Latest Updates
-
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும்
H3N2 வைரஸ் சிறுநீரகங்களை செயலிழக்க வெச்சு உயிரையே பறித்துவிடுமாம்... கவனமா இருங்க...
பருவகாலங்களில் பரவக்கூடிய ஒரு வகையான வைரஸ் தான் இன்ஃப்ளூயன்சா. சமீபத்தில் இன்ஃப்ளூயன்சா ஏ வகையின் துணை வகையான H3N2 வைரஸ் தொற்று உலகில் பல்வேறு பகுதிகளில் பரவி, ஏராளமானோரை பாதித்துள்ளது. இந்த H3N2 சுவாச பிரச்சனைகளை ஏற்படுத்துவதாக அறியப்பட்டாலும், சமீபத்திய ஆய்வு ஒன்றில் H3N2 வைரஸ் சிறுநீரகங்களில் மோசமான பாதிப்பை ஏற்படுத்துவதாக தெரிய வந்துள்ளது.
இன்ஃப்ளூயன்சா H3N2 வைரஸ் ஒருவரை தாக்கினால், அந்த வைரஸானது முதலில் சுவாச மண்டலத்தை பாதித்து, காய்ச்சல், இருமல், தொண்டை புண் மற்றும் உடல் வலி போன்றவற்றை ஏற்படுத்துகிறது. மேலும் H3N2 வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட பலரும் இம்மாதிரியான அறிகுறிகளை அனுபவித்ததாக தெரிவித்துள்ளனர்.

அதுமட்டுமின்றி, H3N2 வைரஸானது சிறுநீரகங்களையும் மோசமாக பாதிப்பதாக ஆய்வுகள் தெரிவித்துள்ளன. இப்போது H3N2 வைரஸ் சிறுநீரகங்களில் எந்த மாதிரியான பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதைக் காண்போம்.
கடுமையான சிறுநீரக காயம்
H3N2 இன்ப்ளூயன்சா சிறுநீரகங்களில் மிதமானது முதல் கடுமையான காயங்களை ஏற்படுத்துவதாக ஆய்வு ஒன்று கூறுகிறது. அதுவும் தீவிர நிலையில் வைரஸானது சிறுநீரகங்களில் கடுமையான காயங்களை ஏற்படுத்தி, அதன் விளைவாக திடீர் சிறுநீரக செயலிழப்பை ஏற்படுத்தி, உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் என்று அந்த ஆய்வு தெரிவித்துள்ளது.
கடுமையான சிறுநீரக காயத்திற்கு உடனடி சிகிச்சைகளை மேற்கொள்ள வேண்டும். ஆய்வு ஒன்றானது இன்ப்ளூயன்சாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 6000 நோயாளிகளின் தரவுகளை பகுப்பாய்வு செய்தது. அதில் H3N2 வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கடுமையான சிறுநீரக காயம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பது கண்டறியப்பட்டது.
மற்றொரு ஆய்வில் H3N2 இன்ப்ளூயன்சா வைரஸ் நாள்பட்ட சிறுநீரக நோய் உள்ள நோயாளிகளை மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கும், இறப்பதற்கும் அதிக காரணமாக இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இந்த வைரஸானது சிறுநீரகங்களை சரியாக செயல்பட விடாமல், நோயாளிகளின் ஆரோக்கியத்தை மிகவும் மோசமாக்குகிறது.
ஆனால் H3N2 இன்ப்ளூயன்சா வைரஸ் எப்படி சிறுநீரகங்களின் ஆரோக்கியத்தை பாதிக்கிறது என்பது சரியாக தெரியவில்லை என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இருப்பினும், இந்த வைரஸ் சிறுநீரகங்களில் அழற்சியை ஏற்படுத்தி, காயங்களுக்கு வழிவகுக்கலாம் என்று நம்புகின்னர். சில சமயங்களில் அதிகப்படியான அழற்சி தீவிரமாகும் போது, அது சிறுநீரகங்களின் செயல்பாட்டை குறைத்துவிடும்.
சிறுநீரக காயங்களின் அறிகுறிகள்
H3N2 இன்ப்ளூயன்சா வைரஸால் சிறுநீரகங்களில் காயங்கள் ஏற்பட்டிருந்தால், சிறுநீர் வெளியேற்றம் குறையும், கால்கள் அல்லது பாதங்களில் வீக்கம், குமட்டல், வாந்தி மற்றும் சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகளை சந்திக்க நேரிடும். இன்னும் தீவிர நிலைகளில், நோயாளிகளுக்கு டயாலிசிஸ் தேவைப்படலாம்.
தடுப்பது எப்படி?
H3N2 இன்ப்ளூயன்சா வைரஸால் சிறுநீரகங்களின் ஆரோக்கியம் பாதிக்கப்படாமல் இருக்க வேண்டுமானால், ஆண்டுதோறும் இன்ஃப்ளூயன்ஸாவைத் தடுக்கும் தடுப்பூசியைப் போடுவதே சிறந்த வழி. அதுவும் இன்ஃப்ளூயன்சா தடுப்பூசியானது அனைத்து வயதினருமே போடலாம் மற்றும் குறிப்பாக ஏற்கனவே ஆரோக்கிய பிரச்சனைகளைக் கொண்டவர்கள் இந்த தடுப்பூசியை போட்டுக் கொள்ள பரிந்துரைக்கப்படுகிறது. முக்கியமாக வெறும் தடுப்பூசியை மட்டும் போடாமல், சுகாதாரத்தையும் கடைப்பிக்க வேண்டும். இதனால் கண்ட நோய்த்தொற்றுக்களைத் தவிர்க்கலாம்.
H3N2 இன்ப்ளூயன்சா ஒரு தீவிரமான சுவாச நோயாக இருந்தாலும், இது சிறுநீரகங்களிலும் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே ஏற்கனவே சிறுநீரக பிரச்சனை உள்ளவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்ம். அறிகுறிகள் ஏதேனும் தெரிந்தால், சற்றும் தாமதிக்காமல் உடனே மருத்துவரை அணுக வேண்டும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications