For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

Lassa Fever: இங்கிலாந்தில் பரவும் லஸ்ஸா காய்ச்சல் - அதன் அறிகுறிகள் என்ன? எப்படி பரவுகிறது?

லஸ்ஸா காய்ச்சலால் இங்கிலாந்தில் பாதிக்கப்பட்ட மூன்று பேரில் ஒருவர் பிப்ரவரி 11 ஆம் தேதி லண்டனின் வடக்கே பெட்ஃபோர்ட்ஷையரில் உள்ள ஒரு மருத்துவமனையில் இறந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

|

உலகமே கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடி மெதுவாக வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில், தற்போது இங்கிலாந்தில் லஸ்ஸா காய்ச்சல் பரவுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே கொரோனாவை சமாளிக்க முடியாமல் தத்தளித்துக் கொண்டிருக்கும் போது, லஸ்ஸா காய்ச்சல் பரவி வருவது சுகாதார நிபுணர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.

Lassa Fever: First death confirmed in UK from new outbreak; Know Symptoms, Risks and Treatment in Tamil

அதுவும் லஸ்ஸா காய்ச்சலால் இங்கிலாந்தில் பாதிக்கப்பட்ட மூன்று பேரில் ஒருவர் பிப்ரவரி 11 ஆம் தேதி லண்டனின் வடக்கே பெட்ஃபோர்ட்ஷையரில் உள்ள ஒரு மருத்துவமனையில் இறந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. லஸ்ஸா காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மூவருமே ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் இவர்கள் சமீபத்தில் மேற்கு ஆப்பிரிக்காவிற்கு சென்றுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இப்போது லஸ்ஸா காய்ச்சல் என்றால் என்ன, அதன் அறிகுறிகள் என்ன, எப்படி பரவும், எவ்வளவு அபாயகரமானது போன்ற விஷயங்களை விரிவாக காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
லஸ்ஸா காய்ச்சல் என்றால் என்ன?

லஸ்ஸா காய்ச்சல் என்றால் என்ன?

நோய் கட்டுப்பாடு மற்றும் மாசுபாட்டு மையங்களின் கூற்றுப்படி, லஸ்ஸா காய்ச்சலை உண்டாக்கும் வைரஸ் மேற்கு ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டது. மேலும் இது முதன்முதலில் 1969 இல் நைஜீரியாவில் உள்ள லஸ்ஸாவில் கண்டுபிடிக்கப்பட்டது. ஆகவே இந்த காய்ச்சலுக்கு லஸ்ஸா காய்ச்சல் என்ற பெயர் வந்தது.

லஸ்ஸா காய்ச்சல் எப்படி பரவுகிறது?

லஸ்ஸா காய்ச்சல் எப்படி பரவுகிறது?

லஸ்ஸா காய்ச்சல் எலிகளால் பரவுகிறது மற்றும் இந்த தொற்று முதன்மையாக மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள சியரா லியோன், லைபீரியா, கினியா மற்றும் நைஜீரியா போன்ற நாடுகளில் காணப்படுகிறது.

இந்த காய்ச்சலானது பாதிக்கப்பட்ட எலியின் சிறுநீர் அல்லது மலம் ஆகியவற்றால் மாசுபடுத்தப்பட்ட உணவுப் பொருட்களுடன் ஒருவர் தொடர்பு கொள்ளும் போது வரலாம். அதோடு பாதிக்கப்பட்ட நபரின் உடல் திரவங்களுடன் நேரடி தொடர்பு கொள்வதாலும் பரவலாம். மொத்தத்தில் இந்த காய்ச்சல் ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவக்கூடியது.

லஸ்ஸா காய்ச்சலின் அறிகுறிகள் என்ன?

லஸ்ஸா காய்ச்சலின் அறிகுறிகள் என்ன?

லேசான காய்ச்சல், சோர்வு, பலவீனம் மற்றும் தலைவலி போன்றவை லஸ்ஸா காய்ச்சலின் லேசான அறிகுறிகளாகும். அதே வேளையில் இரத்தப்போக்கு, சுவாசிப்பதில் சிரமம், வாந்தி, முக வீக்கம், மார்பு, முதுகு மற்றும் அடிவயிற்று பகுதியில் வலி ஆகியவை இதன் தீவிர அறிகுறிகளாகும். இந்த காய்ச்சலின் அறிகுறிகள் பொதுவாக தொற்று ஏற்பட்ட 1-3 வாரங்களுக்குப் பிறகு தோன்றும். சிடிசி-யின் படி, லஸ்ஸா காய்ச்சலுடன் தொடர்புயை மிகவும் பொதுவான சிக்கல் காது கேளாமை ஆகும். பல சந்தர்ப்பங்களில், தொற்று ஏற்பட்டவருக்கு காது கேளாமை நிரந்தரமாக இருக்கும்.

எவ்வளவு ஆபத்தானது?

எவ்வளவு ஆபத்தானது?

லஸ்ஸா காய்ச்சலால் கடுமையாக பாதிக்கப்படலாம் என்றாலும், பெரும்பாலான மக்கள் இத்தொற்றின் பாதிப்பில் இருந்து முழுமையாக குணமடைகிறார்கள். இத்தொற்றினால் ஏற்பட்ட ஒட்டுமொத்த இறப்பு விகிதம் 1% என்று உலக சுகாதார அமைப்பு தெரிவிக்கிறது. ஆனால் இத்தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளின் விகிதம் 15% ஆகும்.

லஸ்ஸா காய்ச்சலைத் தடுப்பது எப்படி?

லஸ்ஸா காய்ச்சலைத் தடுப்பது எப்படி?

லஸ்ஸா காய்ச்சல் வராமல் இருக்க வேண்டுமானால், எலிகளுடன் தொடர்பு கொள்வதைத் தவிர்ப்பதே சிறந்த வழி. அதுவும் நோய் பரவும் இடங்களில் உள்ள எலிகளுடன் தொடர்பு கொள்வதைத் தவிர்க்கவும். அதோடு வீட்டிற்குள் எலிகள் நுழைவதைத் தடுக்க போதுமான சுகாதாரம் மற்றும் பாதுகாப்பை பேண வேண்டும். எலித்தொல்லை அதிகம் இருந்தால் எலிப் பொறிகளை வைத்து பிடித்து அவற்றை அகற்றவும் மற்றும் உண்ணும் உணவுகளை பாதுகாப்பான இடத்தில் வைக்க வேண்டும் எனவும் சிடிசி அறிவுறுத்துகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Lassa Fever: First death confirmed in UK from new outbreak; Know Symptoms, Risks and Treatment in Tamil

Lassa fever is an illness caused by the Lassa virus, which usually infects people through exposure to food or household items that have been contaminated with the urine or faeces of infected rats. Know Symptoms, Risks and Treatment in tamil.
Story first published: Wednesday, February 16, 2022, 10:26 [IST]
Desktop Bottom Promotion