Latest Updates
-
Solar Eclipse 2026: ஆண்டின் கடைசி சூரிய கிரகணம்: 12 ராசிக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
சுக்கிரன் சொந்த ராசிக்குள் நுழைவதால் வெற்றிகளையும், செல்வத்தையும் குவிக்கப்போகும் 3 ராசிகள் யார் தெரியுமா? -
Aadi Amavasai 2026: ஆடி அமாவாசை ஸ்பெஷல் பரங்கிக்காய் பாயாசம் ரெசிபி - செஞ்சு பாருங்க - செமையா இருக்கும் -
எப்பவும் ஒரே மாதிரி பாஸ்தா செய்யாம, இப்படி முட்டை பொடிமாஸ் பெப்பர் பாஸ்தா செய்யுங்க.. அள்ளும்.. -
Aadi Amavasai 2026: ஆடி அமாவாசை நாளில் மறந்தும் இந்த 7 விஷயங்களை செஞ்சுடாதீங்க.. -
இந்த 4 ராசி ஆண்கள் ரொம்ப கவர்ச்சியானவர்களாக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 வருடம் கழித்து சிம்ம ராசிக்கு செல்லும் புதன்: ஆகஸ்ட் இறுதியில் இந்த 4 ராசிக்கு செல்வம் குவியப்போகுது! -
Aadi Amavasai 2026: தர்ப்பணம் என்றால் என்ன? ஆடி அமாவாசை அன்று ஏன் அவசியம் தர்ப்பணம் கொடுக்க வேண்டும் -
மூட்டு வலி நீங்க, இரத்தம் ஊற உதவும் முருங்கைக்கீரை கொள்ளு சூப் - எப்படி செய்யணும் தெரியுமா? -
சனிபெயர்ச்சியால் 2027-ல் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
உங்க உடல் எடையை டக்குனு குறைக்க... வெங்காயத்தை இப்படி சாப்பிட்டா போதுமாம் தெரியுமா?
வெங்காயத்தில் கலோரிகள் மிகவும் குறைவாக உள்ளது. நிபுணர்களின் கூற்றுப்படி, 1 கப் நறுக்கிய வெங்காயம் 64 கலோரிகளை மட்டுமே எடுத்துச் செல்கிறது. எனவே எடை இழப்பு பயணத்தின் போது அதன் நுகர்வு பாதுகாப்பானது.
தற்போது இருக்கக்கூடிய உடல் நல பிரச்சனைகளில் மிகவும் பொதுவானது உடல் பருமன். உடல் பருமனால் பெரும்பாலான மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். உடல் எடை மற்றும் தொப்பையை குறைப்பது என்பது அவ்வளவு எளிதானதல்ல. உடல் எடையை குறைக்க மக்கள் பல்வேறு முயற்சிகளை மேற்கொள்கிறார்கள். பொதுவாக ஆரோக்கியமான உணவு திட்டம் மற்றும் உடற்பயிற்சி செய்வதன் மூலம் உடல் எடையை குறைக்கலாம். உடல் எடையைக் குறைக்கும் டயட் என்று வரும்போது, எதைச் சாப்பிடுவது, எதைத் தவிர்க்க வேண்டும் என்பதை நினைத்து அடிக்கடி கவலைப்படுகிறோம்.

உங்கள் சமையலறையில் எப்போதும் இருக்கும் ஒரு உணவு பொருள் உடல் எடையை குறைக்க உதவும். அவை வெங்காயம். வெங்காயம் ஒரு பயனுள்ள எடை இழப்பு ஊக்கியாக இருக்கும். எப்படி, ஏன் என்று யோசிக்கிறீர்களா? மேலும் அறிய இக்கட்டுரையை படியுங்கள்.

