For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அதிகமாக தண்ணீர் குடித்தால் உயிரிழப்பு ஏற்படும் என்பது உண்மையா?

ஹைப்போநெட்ரோமியா பற்றி நீங்கள் கேள்வி பட்டது உண்டா? நமது உடலில் உள்ள சோடியம் அளவானது சாதாரண அளவை விட குறைவாக உள்ள நிலை தான் ஹைப்போநெட்ரோமியா என்று அழைக்கப்படுகிறது.

|

ஹைப்போநெட்ரோமியா பற்றி நீங்கள் கேள்வி பட்டது உண்டா? நமது உடலில் உள்ள சோடியம் அளவானது சாதாரண அளவை விட குறைவாக உள்ள நிலை தான் ஹைப்போநெட்ரோமியா என்று அழைக்கப்படுகிறது. இந்த ஹைப்போநெட்ரோமியா நோயாளிகளுக்கு தண்ணீர் ஒரு எதிரி என்றே கூறலாம்.

Overhydration Causes Hyponatremia

நாமெல்லாம் என்ன செய்வோம் எப்போது வேண்டுமானாலும் தண்ணீர் குடிப்போம். ஆனால் இந்த பாதிப்பு உடையவர்கள் தாகம் எடுக்கும் போது மட்டும் தான் தண்ணீர் குடிக்க வேண்டுமாம். அதையும் மீறி அதிகமாக குடித்தால் உயிரிழப்பு கூட ஏற்படும் அபாயம் உள்ளது. இது கேட்பதற்கு உங்களுக்கு ஆச்சர்யமாக இருக்கலாம். ஆனால் அது தான் உண்மை என்கிறார்கள் மருத்துவர்கள்.

உடம்பில் சோடியம் அளவு குறைவாக உள்ள நபர்கள் தேவைப்படும் போது மட்டுமே தண்ணீர் குடிக்க வேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள். நாம் உடற்பயிற்சி செய்த பின் நாம் தண்ணீர் குடிப்பது மாதிரி ஹைப்போநெட்ரோமியா நோயாளிகளால் நிறைய தண்ணீர் குடிக்க முடியாது. அவர்களின் தாகத்திற்கு ஏற்ப மட்டுமே தண்ணீர் குடிப்பது அவசியமாகிறது. இல்லையென்றால் பாதிப்பு தீவிரமடைய வாய்ப்புள்ளதாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஹைப்போநெட்ரோமியா என்றால் என்ன?

ஹைப்போநெட்ரோமியா என்றால் என்ன?

ஹைப்போநெட்ரோமியா என்பது மனித உடலில் சோடியம் குறைவாக இருப்பதால் ஏற்படும் ஒரு மருத்துவ நிலை. இது நீண்ட காலத்திற்கு மற்ற நோய்களைத் தூண்டும் வாய்ப்புள்ளது. இது நோயாளிக்கு ஆபத்தானது என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். இதற்கு முக்கிய காரணமாக உணவில் சேர்க்கப்படும் உப்பு குறைவாக இருப்பது காரணமாகிறது. உணவில் சோடியம் உப்பு சேர்க்கப்படுவது அவசியமாகிறது. நமது உடலில் உள்ள சோடியம் அளவு சீராக இருக்க வேண்டும் என்றால் உணவில் சேர்க்கப்படும் உப்பும் போதுமானதாக இருக்க வேண்டும். அப்படி உப்பிலுள்ள சோடியம் அளவு குறையும் போது நமக்கு ஹைப்போநெட்ரோமியா ஏற்படுகிறது.

சோடியத்தின் பங்கு

சோடியத்தின் பங்கு

பொதுவாக, நம் உடலில் சோடியத்தின் அளவு 135-145 mEq/L க்கு இடையில் இருக்கும். சோடியம் அளவு 135 mEq/L க்கும் குறைவாக இருந்தால் ஹைபோநெட்ரோமியா ஏற்படலாம். சோடியம் என்பது நமது உடலில் உள்ள ஒரு வகை எலக்ட்ரோலைட் ஆகும். இது உடலில் உள்ள செல்களின் நீர் நிலைகளை பராமரிக்கிறது.

மூளையில் இருந்து உடலின் மற்ற பகுதிகளுக்கு தகவல்களை பரிமாற்றம் செய்வதிலும் சோடியம் மிக முக்கியமான பங்கு வகிக்கிறது. தசை செயல்பாட்டை பராமரிக்க உதவுகிறது. இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவுகிறது. எனவே நீங்கள் அதிகமாக தண்ணீர் குடிக்கும் போது அவை செல்களின் சோடியம் அளவில் மாற்றத்தை ஏற்படுத்தும். இதனா‌ல் அதிகப்படியான தண்ணீர் செல்களுக்குள் சென்று செல்கள் விரிவடைய ஆரம்பிக்கும். இப்படி செல்கள் விரிவடைவதால் பலவித பிரச்சனைகள் உண்டாகி, உயிருக்கே ஆபத்தாக வாய்ப்புள்ளது.

அதிக நீர்ச்சத்து மற்றும் ஹைப்போநெட்ரோமியா

அதிக நீர்ச்சத்து மற்றும் ஹைப்போநெட்ரோமியா

அதே மாதிரி உடற்பயிற்சி செய்யும் நபர்களுக்கும் இந்த ஹைப்போநெட்ரோமியா ஏற்படுகிறது. உடற்பயிற்சி செய்த பின் தாகத்திற்கு ஏற்ப மட்டும் தண்ணீர் அருந்த வேண்டும். தாகத்தையும் மீறி அதிகப்படியான தண்ணீர் குடிக்கும் போது உடற்பயிற்சியுடன் தொடர்புடைய ஹைபோநெட்ரோமியாவைத் தூண்டுகிறது. வனப்பகுதி மற்றும் சுற்றுச்சூழல் மருத்துவம்' என்ற தலைப்பில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியில், ஹைபோநெட்ரோமியா நோயாளிகளுக்கு சில வழிகாட்டுதல்களை வனப்பகுதி மருத்துவ சங்கம் கூறியுள்ளது . வெப்ப பக்கவாதம் அல்லது வெப்ப சோர்வு போன்ற நோயாளிகளை ஆராய்ந்த பிறகு இதை கூறுகின்றனர்.

40 ஆண்டுகால உலகளாவிய ஆவணமாக்கலுக்கு பிறகும் இந்த உடற்பயிற்சி ஹைப்போநெட்ரோமியா பாதிப்பு உயிருக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடும் என்கிறார்கள். வெப்பம் சம்பந்தமான நோய்கள் அல்லது நீர்ச்சத்து பற்றாக்குறை ஏற்பட்டால் அவர்களுக்கு வாய்வழி ஹைப்போடோனிக் திரவ உட்கொள்ளலை ஊக்குவிக்கிறார்கள் மருத்துவர்கள். விரைவான ஐசோடோனிக் IV திரவங்களை வழங்குதல் போன்ற சிகிச்சைகளை வழங்குகிறார்கள். இருப்பினும் இறப்பு விகிதம் அதிகமாகிறது என்கிறார்கள் மருத்துவர்கள்.

சில சிறப்பம்சங்கள்:

சில சிறப்பம்சங்கள்:

* நீடித்த உடற்பயிற்சியின் போது நீங்கள் குடிக்கும் அதிகப்படியான நீர் இதற்கு காரணமாகிறது. எனவே அதை தவிர்க்க வலியுறுத்தப்படுகிறது.

* உடற்பயிற்சி செய்யும் நபர்களோ அல்லது ஹைப்போநெட்ரோமியா உள்ள நபர்களோ தாகத்தை தீர்க்கும் அளவு மட்டுமே தண்ணீர் குடியுங்கள்.

* ஹைப்போநெட்ரோமியா இருப்பவர்கள் உப்பு பிஸ்கட் மற்றும் உப்பை உணவில் சேர்ப்பது, உப்பு பண்டங்களை உட்கொள்ளுங்கள்

ஹைப்போநெட்ரோமியாவின் அறிகுறிகள்:

ஹைப்போநெட்ரோமியாவின் அறிகுறிகள்:

* குமட்டல் மற்றும் வாந்தி

* தலைவலி

* குழப்பம்

* ஆற்றல் இழப்பு மற்றும் சோர்வு

* தசை பலவீனம், பிடிப்பு அல்லது பிடிப்புகள்

* வலிப்பு

* கோமா

* வாந்தியெடுத்தல், தசைப்பிடிப்பு மற்றும் கோமா போன்ற கடுமையான அறிகுறிகள் தென்பட்டால் உடனே மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுவது நல்லது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Overhydration Causes Hyponatremia

Do you know over hydration causes hyponatremia? Read on to know more...
Desktop Bottom Promotion