For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கொரோனா இந்த வகை இரத்த பிரிவினரின் நுரையீரல், சிறுநீரகங்களை சேதப்படுத்துமாம்- ஆய்வில் அதிர்ச்சி தகவல்

ஒரு ஆய்வின் படி, O வகை இரத்த பிரிவினருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்படுவதற்கான ஆபத்து குறைவாக இருப்பதுடன், ஒருவேளை பாதிக்கப்பட்டால் உறுப்பு சிக்கல்கள் உள்ளிட்ட கடுமையான விளைவுகளின் சாத்தியக்கூறுகள் குறை

|

உலக மக்கள் தொகையை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்துக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸிற்கு எந்தவொரு தடுப்பு மருந்தும் 10 மாதங்களுக்கு மேலாகியும் இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை. அதோடு நாளுக்கு நாள் இந்த வைரஸ் குறித்த புதிய விஷயங்கள் ஆராய்ச்சியாளர்களும் கண்டுபிடித்து வருகிறார்கள்.

People With This Blood Group Less Susceptible To COVID-19: Lung, Kidney Damage Likely In A, AB Blood Types

அப்படி வைரஸ் குறித்து மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வின் படி, O வகை இரத்த பிரிவினருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்படுவதற்கான ஆபத்து குறைவாக இருப்பதுடன், ஒருவேளை பாதிக்கப்பட்டால் உறுப்பு சிக்கல்கள் உள்ளிட்ட கடுமையான விளைவுகளின் சாத்தியக்கூறுகள் குறைவாக இருப்பதாகவும் தெரிய வந்துள்ளது.

MOST READ: 28 நாட்கள் ரூபாய் நோட்டுகளில் உயிருடன் இருக்கும் கொரோனா வைரஸை எப்படி அழிக்கலாம்? இத படிங்க...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
டென்மார்க் ஆய்வு

டென்மார்க் ஆய்வு

'Blood Advances' என்னும் இதழில் வெளிவந்த இரண்டு ஆய்வுகளில், O வகை இரத்த பிரிவினருக்கு கொரோனா வைரஸ் தொற்றின் அபாயம் குறைவாக இருப்பதாக தெரிவிக்கின்றன. தெற்கு டென்மார்க் பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ப்பட்ட ஒரு ஆய்வு, சரியான கட்டுப்பாட்டுக் குழுவைக் கருத்தில் கொள்வது மிகவும் முக்கியம் என்று கூறுகிறது. ஏனெனில் இரத்த வகை பாதிப்பு வெவ்வேறு இனக்குழுக்கள் மற்றும் வெவ்வேறு நாடுகளில் கணிசமாக வேறுபடலாம்.

டென்மார்க் ஒரு சிறிய, இனரீதியாக ஒரே மாதிரியான நாடு. இது பொது சுகாதார அமைப்பு மற்றும் ஆய்வக தரவுகளுக்கான மைய பதிவேடு. ஆகவே இந்த ஆய்விற்கான கட்டுப்பாடு மக்கள் தொகை அடிப்படையிலானது என்பதால் கண்டுபிடிப்புகளுக்கு வலுவான அடித்தளத்தை அளிக்கிறது. இந்த ஆய்விற்கு, கோவிட்-19-க்கு பரிசோதிக்கப்பட்ட 473,000-க்கும் மேற்பட்ட நபர்களிடம் இருந்து டேனிஷ் சுகாதார பதிவேடு தரவை ஆராய்ச்சி குழுவானது பொது மக்களிடம் இருந்து 2.2 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தொகைக் கொண்ட கட்டுப்பாட்டுக் குழுவின் தரவுகளுடன் ஒப்பிட்டுப் பார்த்தது.

குரூப் A மற்றும் AB இரத்த பிரிவினருக்கு கடுமையான விளைவு

குரூப் A மற்றும் AB இரத்த பிரிவினருக்கு கடுமையான விளைவு

கோவிட்-19 பாசிட்டிவ் கொண்ட தரவுகளை சோதித்ததில், ஆராய்ச்சியாளர்கள் O வகை இரத்தப்பிரிவினர் குறைவாகவும், A, B மற்றும் AB வகை இரத்தப்பிரிவினர் அதிகம் இருப்பதையும் கண்டறிந்தனர். ஆய்வின் முடிவானது O வகை இரத்தப்பிரிவினரைக் காட்டிலும், A, B அல்லது AB வகை இரத்தப்பிரிவினர் கோவிட்-19 நோயால் அதிகம் பாதிக்கப்படக்கூடும் என்று தெரிவிக்கின்றன. மேலும் A, B மற்றும் AB இரத்த வகைகளுக்கு இடையிலான நோய்த்தொற்று விகிதத்தில் ஆராய்ச்சியாளர்கள் எந்தவொரு குறிப்பிடத்தக்க வேறுபாட்டையும் காணவில்லை. அதோடு கோவிட்-19 நோய்த்தொற்றின் கடுமையான மருத்துவ விளைவுகளின் அதிக ஆபத்துடன் தொடர்புடைய இரத்தக்குழுக்களாக A மற்றும் AB என்பதும் கண்டறியப்பட்டுள்ளன.

