For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அதிகப்படியான தூக்கம் உங்க உயிருக்கு ஆபத்தான 'இந்த' நோயை ஏற்படுத்துமாம்...!

அதிகமாக தூங்குபவர்கள் கொலஸ்ட்ரால் அளவை அதிகரிப்பதைக் காணலாம், இது எடை அதிகரிப்பதற்கும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்திற்கும் வழிவகுக்கும்.

|

உடலின் ஆரோக்கியமான செயல்பாட்டிற்கு குறைந்தது ஆறு முதல் எட்டு மணிநேர தூக்கம் பரிந்துரைக்கப்படுகிறது. மேலும், வயதை பொறுத்தும் தூக்க கூடிய நேரம் அதிகரிக்கலாம். மக்களிடையே தூக்கமின்மை ஒரு பொதுவான பிரச்சினையாக மாறி வருகிறது. அதிக உறக்கமும் புறக்கணிக்கப்படக் கூடாது, ஏனெனில் இது பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கும். வார இறுதி நாட்களில் அதிக தூக்கம் உங்களுக்கு மகிழ்ச்சியாக தோன்றினாலும், தினசரி அதிகமாகத் தூங்குவது மருத்துவ சுகாதார நிலையை குறிக்கும்.

Oversleeping can increase risk of stroke: Study

ஆறு முதல் எட்டு மணி நேரம் வரை தூங்குபவர்களுடன் ஒப்பிடும்போது, தினமும் எட்டு மணி நேரத்திற்கும் மேலாக தூங்குபவர்களுக்கு பக்கவாதம் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
உட்கார்ந்த வாழ்க்கை முறை காரணமாக, 25 வயதுக்குட்பட்டவர்கள் மாரடைப்பு காரணமாக இறக்கின்றனர். இக்கட்டுரையில், அதிக தூக்கம் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை எவ்வாறு அதிகரிக்கும் என்று காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஆய்வு

ஆய்வு

டிசம்பர் 11, 2019 அன்று அமெரிக்கன் அகாடமி ஆஃப் நியூராலஜியின் மருத்துவ இதழான நியூராலஜி இதழின் ஆன்லைன் பதிப்பில், சராசரியாக 62 விஞ்ஞானிகள் கொண்ட குழு, 32,000 பேருக்கு பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை மதிப்பீடு செய்தனர். விஞ்ஞானிகள் பக்கவாதம் விகிதங்களை ஆய்வில் பங்கேற்பாளர்களின் சுய-அறிக்கை தூக்க முறைகளுடன் இணைத்தனர்.

பக்கவாதம் எதனால் ஏற்படுகிறது?

பக்கவாதம் எதனால் ஏற்படுகிறது?

மூளையின் ஒரு பகுதிக்கு இரத்த ஓட்டம் தடைபடும் போது அல்லது குறைந்து, மூளை திசுக்களுக்கு சேதம் ஏற்படும் போது பக்கவாதம் ஏற்படுகிறது. மூளையின் எந்த பகுதி பாதிக்கப்பட்டுள்ளதோ, அதைப் பொறுத்து நமது உடலின் பாகங்களில் குறைபாடுகள் ஏற்படும்.

பகுப்பாய்வு

பகுப்பாய்வு

ஆய்வின்படி, இரவில் எட்டு மணி நேரத்திற்கும் குறைவாக தூங்குபவர்களை விட, ஒன்பது மணி நேரத்திற்கும் மேலாக தூங்குபவர்களுக்கு பக்கவாதம் ஏற்படும் அபாயம் 23 சதவீதம் அதிகமாம். மேலும், 30 நிமிடங்களுக்கு குறைவாக தூங்குபவர்களை விட, பகலில் குறைந்தது 90 நிமிடங்கள் தூங்குபவர்களுக்கு பக்கவாதம் வருவதற்கான வாய்ப்புகள் 25 சதவீதம் அதிகம்.

மனச்சோர்வை ஏற்படுத்தும்

மனச்சோர்வை ஏற்படுத்தும்

நீண்ட நேரம் தூங்குபவர்கள் அல்லது அதிக நேரம் தூங்குவதாகக் கூறுபவர்களுக்கு பக்கவாதம் ஏற்படும் அபாயம் 82 சதவீதம் அதிகரிக்குதாம். பக்கவாதத்திற்குப் பிறகும் தூங்குவதில் சிக்கல்கள் அடிக்கடி ஏற்படுகின்றன. உயிர் பிழைத்தவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் தூங்குவதில் சிரமப்படுகிறார்கள். இது மீட்சியை சீர்குலைத்து, மனச்சோர்வை உருவாக்கும் மற்றும் நினைவக சிக்கல்களை ஏற்படுத்தும்.

அதிக தூக்கம் பக்கவாதம் ஏற்படும் வாய்ப்புகளை எவ்வாறு அதிகரிக்கும்?

அதிக தூக்கம் பக்கவாதம் ஏற்படும் வாய்ப்புகளை எவ்வாறு அதிகரிக்கும்?

அதிகப்படியான தூக்கம் பக்கவாதத்துடன் எவ்வாறு தொடர்புடையது என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. ஆனால் அதிகமாக தூங்குபவர்கள் கொலஸ்ட்ரால் அளவை அதிகரிப்பதைக் காணலாம், இது எடை அதிகரிப்பதற்கும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்திற்கும் வழிவகுக்கும்.

நல்ல செய்தி

நல்ல செய்தி

ஆரோக்கியமான உணவு மற்றும் வாழ்க்கை முறை தேர்வுகள் 80 சதவீதம் பக்கவாதம் அபாயத்தைத் தவிர்க்க உதவும் என்று மருத்துவர்கள் நம்புகிறார்கள். எனவே, ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுங்கள், குப்பை உணவுகளை தவிர்த்துவிடுங்கள் மற்றும் புகைபிடிக்கும் பழக்கத்தை நிறுத்துங்கள். உங்கள் இரத்த அழுத்தம், சர்க்கரை மற்றும் எடையைக் கண்காணித்து சிறந்த வாழ்க்கையைப் பெறவும், பக்கவாதம் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கவும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Oversleeping can increase risk of stroke: Study

Here we are talking about the Oversleeping can increase risk of stroke: Study.
Story first published: Tuesday, November 9, 2021, 13:17 [IST]
Desktop Bottom Promotion