For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

'இந்த' எண்ணெய் இதய நோயால் ஏற்படும் மரணத்திலிருந்து உங்களை பாதுகாக்க உதவுமாம் தெரியுமா?

ஆலிவ் எண்ணெய் பல நோய்களின் அபாயத்தைக் குறைக்கிறது. இந்த உண்மைக்குப் பின்னால் உள்ள பல காரணங்களில் ஒன்று, உடலில் உள்ள கெட்ட கொழுப்பின் அளவைக் குறைக்க அறியப்படும் மோனோசாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள் இதில் அதிகம் உள்ளது. அத

|

ஆலிவ் எண்ணெயை உட்கொள்வது உண்மையில் அகால மரணத்திலிருந்து உங்களைக் காப்பாற்றும். இது ஆச்சரியம் தரும் பல நன்மைகளை உங்களுக்கு வழங்குகிறது. இது உங்கள் உடல் ஆரோக்கியம், சரும ஆரோக்கியம் மற்றும் தலைமுடி ஆரோக்கியத்திற்கும் உதவுகிறது. மேலும், ஆலிவ் எண்ணெயுடன் இதய நோய்கள் மற்றும் இறப்பு அபாயம் குறைவதற்கும் இடையே ஒரு தொடர்பை ஒரு ஆராய்ச்சி ஆய்வு நிறுவியுள்ளது.

Olive oil is known to reduce the risk of many diseases in tamil

28 வருட பின்தொடர்தலின் போது, ​​அதிகளவு ஆலிவ் எண்ணெயை (ஒரு நாளைக்கு 1/2 டேபிள் ஸ்பூன் அல்லது 7 கிராமுக்கு அதிகமாக) உட்கொண்ட பங்கேற்பாளர்கள், ஆரம்பகால மரணம் ஏற்படும் அபாயம் 19% குறைவாக இருப்பதாக ஆராய்ச்சி காட்டுகிறது. மேலும், இந்த ஆய்வில் கூறும் விஷயங்களும் ஆலிவ் ஆயில் தரும் நன்மைகள் பற்றி தெரிந்துகொள்ள இக்கட்டுரையை முழுவதுமாக படியுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஆலிவ் எண்ணெய் என்றால் என்ன?

ஆலிவ் எண்ணெய் என்றால் என்ன?

ஆலிவ் எண்ணெய் என்பது ஆலிவ்களில் இருந்து பெறப்படும் எண்ணெய். இது பொதுவாக சமையல் எண்ணெய் மற்றும் சாலட் டிரஸ்ஸிங்காக பயன்படுத்தப்படுகிறது. ஆலிவ் எண்ணெய்களில் பல வகைகள் உள்ளன: கூடுதல் வெர்ஜின் ஆலிவ் எண்ணெய், வெர்ஜின் ஆலிவ் எண்ணெய், தூய ஆலிவ் எண்ணெய், சுத்திகரிக்கப்பட்ட ஆலிவ் எண்ணெய் மற்றும் ஆலிவ் போமேஸ் எண்ணெய் ஆகியவை. கூடுதல் வெர்ஜின் ஆலிவ் எண்ணெய் எல்லாவற்றிலும் சிறந்த தரம் ஆகும். அதே சமயம் சுத்திகரிக்கப்பட்ட மற்றும் ஆலிவ் போமேஸ் ஆலிவ் எண்ணெய்கள் ஆலிவ் எடுத்தபின் மிதமுள்ளவைகளில் இருந்து பிரித்தெடுக்கப்படும் மிகக் குறைந்த தரம் வாய்ந்த எண்ணெய்.

ஆலிவ் எண்ணெய் எதற்கு நல்லது?

ஆலிவ் எண்ணெய் எதற்கு நல்லது?

ஆலிவ் எண்ணெயில் மோனோசாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள் அதிகமாக உள்ளன. இதில் 75% அளவு உள்ளது. நிறைவுற்ற கொழுப்புக்கு மாற்றாக, மோனோசாச்சுரேட்டட் கொழுப்புகள் உங்கள் "கெட்ட" எல்டிஎல் கொழுப்பைக் குறைக்க உதவுகின்றன. ஆலிவ் எண்ணெயின் ஆரோக்கிய நன்மைகள் அதன் ஆக்ஸிஜனேற்ற மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் காரணமாகும்.

