவுன்ஸ் சிவப்பு இறைச்சி உட்கொள்ளலால் பரிந்துரைக்கப்படுகிறது. ஆனால் இறைச்சி உட்கொள்ளலில் மிதமான அளவு என்பது 3 அவுன்ஸ் மட்டுமே. ஆரோக்கியமான டயட் மற்றும் வாழ்க்கை முறைக்கு எந்த ஒரு உணவையும் மிதமான அளவு மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும்.

வேகமான எடை இழப்பு என்பது நல்லதல்ல

வேகமான எடை இழப்பு என்பது நல்லதல்ல

ஜிஎம் டயட் பின்பற்றி எடை குறைப்பு ஏற்படுவது என்பது தற்காலிகமானது. நீங்கள் திடீரென்று உங்கள் கலோரி உட்கொள்ளல் அளவை குறைக்கும் போது உங்கள் உடல் ஆற்றலுக்கான இதர வழிகளைத் தேடுகிறது. க்ளைகோஜன் எரிபொருளாக உடைக்கப்படுகிறது. க்ளைகோஜன் தண்ணீரால் ஆனது, இது உடைக்கப்படும் போது, அதிகமான தண்ணீர் எடை இழக்கப்படுகிறது. நீங்கள் மறுபடி வழக்கமான டயட்டிற்கு மாறும் போது, மீண்டும் க்ளைகோஜன் மீட்கப்பட்டு, உங்கள் உடல் எடை மீண்டும் அதிகரிக்கிறது.

உங்கள் உடல் கழிவுகளை தானாக அகற்றுவதில்லை

உங்கள் உடல் கழிவுகளை தானாக அகற்றுவதில்லை

பல்வேறு கழிவுகளை நீக்கும் திட்டங்கள் உண்மையில் உடலில் உள்ள கழிவுகளை அகற்றுவதில்லை என்று சில ஆய்வுகள் கூறுகின்றன. உண்மையில், சில தற்காலிக டயட் திட்டத்தை பின்பற்றி உடலில் உள்ள கழிவுகளை அகற்ற வேண்டும் என்று நீங்கள் நினைத்தால், அதனை உடனே மறந்து விடுங்கள். ஆரோக்கியமான டயட் திட்டம் மற்றும் உடற்பயிற்சி மூலம் மட்டுமே உடலில் கழிவுகள் அகற்றப்பட்டு, எடை இழப்பு சாத்தியமாகும், மேலும் நிரந்தரமானதும் கூட.

குறிப்பு:

குறிப்பு:

நிறைய தண்ணீர் பருகுங்கள், உங்கள் உணவில் பழங்கள் மற்றும் காய்கறிகள் அதிகம் எடுத்துக் கொள்ளுங்கள். நார்ச்சத்து மற்றும் இதர முக்கிய ஊட்டச்சத்துகள் உங்கள் உடலுக்கு கிடைப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். இதனால் உங்கள் உடலில் உள்ள கழிவுகள் அகற்றப்படும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Reasons Why You Should Say No To GM Diet In Tamil

Here are some reasons why you should say NO to GM diet in tamil. Read on...
Desktop Bottom Promotion