For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கண்ணிமை அழற்சி அல்லது வீக்கம் ஏற்படுவதற்கான முக்கியமான 5 காரணங்கள்!

கண்ணிமை அழற்சிக்கு தொற்று பாதிப்பு ஒன்று மட்டுமே காரணமாக இருக்க முடியாது. கண்களில் உண்டாகும் இதர நோய்கள் காரணமாகவும் கண்ணிமை அழற்சி ஏற்படலாம்.

|

நமது கண்கள் மிகவும் அதிக உணர்திறன் வாய்ந்தவை. வெளிப்புற தூசு, மாசு மற்றும் கிருமிகள் காரணமாக கண் எரிச்சல், அரிப்பு மற்றும் கண் சிவந்து போவது போன்ற பாதிப்புகள் பொதுவாக ஏற்படலாம். சில நேரங்களில் கண்ணிமை அழற்சி சிலவகை கண் நோய்களின் அறிகுறியாகவும் இருக்க முடியும். அந்த நேரத்தில் கண்ணிமை பாதிப்புகளை புறக்கணிப்பது பெரிய அபாயத்தை ஏற்படுத்தக்கூடும்.

What Makes Eyelid Swell? Know The 5 Major Causes Of Eyelid Inflammation

சில நேரங்களில் காலையில் கண் விழிக்கும் போது உங்கள் கண்ணிமைகளில் ஒன்று அல்லது இரண்டும் சற்று வீக்கமாக இருப்பதை நீங்கள் உணர முடியும். ஒவ்வொரு ஊரிலும் இந்த கண் பாதிப்பை வெவ்வேறு பெயர் கொண்டு அழைக்கலாம். பொதுவாக கண் அழற்சிக்கு பொதுவான ஒரு காரணம் என்று மருத்துவ அறிவியலில் கூறப்படுவது தொற்று பாதிப்பு. ஆனால் கண்ணிமை அழற்சிக்கு தொற்று பாதிப்பு ஒன்று மட்டுமே காரணமாக இருக்க முடியாது. கண்களில் உண்டாகும் இதர நோய்கள் காரணமாகவும் கண்ணிமை அழற்சி ஏற்படலாம். சில பொதுவான பிரச்சனைகள் பின்வருமாறு ..

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஒவ்வாமை

ஒவ்வாமை

மேலே கூறியபடி கண் என்பது உணர்திறன் அதிகம் உள்ள உறுப்பு. எனவே ஒவ்வாமை பாதிப்புகள் கண்களை எளிதில் மற்றும் விரைவில் தாக்க முடியும். சில நேரங்களில் இந்த ஒவ்வாமை தூசி, அழுக்கு போன்றவற்றின் காரணமாக , சில நேரங்களில் காண்டாக்ட் லென்ஸ் காரணமாக உண்டாகலாம். பொதுவாக கண்களில் ஏற்படும் ஒவ்வாமை காரணமாக கண் எரிச்சல், கண்ணிமை வீக்கம், கண்கள் சிவந்து போவது, கண்களில் தண்ணீர் வெளிவருவது போன்ற அறிகுறிகளுடன் உண்டாகலாம். உங்களுக்கு ஒவ்வாமை பாதிப்பு இருக்கும் போது நீங்களாக கண்களுக்கு மருந்து போடுவதைத் தவிர்க்கவும். மருத்துவரிடம் ஆலோசனை பெற்று மாத்திரை அல்லது கண் மருந்து பயன்படுத்தலாம்.

கண் சிவந்து போவது

கண் சிவந்து போவது

இமைப்படல அழற்சி என்பது கண் தொடர்பான ஒரு பாதிப்பாகும். கண்களில் கிருமி அல்லது பாக்டீரியா போன்றவற்றின் வெளிப்பாடு காரணமாக இந்த அழற்சி உண்டாகிறது. கண்களின் இமைப்படலம் இந்த தொற்று பாதிப்பால் வீக்கம் அடைகிறது. இமைப்படலம் என்பது ஒரு வெளிப்படையான ஜெல் போன்ற திரவம் அடைக்கப்பட்ட ஒரு உள்ளடுக்கு ஆகும். இமைப்படல அழற்சி ஏற்படும் போது மருத்துவரை மட்டுமே நாட வேண்டும். மருத்துவர் உங்களுக்கு மருந்துகளுடன் சில அன்டி-பயாடிக் மருந்துகளை வழங்கலாம்.

கண் கட்டி

கண் கட்டி

கண்ணிமைகளில் அழற்சி ஏற்படுவதற்கு மற்றொரு காரணம் இந்த கண்கட்டி. சில நேரங்களில் இந்த கட்டி தானாக தோன்றி மறைந்துவிடும். வெகு சில நேரங்களில் இந்த கட்டி பெரும் அபாயங்களை உண்டாக்கலாம். இதனைப் போக்க சில நேரங்களில் அறுவை சிகிச்சை தேவைப்படலாம். ஆகவே கண்ணிமை வீக்கம் ஏற்பட்டால் உடனடியாக இதனைப் போக்க சில எளிய தீர்வுகளை பின்பற்றலாம் அல்லது கண் மருத்துவரை அணுகலாம். சாதாரண கண் கட்டி அன்டி-பயாடிக் பயன்படுத்துவதால் குணமாகலாம்.

காண்டாக்ட் லென்ஸ் அணிவது

காண்டாக்ட் லென்ஸ் அணிவது

காண்டாக்ட் லென்ஸ் அணிபவர்களுக்கு கண்ணிமை அழற்சி அடிக்கடி ஏற்படலாம். லென்ஸ் பொருத்தும் போது அல்லது அவற்றை நீக்கும் போது சுத்தமில்லாமல் இருந்தால் இந்த பாதிப்பு அவ்வப்போது ஏற்படலாம். சுத்தமின்மை காரணமாக கிருமிகள் கண்களைத் தாக்கி வீக்கத்தை ஏற்படுத்தலாம். இதனால் எரிச்சல், வலி மற்றும் அழற்சி போன்றவை உண்டாகலாம். ஆனால் காண்டாக்ட் லென்ஸ் பயன்படுத்தவதால் உண்டாகும் கண் அழற்சி ஆபத்தை உண்டாக்குவதில்லை, பல நேரங்களில் அது தானாகவே சரியாகி விடும். தொடர்ந்து 2-3 நாட்களுக்கு இந்த வீக்கம் நீடித்தால் மருத்துவரை அணுகலாம்.

பூச்சிக்கடி

பூச்சிக்கடி

பல நேரங்களில் கண்ணிமை வீக்கம் ஏற்படுவதற்கு பூச்சிகள் காரணமாக இருக்கின்றன. பூச்சிகள் கண்ணுக்குள் நுழைவதால் அல்லது பூச்சி கடிப்பதால் கண்ணிமை வீக்கம் உண்டாகக்கூடும். இந்த வகை பாதிப்புகளைத் தவிர்க்க , பைக் ஓட்டும்போது ஹெல்மெட் மற்றும் கண்ணாடி அணிந்து கொள்வது அவசியம். மற்றும் வெற்று நிலம் மற்றும் மரங்களுக்கு அடியில் உறங்குவதைத் தவிர்க்கவும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

What Makes Eyelid Swell? Know The Major Causes Of Eyelid Inflammation

What makes eyelid swell? Read on to know the 5 major causes of eyelid inflammation.
Desktop Bottom Promotion