 ஆலிவ் எண்ணெய் ஏன் ஆரோக்கியமான எண்ணெய்?

ஆலிவ் எண்ணெய் ஏன் ஆரோக்கியமான எண்ணெய்?

ஆலிவ் எண்ணெய் பல நோய்களின் அபாயத்தைக் குறைக்கிறது. இந்த உண்மைக்குப் பின்னால் உள்ள பல காரணங்களில் ஒன்று, உடலில் உள்ள கெட்ட கொழுப்பின் அளவைக் குறைக்க அறியப்படும் மோனோசாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள் இதில் அதிகம் உள்ளது. அதிக கொழுப்பு அளவு பல நோய்கள் மற்றும் உடல்நல சிக்கல்களுக்கு வழிவகுக்கும்.

புற்றுநோய் ஏற்படுவதை தடுக்க உதவுகிறது

புற்றுநோய் ஏற்படுவதை தடுக்க உதவுகிறது

கூடுதல் வெர்ஜின் ஆலிவ் எண்ணெய், ஓலியோகாந்தல் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் இருப்பதால் வீக்கத்தைக் குறைக்கும். இந்த ஆன்டிஆக்ஸிடன்ட் புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய ஃப்ரீ ரேடிக்கல்களால் ஆக்ஸிஜனேற்ற சேதத்தை குறைக்கும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆலிவ் எண்ணெயில் உள்ள ஒலிக் அமிலம் அழற்சி எதிர்ப்பு பண்புகளையும் கொண்டுள்ளது.

ஆய்வு கூறுவது

ஆய்வு கூறுவது

மேலே குறிப்பிட்டுள்ள ஆராய்ச்சி ஆய்வில், ஒரு குறிப்பிட்ட நோயினால் ஏற்படும் மரணம் அல்லது இறப்புக்கு, அதிக ஆலிவ் எண்ணெயை உட்கொள்பவர்களுக்கு இதய நோய் இறப்புக்கான ஆபத்து 19% குறைவாகவும், புற்றுநோய் இறப்புக்கான ஆபத்து 17% குறைவாகவும் உள்ளது என்றும் காட்டுகிறது. நியூரோடிஜெனரேட்டிவ் நோயால் (பார்கின்சன் அல்லது அல்சைமர் போன்றவை) இறக்கும் அபாயம் 29% வரை குறைவு. அதேபோல, ஆலிவ் எண்ணெய் உட்கொள்ளும் நபர்கள் சுவாச நோய்களால் இறக்கும் அபாயம் 18% குறைவாக இருப்பதாகவும் ஆய்வு காட்டுகிறது. ஸ்பெயினில் மேற்கொள்ளப்பட்ட மற்றொரு ஆய்வு, சிறிய அளவிலான ஆலிவ் எண்ணெயை உட்கொள்வதால் எண்ணற்ற ஆரோக்கியம் மற்றும் வயது தொடர்பான பலன்கள் இருப்பதாக தெரிவிக்கிறது.

எடை அதிகரிக்க வழிவகுக்குமா?

எடை அதிகரிக்க வழிவகுக்குமா?

எடை அதிகரிப்பு என்பது நீங்கள் எவ்வளவு கலோரிகளை எடுத்துக்கொள்கிறீர்கள் மற்றும் உங்கள் உடல் எவ்வளவு பயன்படுத்துகிறது என்பதைப் பொறுத்தது. உங்கள் கலோரி உட்கொள்ளல் உங்களுக்கு தேவையானதை விட அதிகமாக இருந்தால், உங்கள் உடல் எடை அதிகரிக்கும். அதனால்தான் எடை இழப்புபயணத்தின் போது மக்கள் கலோரி பற்றாக்குறைக்கு செல்ல பரிந்துரைக்கப்படுகிறார்கள். எனவே ஆலிவ் எண்ணெயை உணவுப் பரிந்துரைக்குள் பயன்படுத்துவது பாதுகாப்பானது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Olive oil is known to reduce the risk of many diseases in tamil

Here we are explain to Olive Oil Lower The Risk Of Cardiovascular Disease And The Death Risk Associated With It? Know What This Study Says in tamil.
Desktop Bottom Promotion