For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நைட் தூங்கும் முன் பாதங்களை மசாஜ் செய்வதால் இவ்ளோ நன்மையா? இது தெரியாம போச்சே…

|

வேலை மட்டுமே ஒரே குறிகோள் என சுற்றி திரிபவர்களுக்கு உடல் வலி, அசதி, சோர்வு, மனஅழுத்தம் இவற்றிற்கெல்லாம் பஞ்சமே இருக்காது. வாரம் ஒரு நாள் விடுமுறை கிடைத்தால் போதும் அப்பாடா என படுத்து தூங்கியே பொழுதை கழித்து விடுவர். அப்படிப்பட்டவர்களுக்கு தான் வாரம் ஒருமுறையாவது எண்ணெய் தேய்த்து குளித்தல், சிறிது நேரம் உடற்பயிற்சி செய்தல் என பல்வேறு அறிவுரைகள் வழங்கப்படுகின்றன.

Massaging Your Foot Before Bedtime Can Help You Get Rid Of These 4 Problems

தலைக்கு எண்ணெய் தேய்த்து குளிப்பதால் தலைவலி, மனஅழுத்தம் மற்றும் உடல் சோர்வு போன்றவற்றை போக்குகிறது. அதுவே பாதத்திற்கு மசாஜ் செய்தால், அதுவும் கூட உடலுக்கு பல்வேறு நன்மைகள் ஏற்படுத்துமாம். ஆமாம். நாள்தோறும் நின்றபடியே வேலை செய்பவர்களுக்கு பல்வேறு நோய்கள் சுலபமாக தாக்குகிறது. அப்படிப்பட்டவர்கள் தினந்தோறும் பாதங்களுக்கு மசாஜ் செய்துவிட்டு தூங்கினாலே போதும் நல்ல பலனை பெறலாம்.

அசிங்கமாக தளர்ந்து தொங்கும் சருமத்தை இறுக்கணுமா? அப்ப தினமும் இந்த உடற்பயிற்சிகளை செய்யுங்க...

இயற்கை மருத்துவ நிபுணர் மருத்துவர். நிலோஃபர் உஸ்மான் கான் கூறுகையில், தினசரி இரவு தூங்குவதற்கு முன்பு 10 முதல் 15 நிமிடங்கள் பாதங்களுக்கு மசாஜ் செய்வதால் சீரான இரத்த ஓட்டத்திற்கு வழி வகுக்குமாம். பாதங்களுக்கு மசாஜ் செய்வதால் கிடைக்கும் இன்ன பிற நன்மைகள் குறித்து தெரிந்து கொள்வோம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
குறைந்த இரத்த அழுத்தம்

குறைந்த இரத்த அழுத்தம்

சாதாரணமாக உடலின் ஆரோக்கியமான இயக்கத்திற்கு நீரேற்றம் மிகவும் முக்கியம். உங்கள் உடலில் அடிக்கடி நீரிழப்பு ஏற்பட்டால் உடனே உங்களது இரத்த அழுத்தத்தை சரி பார்த்துக் கொள்ளவும். ஏனென்றால், இரத்த அழுத்த குறைவு பல்வேறு காரணங்கள் ஏற்படக்கூடும். நிற்கும் போது, சாப்பிட்ட பிறகு, மனம் மற்றும் மூளை கோளாறு மற்றும் நரம்பு மண்டல பாதிப்பு போன்றவற்றால் கூட குறைந்த இரத்த அழுத்தம் ஏற்படலாம். எனவே, குறைந்த இரத்த அழுத்தம் உள்ளவர்கள் தினமும் தூங்குவதற்கு முன்பு 10 நிமிடங்கள் உங்கள் பாதங்களை மசாஜ் செய்யுங்கள். இதன்மூலம், உடலில் இரத்த ஓட்டம் சமமாகி, நிம்மதியான தூக்கத்திற்கு வழிவகுப்பதால், இரத்த அழுத்தம் சீராகும்.

 மூட்டு வலி

மூட்டு வலி

மற்ற எந்த மருத்துவத்தை காட்டிலும், சாதாரண எண்ணெய் மசாஜ் போதும் மூட்டு வலிக்கு உடனடி தீர்வு தருவதற்கு. வலி இருக்கும் மூட்டு பகுதியில் எண்ணெய் தடவி மசாஜ் செய்தாலே அதிகப்படியான வலியில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும். அதுவும் சற்று வெதுவெதுப்பான எண்ணெய்யை தேய்த்து மசாஜ் செய்தால் அதை விட சிறப்பான பலன் கிடைக்கும். எலும்பு குறைபாடு உள்ளவர்கள் எண்ணெய் மசாஜ் தொடர்ந்து செய்வது நல்லது. இதனால் தான் பிறந்த குழந்தைகளுக்கு கண்டிப்பாக எண்ணெய் மசாஜ் செய்ய வேண்டும் என கூறுகிறார்கள்.

இறுதி மாதவிடாய் முன் அறிகுறி

இறுதி மாதவிடாய் முன் அறிகுறி

சில பெண்களுக்கு மாதவிடாய் ஏற்படுவதற்கு முன்பு ஏற்படக்கூடிய சில வலிகளுக்கு எந்த மருந்தும் கிடையாது. இப்படிப்பட்ட வலிகளை உணரும் பெண்கள் கண்டிப்பாக மருந்துகளை தள்ளி வைத்துவிட்டு, நல்ல உணவையும் சிறிது உடல் மசாஜ் செய்து கொள்வதோ தான் சிறந்தது. இது போன்ற தருணஙகளில் நல்ல பாத மசாஜ் போதும் எல்லா கவலைகளையும், வலிகளையும் ஒதுக்கி வைத்துவிடலாம்.

இரத்த ஓட்டம்

இரத்த ஓட்டம்

இரத்தத்தின் முதன்மையான வேலை என்றால், ஆக்சிஜனை எல்லா பகுதிக்கும் எடுத்துச் செல்வது, புரதங்களை அந்தந்த பாகங்களுக்கு கொண்டு சேர்ப்பது மற்றும் நச்சுக்களை அகற்றுவது ஆகியவை தான். எனவே, இதற்கு சீரான இரத்த ஓட்டமானது மிக அவசியம். அதற்காக தான், இரவு தூங்குவதற்கு முன்பு பாதங்களுக்கு மசாஜ் செய்ய சொல்வது. அதன்மூலம், இரத்த ஓட்டம் சீராவதால் மன அழுத்தம் நீங்கி நல்ல தூக்கமும் வரும். சீரான இரத்த ஓட்டம் தசை பிடிப்பு மற்றும் உடற்சோர்வு ஆகியவற்றை நீக்கவும் அவசியமான ஒன்றாவதால், தூங்குவதற்கு முன்பு மசாஜ் செய்வதை மறந்துவிடாதீர்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Massaging Your Foot Before Bedtime Can Help You Get Rid Of These 4 Problems

Just when you thought a foot massage could only relax you, it is also useful in getting rid of several health problems too!
Story first published: Monday, November 25, 2019, 18:20 [IST]
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more