நுரையீரல் மற்றும் சிறுநீரக பாதிப்பு

நுரையீரல் மற்றும் சிறுநீரக பாதிப்பு

தனித்தனியாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் படி, O அல்லது B வகை இரத்த பிரிவினரைக் காட்டிலும், A மற்றும் AB வகை இரத்தப்பிரிவினரிடம், கோவிட்-19 நோய் தீவிரமாக இருப்பது தெரிய வந்தன. இரத்த பிரிவினர் A அல்லது AB நோயாளிகளுக்கு இயந்திர காற்றோட்டம் தேவைப்படுவதாகவும் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர். இதனால் இவர்களைத் தாக்கும் கொரோனாவினால், இத்தகையவர்களுக்கு நுரையீரலில் அதிக காயம் ஏற்படுவதாகவும் கூறுகின்றனர். அதோடு A மற்றும் AB வகை இரத்தப்பிரிவினருக்கு சிறுநீரக செயலிழப்புக்கு தேவையான டயாலிசிஸ் தேவைப்படுவதையும் கண்டறிந்தனர்.

ஆய்வின் தனித்துவமான பகுதி

ஆய்வின் தனித்துவமான பகுதி

இந்த ஆய்வின் ஒரு தனித்துவமான பகுதி கோவிட்-19 இல் இரத்த வகையின் தீவிரத்தன்மையின் மீது கவனத்தை செலுத்துவதாகும். இந்த ஆய்வில் ஆராய்ச்சியாளர்கள் நுரையீரல் மற்றும் சிறுநீரக பாதிப்புக்களைக் கவனித்தனர். மேலும் எதிர்கால ஆய்வில், இரத்தக்குழு மற்றும் கொரோனாவால் மற்ற உறுப்புக்களில் ஏற்படும் தாக்கத்தை கண்டறிய விரும்புகிறார்கள்.

A வகை இரத்தப்பிரினவருக்கு அதிக ஆபத்து

A வகை இரத்தப்பிரினவருக்கு அதிக ஆபத்து

முன்னதாக, கிளினிக்கல் தொற்று நோய்கள் இதழில் வெளியிடப்பட்ட மற்றொரு ஆய்வில், ‘ஏ' இரத்தக் குழு உள்ளவர்கள் கோவிட் -19 நோய்த்தொற்றுக்கு ஆளாக நேரிடும் என்றும், இரத்த வகை ‘ஓ' உள்ளவர்களுக்கு வைரஸ் பாதிப்பு ஏற்படுவதற்கான ஆபத்து குறைவாக இருப்பதாகவும் கண்டறியப்பட்டது.

அமெரிக்காவின் முந்தைய ஆய்வு

அமெரிக்காவின் முந்தைய ஆய்வு

அமெரிக்காவைச் சேர்ந்த உயிரி தொழில்நுட்ப நிறுவனமான 23andMe இன் முந்தைய ஆய்வில், O வகை இரத்தப்பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு கோவிட்-19 நோய்த்தொற்று ஏற்படுவது குறைவு என்று கூறப்பட்டது. மற்ற வகை இரத்த பிரிவினர்களைக் காட்டிலும் O வகை இரத்த பிரிவினர்கள் கோவிட்-19 க்கு நேர்மறை சோதனை செய்வதற்கான வாய்ப்பு 9-18 சதவீதம் குறைவாக இருப்பதாக இந்த ஆய்வு கூறியிருந்தது.

AB-க்கு அதிக வாய்ப்பு

AB-க்கு அதிக வாய்ப்பு

இந்த ஆய்வில் AB வகை இரத்தப் பிரிவைச் சேர்ந்தவர்கள் கோவிட்-19 சோதனையில் பாசிட்டிவ் வருவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது என்றும், அதைத் தொடர்ந்து B வகை இரத்தப் பிரிவினருக்கும், அதன் பின் A வகை இரத்த பிரிவினருக்கும் உள்ளது என்றும் ஆய்வில் கண்டறியப்பட்டது.

எதுவாயினும், நாம் எச்சரிக்கையுடன் இருந்தால், கொரோனா நம்மை அண்டாமல் தடுக்கலாம். எனவே சுத்தம் மற்றும் சமூக விலகலைக் கடைப்பிடித்து பாதுகாப்புடன் இருப்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

People With This Blood Group Less Susceptible To COVID-19: Lung, Kidney Damage Likely In A, AB Blood Types

Two studies published in the journal Blood Advances suggest that individuals with blood type 'O' may be less vulnerable to Covid-19 infection.
Desktop Bottom Promotion