நார்ச்சத்து நல்ல ஆதாரம்
வெங்காயம் நார்ச்சத்துக்கான நல்ல மூலமாகும். 1 கப் வெங்காயத்தில் வெறும் 3 கிராம் நார்ச்சத்து உள்ளது. எனவே, தினசரி உணவில் வெங்காயத்தை அதிகம் சேர்த்துக்கொள்ளலாம். மேலும், சுகாதார நிபுணர்களின் கூற்றுப்படி, வெங்காயத்தில் காணப்படும் கரையக்கூடிய பிசுபிசுப்பான நார்ச்சத்து திருப்தியை மேம்படுத்த உதவுகிறது மற்றும் எடை இழப்பு பயணத்தின் போது அதிகமாக சாப்பிடுவதை தவிர்க்க உதவுகிறது.

கலோரிகள் குறைவு
வெங்காயத்தில் கலோரிகள் மிகவும் குறைவாக உள்ளது. நிபுணர்களின் கூற்றுப்படி, 1 கப் நறுக்கிய வெங்காயம் 64 கலோரிகளை மட்டுமே எடுத்துச் செல்கிறது. எனவே எடை இழப்பு பயணத்தின் போது அதன் நுகர்வு பாதுகாப்பானது.

குவெர்செடின் நிறைந்தது
வெங்காயத்தில் குவெர்செடின் என்ற தாவர கலவையும் நிறைந்துள்ளது. இது ஒரு ஃபிளாவனாய்டு ஆகும். இது உடல் பருமனைத் தடுக்கும் பண்புகளைக் கொண்டுள்ளது மற்றும் உடலுக்கு ஆரோக்கியமானதாக கருதப்படுகிறது. மேலும், அவை உயிரணு சவ்வுகளை சேதப்படுத்தும், டிஎன்ஏவை சேதப்படுத்தும் மற்றும் உயிரணு இறப்பைக் கூட ஏற்படுத்தும் ஃப்ரீ ரேடிக்கல்கள் எனப்படும் உடலிலுள்ள துகள்களை அழிக்க உதவுகின்றன.

எளிதான வெங்காய சமையல்
வெங்காயம் பெரும்பாலும் உணவின் சுவையை அதிகரிக்க பயன்படுத்தப்படும் ஒரு உணவு பொருள். அதே வேளையில், எடை இழப்பு சமையல் குறிப்புகளிலும் இது முக்கிய மூலப்பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. உதாரணமாக, வெங்காய சாறு, வெறும் வயிற்றில் உட்கொள்ளும் போது, உங்களுக்கு பல அதிசயங்களைச் செய்யலாம். எளிய மற்றும் எளிதான வெங்காய சமையல் குறிப்புகளை தெரிந்துகொள்ளுங்கள்.

வெங்காய சாறு
ஒரு பாத்திரத்தில் 1 கப் தண்ணீரை ஊற்றி, உரிக்கப்பட்ட வெங்காயத்தை க்யூப்ஸாக வெட்டி, அதில் சேர்க்கவும். நன்கு கொதிவந்ததும், அடுப்பை அனைத்து சிறிது நேரம் குளிர்விக்கபட வேண்டும். பின்னர், இந்த கலவையை நன்கு கலக்கவும். இந்த சாற்றை ஒரு கிளாஸில் ஊற்றி குடிக்கவும்.

வெங்காய சூப்
ஒரு கடாயில், 1 டீஸ்பூன் எண்ணெய் மற்றும் 2 பூண்டு பல் சேர்த்து நன்றாக வதக்கவும். அடுத்து, 2 நறுக்கிய வெங்காயம் மற்றும் நீங்கள் விரும்பிய 1/2 கப் காய்கறிகளைச் சேர்க்கவும். கிளறி 2-5 நிமிடங்கள் சமைக்கவும். தேவையான அளவு தண்ணீர், உப்பு மற்றும் மிளகு சேர்த்து, 20 நிமிடங்கள் சமைக்கவும். இப்போது சுவையான வெங்காய சூப் தயார். சூடாக பரிமாறவும்.

வெங்காயம் மற்றும் வினிகர்
ஒரு வெங்காயத்தை தோலுரித்து சிறிய துண்டுகளாக நறுக்கவும். பகடைகளை கரும்பு வினிகரில் (சிர்கா) ஊறவைக்கவும். அரிசி மற்றும் பருப்புடன் சாலட்டாக நீங்கள் சாப்பிடலாம்.



Click it and Unblock the Notifications