For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்கள் எலும்புகள் மென்மையாகி விட்டதா? அப்போ அது இந்த நோயா தான் இருக்கும்...

ஆஸ்டியோமலாசியா என்ற நோய் எலும்புகளை பாதிக்கும் ஒரு வகை நோயாகும். இது எலும்புகளை கொஞ்சம் கொஞ்சமாக மென்மையாக்கி பலவீனப்படுத்திவிடும். இது உலகளவில் 1000 பேரில் ஒருவரை பாதிக்கிறது.

|

தற்போது எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சனையால் ஏராளமானோர் பாதிக்கப்படுகின்றனர். அதில் நம்மில் பலருக்கும் தெரிந்த எலும்பு சம்பந்தமான நோய்களானால் ஆர்த்ரிடிஸ், ஆஸ்டியோபோரோசிஸ் போன்றவை தான். ஆனால் ஆஸ்டியோமலாசியா என்பதும் எலும்பு சம்பந்தமான நோய் என்பது தெரியுமா?

Osteomalacia: Causes, Symptoms, Risk Factors And Treatment

ஆம், ஆஸ்டியோமலாசியா என்ற நோய் எலும்புகளை பாதிக்கும் ஒரு வகை நோயாகும். இது எலும்புகளை கொஞ்சம் கொஞ்சமாக மென்மையாக்கி பலவீனப்படுத்திவிடும். இது உலகளவில் 1000 பேரில் ஒருவரை பாதிக்கிறது. ஆஸ்டியோமலாசியாவும் ஆஸ்டியோபோரோசிஸ் நோயும் ஒன்றல்ல. ஆஸ்டியோபோரோசிஸ் என்பது எலும்புகளை பலவீனப்படுத்தும். ஆனால் ஆஸ்டியோமலாசியா என்பது எலும்புகளை மென்மையாக்கும் நோயாகும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
காரணங்கள்

காரணங்கள்

கால்சியம், பாஸ்பேட், மெக்னீசியம், பாஸ்பரஸ் மற்றும் வைட்டமின் டி போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் வலுவான எலும்புகளை உருவாக்க உடலுக்கு தேவைப்படுகிறது. உடலில் இந்த அத்தியாவசியமான ஊட்டச்சத்துக்கள் இல்லாத போது, ஆஸ்டியோமலாசியா என்ற நோய் உங்களை தொற்றிக் கொள்கிறது. இந்த தாதுக்களை உடலால் சரியாக உறிஞ்ச முடியாவிட்டாலும் இந்த பாதிப்பு ஏற்படலாம்.

பாதிப்புகள்

பாதிப்புகள்

வைட்டமின் டி பற்றாக்குறை

வைட்டமின் டி சூரிய ஒளியில் இருந்து கிடைக்கும் முக்கியமான ஊட்டச்சத்து ஆகும். போதுமான சூரிய ஒளி கிடைக்காத பகுதியில் வசிக்கும் மக்கள் இந்த வைட்டமின் டி குறைப்பாட்டை பெறுகின்றனர். இந்த வைட்டமின் டி பற்றாக்குறை ஏற்பட்ட மக்களுக்கு ஆஸ்டியோமலாசியா என்ற நோய் ஏற்படுகிறது.

சிறுநீரக மற்றும் கல்லீரல் பிரச்சனைகள்

சிறுநீரக மற்றும் கல்லீரல் பிரச்சனைகள்

கல்லீரல் மற்றும் சிறுநீரகம் தான் நமது உடலில் வைட்டமின் டி சத்தை உறிஞ்ச முக்கிய பங்காற்றுகின்றன. இதன் செயல்பாட்டில் ஏதேனும் குறை ஏற்படும் போது வைட்டமின் டி சத்தை உறிஞ்சுவது தடை செய்யப்படுகிறது. இதனால் ஆஸ்டியோமலாசியா நோய் ஏற்படுகிறது.

செலியாக் நோய்

செலியாக் நோய்

செலியாக் நோய் ஒரு ஆட்டோ இம்யூன் கோளாறு ஆகும். பசையம் உள்ள உணவுப் பொருட்களை சாப்பிடுவது அழற்சியை ஏற்படுத்துகிறது. குளுட்டன் வகை உணவுகளை நாம் எடுத்துக் கொள்ளும் போது சிறு குடலில் நோயெதிர்ப்பு சக்தியைத் தூண்டுகிறது, இது படிப்படியாக சிறுகுடலின் புறணிக்கு சேதம் விளைவிக்கும் மற்றும் சில ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவதைத் தடுக்கிறது இது வைட்டமின் டி மற்றும் கால்சியம் குறைபாட்டிற்கு வழிவகுக்கும்.

