Latest Updates
-
1 கப் ஜவ்வரிசி இருந்தா.. காலையில் 5 நிமிடத்தில் இந்த டிபனை செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 20 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு பெரிய நஷ்டம் ஏற்பட வாய்ப்பிருக்காம் - ஜாக்கிரதை -
ஜூன் 23-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், யாருக்கு மோசமாகவும் இருக்கும்? -
சனிபகவான்-புதன் உருவாக்கும் அரிய கிரக சேர்க்கையால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் இவங்கதான் -
தக்காளி சட்னி அரைக்கும் போது இந்த ஒரு பொருளை சேர்த்து அரைச்சு பாருங்க - ஆரோக்கியமாவும், சுவையாவும் இருக்கும் -
முகத்தில் உள்ள கருமையைப் போக்கணுமா? அப்ப கடலை மாவு வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
இன்டர்நெட் வசதியே இல்லாத உலகின் மிகவும் மோசமான நாடு எது தெரியுமா? இங்க தங்கத்தை விட இன்டர்நெட் காஸ்ட்லி -
1 கப் கோதுமை மாவு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செஞ்சு குடுங்க... -
இந்த 4 மாதத்தில் பிறந்தவர்கள் பணத்தை அலட்சியமாக தண்ணீர் போல செலவழிப்பார்களாம் - உங்க பிறந்த மாதம் என்ன? -
சிம்ம ராசிக்கு செல்லும் சுக்கிரன்: ஜூலையில் இந்த 3 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது...
உங்க வீட்டுல கொரோனா நோயாளி இருக்காங்களா? அப்ப இத செய்யுங்க.. இல்ல கஷ்டப்படுவீங்க..
வீட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஒருவர் தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் போது, வீட்டில் உள்ளோர் நோயாளியைக் கவனித்துக் கொள்வதைத் தவிர, நோய்த்தொற்றிக் கொள்ளாமல் இருக்க பாதுகாப்பாகவும் இருக்க வேண்டும்.
கொரோனாவின் இரண்டாம் அலை மிகவும் மோசமாக உள்ளது. இந்த இரண்டாம் அலையில் ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். முந்தைய அலையை விட இரண்டாம் அலையில் கோவிட் தொற்று மிகவும் வேகமாக மக்களிடையே பரவிக் கொண்டிருக்கிறது. மேலும் ஆரம்ப காலத்தில் பரவிய கொரோனாவை விட தற்போது பரவும் கொரோனாவால் பலர் உயிரை இழக்கிறார்கள். அதோடு தற்போது ஆக்சிஜன் பற்றாக்குறையும் சேர்ந்துள்ளதால், கொரோனாவால் உயிரிழப்போரின் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளது.

கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட அனைவருமே மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதில்லை. நோய்த்தொற்றின் தீவிரத்தைப் பொறுத்தே, கொரோனா நோயாளிகளை மருத்துவமனையில் அனுமதிக்க மருத்துவர்கள் கூறுகிறார்கள். இதனால் தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்ட பெரும்பாலானோர் வீட்டிலேயே தனிமைப்படுத்தி இருந்து வருகிறார்கள். இப்படி ஒருவரது வீட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஒருவர் தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் போது, வீட்டில் உள்ளோர் நோயாளியைக் கவனித்துக் கொள்வதைத் தவிர, நோய்த்தொற்றிக் கொள்ளாமல் இருக்க பாதுகாப்பாகவும் இருக்க வேண்டும்.
அதற்கு ஒருசில பாதுகாப்பான விஷயங்களை வீட்டில் உள்ளோர் தவறாமல் மேற்கொள்ள வேண்டும். கீழே அதுப்போன்ற விஷயங்களின் பட்டியல் தான் கொடுக்கப்பட்டுள்ளது. அது என்னவென்பதைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

மாஸ்க் அணியவும்
உங்கள் வீட்டில் கோவிட் நோயாளி தனிமைப்படுத்திக் கொண்டு, தனியாக ஒரு அறையில் இருந்தால், வீட்டில் உள்ளோர் அனைவருமே நாள் முழுவதும் மாஸ்க் அணிந்திருக்க வேண்டும். அதோடு தேவையில்லாமல் மாஸ்க்கை அடிக்கடி தொடுவதைத் தவிர்க்க வேண்டும். மேலும் மாஸ்க்கை கழற்றிய பின், தவறாமல் கைகளைக் கழுவ வேண்டும்.

கைகளை அடிக்கடி கழுவவும்
ஆக்சிஜன் அளவைக் கண்காணிப்பது முதல் உணவு மற்றும் மருந்து கொடுப்பது வரை, பல வழிகளில் கொரோனா நோயாளிக்கு உதவ வேண்டியிருக்கலாம். ஆகவே அடிக்கடி கைகளை சுத்தம் செய்ய தவறாதீர்கள். முக்கியமாக தேவையில்லாமல் கண்கள், மூக்கு மற்றும் வாய் பகுதியைத் தொடுவதைத் தவிர்த்திடுங்கள்.

தனி பாத்திரத்தைப் பயன்படுத்தவும்
வீட்டில் கொரோனா நோயாளி இருந்தால், அவர்களுக்கு என்று தனி பாத்திரத்தைப் பயன்படுத்துங்கள். அவர்களுக்கு பயன்படுத்தும் பாத்திரத்தை மற்ற பாத்திரங்களுடன் சேர்த்து பயன்படுத்த வேண்டாம். அதுமட்டுமின்றி, அவர்களுக்கு பயன்படுத்தும் பாத்திரத்தை தனியாக கழுவுங்கள். முக்கியமாக அந்த பாத்திரங்களைக் கழுவும் போது மாஸ்க் அணிந்து கொள்வதோடு, கையில் கையுறை அணியுங்கள் மற்றும் சுடுநீரால் அவர்களுக்கு பயன்படுத்தும் பாத்திரங்களைக் கழுவுங்கள். இறுதியாக பாத்திரங்களைக் கழுவிய பின் தவறாமல் உங்கள் கைகளை நன்கு சுத்தமாக கழுவுங்கள்.

மேற்பரப்புகளை சுத்தம் செய்யவும்
நீங்கள் அடிக்கடித் தொடும் மேற்பரப்புகளான ஸ்விட் போர்டு, டேபிள் டாப், ரிமோட், கதவு கைப்பிடி, குழாய் போன்றவற்றை தினமும் சுத்தம் செய்யுங்கள். சொல்லப்போனால் ஒரு நாளைக்கு பல முறை அந்த மேற்பரப்புகளை சுத்தம் செய்ய முயலுங்கள்.

ஆரோக்கியத்தைக் கண்காணிக்கவும்
நீங்கள் ஒரு கோவிட் நோயாளியைக் கவனிக்கும் போது, உங்களது ஆரோக்கியத்தையும் தவறாமல் கண்காணிக்க வேண்டும். இருமல், காய்ச்சல், மூச்சுத் திணறல் போன்ற எந்த அறிகுறிகளை அனுபவிக்கிறீர்களா என்பதை கவனிக்கவும். ஒருவேளை நீங்கள் அவர்களுடன் நெருங்கியத் தொடர்பில் இருந்தால், நீங்களும் 14 நாட்களுக்கு வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட வேண்டும்.



Click it and Unblock the Notifications