For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஒருவரது நாக்கில் எந்த காரணங்களுக்கு எல்லாம் வெள்ளை படலம் உருவாகும் தெரியுமா?

நாக்கில் படியும் வெள்ளைப் படலமானது பாப்பிலாவின் அதிகப்படியான வளர்ச்சி மற்றும் வீக்கத்தின் விளைவாகும். இப்படி நாக்கில் படியும் வெள்ளைப் படலத்தால், வாய் துர்நாற்றம் வீசுவதோடு, மோசமான சுவையை உணர நேரிடும்.

|

பலரும் தங்கள் நாக்கில் வெண்மையான படலம் படிந்து இருப்பதை கண்டிருப்போம். இந்த வெள்ளைப் படலம் நாக்கின் மேற்புறத்தில் முழுவதுமாக காணப்படலாம் அல்லது திட்டுக்களாக காணப்படலாம். நாக்கில் படியும் வெள்ளைப் படலமானது பாப்பிலாவின் அதிகப்படியான வளர்ச்சி மற்றும் வீக்கத்தின் விளைவாகும். இப்படி நாக்கில் படியும் வெள்ளைப் படலத்தால், வாய் துர்நாற்றம் வீசுவதோடு, மோசமான சுவையை உணர நேரிடும்.

Reasons Why You Could Have White Tongue In Tamil

நாக்கில் படியும் வெள்ளைப் படலமானது பெரும்பாலும் தானாகவே மறைந்துவிடும். இதுதவிர பற்களைத் துலக்கும் போது நாக்கை சுத்தம் செய்வதன் மூலம் நீக்கலாம். சரி, இப்படி நாக்கில் படியும் வெள்ளைப் படலமானது எந்த காரணங்களுக்கெல்லாம் படிகிறது என்பது தெரியுமா? கீழே அந்த காரணங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அதிகளவு புகைப்பிடிப்பது

அதிகளவு புகைப்பிடிப்பது

பொதுவாக புகைப்பிடிக்கும் போது, அது நாக்கில் இறந்த செல்கள் அதிகரிக்க வழிவகுத்து, மெல்லிய வெள்ளை படலத்தை உருவாக்கும். இந்த வெள்ளைப் படலம் முற்றியும் வெறும் இறந்த செல்களால் மட்டுமே ஆனது. அதிகமாக புகைப்பிடிக்கும் போது நாக்கில் இறந்த செல்கள் குவிந்து கொண்டே இருப்பதால், நாக்கு தடிமனாகவும், வெள்ளை அல்லது மஞ்சள் நிறத்திலும் காணப்படுகிறது.

மோசமான வாய் சுகாதாரம்

மோசமான வாய் சுகாதாரம்

ஒருவரது மோசமான வாய் சுகாதாரமும் நாக்கில் வெள்ளைப் படலத்தை உருவாக்கும். ஒருவர் தினமும் தங்களது வாயை சுத்தம் செய்யாத போது, நாக்கில் பாக்டீகரியாக்கள் மற்றும் ஈஸ்ட் அதிகமாக வளர்வதால், நாக்கில் உள்ள பாப்பிலா வீக்கமடைந்து, நிறமாற்றமடைகின்றன. எனவே நீங்கள் நாக்கில் வெள்ளைப்படலத்தை தினமும் கண்டால், நீங்கள் சரியான வாய் சுகாதாரத்தைக் கடைப்பிடிப்பதில்லை என்று அர்த்தம்.

நீரிழப்பு

நீரிழப்பு

நாக்கில் வெள்ளைப் படலம் உருவாவதற்கு மற்றொரு காரணம் நீரிழப்பு. ஒருவர் போதுமான அளவு நீரைக் குடிக்காமல் இருக்கும் போது நாக்கில் உள்ள பாப்பிலாவில் வீக்கம் ஏற்பட்டு, நாக்கில் வெள்ளைப்படலம் உருவாகிறது.

அதிகளவு மது அருந்துவது

அதிகளவு மது அருந்துவது

வெள்ளை நாக்கை ஏற்படுத்தும் மற்றொரு நிலை லுகோபிளாக்கியா என்று அழைக்கப்படுகிறது. இதன் முக்கிய அறிகுறிகளுள் நாக்கு மற்றும் வாயில் வெள்ளை அல்லது சாம்பல் நிற திட்டுக்கள் அடங்கும். அதிகளவு மது அருந்துவதும் இந்நிலையை உண்டாக்கும். ஏனெனில் மது நீரிழப்பை ஏற்படுத்தும். இதன் விளைவாக நாக்கில் வெள்ளை படலத்தை உருவாக்கும். இது இப்படியே நீடித்தால், அது வாய் புற்றுநோய்க்கும் வழிவகுக்கும்.

வாய் வறட்சி

வாய் வறட்சி

உங்கள் வாய் அடிக்கடி வறட்சியடைகிறதா? வாய் அதிகம் வறட்சியடைந்தால், அது கேண்டிடியாசிஸ் போன்ற நோய்த்தொற்றுகளின் அபாயத்தை அதிகரிக்கும். நாக்கில் உள்ள பாப்பிலாவில் தொற்று ஏற்படும் போது, அது நாக்கில் வெள்ளை படலத்தை உருவாக்கும். எனவே உங்கள் நாக்கில் வெள்ளைப்படலம் உருவாகக்கூடாது என்றால் அடிக்கடி நீரை அருந்தி வாயை வறட்சி அடையாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Reasons Why You Could Have White Tongue In Tamil

Here are some reasons why you could have white tongue. Read on to know more...
Story first published: Thursday, November 24, 2022, 10:42 [IST]
Desktop Bottom Promotion