அறுவை சிகிச்சைகள்

அறுவை சிகிச்சைகள்

பாதிக்கப்பட்ட சிறுகுடலின் பகுதியை அகற்ற மேற்கொள்ளும் குறிப்பிட்ட அறுவை சிகிச்சைகளால், வைட்டமின் டி மற்றும் கால்சியம் உறிஞ்சுவதில் சிக்கல் ஏற்படுகிறது. ஏனெனில் குடல்கள் தான் நமக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை உறிஞ்சித் தருகின்றன.

அறிகுறிகள்

அறிகுறிகள்

ஆஸ்டியோமலாசியாவின் ஆரம்ப கட்டத்தில் எந்தவித அறிகுறிகளும் தென்படாது. இதன் தீவிரம் அதிகமாகும் போது சில அறிகுறிகள் தென்படும்.

* எலும்புகளில் வலி குறிப்பாக இடுப்புப் பகுதியில் வலி ஏற்படுதல்

* கீழ் முதுகு, இடுப்பு, கால்கள், விலா எலும்புகள் மற்றும் இடுப்பு ஆகியவற்றில் மந்தமான வலி ஏற்படுதல்.

* குறைந்த அளவு கால்சியம் கை மற்றும் கால்களில் பிடிப்பு, கைகள், கால்கள் மற்றும் உங்கள் வாயைச் சுற்றியுள்ள உணர்வின்மை மற்றும் ஒழுங்கற்ற இதய துடிப்பை ஏற்படுத்தும்.

ஆபத்து காரணிகள்

ஆபத்து காரணிகள்

* அதீத சூரிய ஒளி படுதல்

* சருமத்தை மறைக்குமாறு முழு ஆடைகளை அணிதல்

* இந்திய துணைக் கண்டத்தைச் சேர்ந்தவர்களுக்கு ஆஸ்டியோமலாசியா வரும் அபாயம் உள்ளது. ஏனென்றால், அவர்களின் தோல் வைட்டமின் டி யை நன்கு உறிஞ்சாது. மேலும் அவர்களின் உணவில் வைட்டமின் டி குறைவு.

* இந்திய துணைக் கண்டத்தைச் சேர்ந்த பெரும்பாலான மக்கள் லாக்டோஸ் அழற்சி பெற்றவர்கள். இது கால்சியம் உறிஞ்சப்படுவதை பாதிக்கிறது.

ஆஸ்டியோமலாசியாவின் சிக்கல்கள்

ஆஸ்டியோமலாசியாவின் சிக்கல்கள்

ஆஸ்டியோமலாசியா நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எலும்புகள், குறிப்பாக விலா எலும்புகள், முதுகெலும்பு மற்றும் கால்களில் எலும்புகள் உடைய அதிக ஆபத்து உள்ளது.

சிகிச்சைகள்

சிகிச்சைகள்

* வைட்டமின் டி பற்றாக்குறையால் இந்த நோய் ஏற்பட்டால் வைட்டமின் டி மாத்திரைகள் வழங்கப்படுகின்றன.

* உடலில் கால்சியம் மற்றும் பாஸ்பேட் அளவு குறைவாக இருந்தால், கால்சியம் மற்றும் பாஸ்பேட் மாத்திரைகள் வழங்கப்படுகின்றன.

* ஆஸ்டியோமலாசியா தீவிரமாகி இருந்தால் உடனே சிகிச்சையை ஆரம்பிப்பது நல்லது.

தடுப்பு முறைகள்

தடுப்பு முறைகள்

எண்ணெய், மீன், மஞ்சள் கரு, பால், தயிர், தானியங்கள் போன்ற வைட்டமின் டி நிறைந்த உணவுகளை உண்ணுங்கள். பால், தயிர், சீஸ், டோஃபு, கீரைகள் போன்ற கால்சியம் நிறைந்த உணவுகளையும் எடுத்துக் கொள்ள வேண்டும் .

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Osteomalacia: Causes, Symptoms, Risk Factors And Treatment

Essential nutrients like calcium, phosphate, magnesium, phosphorus and vitamin D are required by the body to build strong bones. A lack of these nutrients leads to the development of osteomalacia.
Desktop Bottom Promotion