Latest Updates
-
கைகளில் சொடக்கு எடுக்கும்போது அதிலிருந்து ஏன் சத்தம் வருகிறது? இப்படி செய்வது பாதிப்பை ஏற்படுத்துமா? -
1 கைப்பிடி கொத்தமல்லியும், 2 தக்காளியும் இருந்தா.. காலையில் இட்லிக்கு இப்படி சட்னி செய்யுங்க.. -
அக்டோபர் 19, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுதாம் -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: நவம்பர் 12 வரை இந்த 4 ராசிக்கு பண மழை கொட்டும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஒரே இரவில் பளிச்சென்று ஜொலிக்கணுமா? அப்ப நைட் டைம்-ல இந்த ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
சூரியன் துலாம் ராசிக்கு பெயர்ச்சி அடைந்துள்ளதால் நவம்பர் மாதம் வரை ராஜவாழ்க்கை வாழப்போகும் 3 ராசிகள் -
5 முட்டை இருந்தா இந்த ஆப்கானி முட்டை மசாலாவை செஞ்சு பாருங்க - ஹோட்டலில் சாப்பிடற டேஸ்ட்ல இருக்கும் -
ஆயுத பூஜைக்கு இப்படி சுண்டல் செய்யுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்.. -
இந்த 4 ராசிக்காரங்க ரொம்ப வெளிப்படையானவர்களாக இருப்பார்களாம் - இவங்க வாயில பொய் வரது ரொம்ப கஷ்டம் -
Ayudha Pooja 2026: ஆயுத பூஜை ஏன் கொண்டாடப்படுகிறது? பூஜை செய்ய உகந்த நேரம் எது?
பெண்கள் ஏன் அவர்களின் உள்ளாடைகளை அயர்ன் செய்து அணிய வேண்டும் தெரியுமா?
மிருதுவாகவும் நேர்த்தியாகவும் தோற்றமளிக்க நாம் வழக்கமாக எங்கள் சட்டைகள், ஜீன்ஸ் மற்றும் கைக்குட்டைகளை அயர்ன் செய்கிறோம். இருப்பினும், ஒரு முக்கியமான ஆடையான உள்ளாடைகளை அயர்ன் செய்ய மறந்து விடுகிறோம் அல்லது அது அவசியமில்லை என்று நினைக்கிறோம்.
உள்ளாடைகளை ஏன் அயர்ன் செய்ய வேண்டுமென்று நீங்கள் சிந்தித்தால் முதலில் அதனால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகளை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். அதிக வெப்பநிலையானது, உங்கள் வெளித்தோற்றத்திற்கு சுத்தமாக இருக்கும் பல கிருமிகளைக் கொல்ல உதவுகிறது.

சுத்தமான உள்ளாடைகளிலும் கிருமிகள் இருக்கலாம்
உங்கள் உள்ளாடைகளை உங்கள் அந்தரங்க பகுதியில் போடுவதற்கு முன், அதில் இருக்கும் கிருமிகள் மற்றும் பாக்டீரியாக்களின் அளவைப் பற்றி நீங்கள் அறிந்தால் உங்களுக்கு மயக்கமே வந்துவிடும். துரதிர்ஷ்டவசமாக, சில பாக்டீரியாக்கள் மற்றும் கிருமிகள் 60 ° C வரை உயிர்வாழ முடியும். மென்மையான ஆடைகளை மிகவும் சூடான நீரில் துவைக்க முடியாது என்பதால், துவைத்த பிறகு அவற்றை அயர்ன் செய்வதே உங்களுக்கு சிறந்த தேர்வாக இருக்கும். சூடான நீராவியானது பாக்டீரியாவிலிருந்து ஆடைகளை கிருமி நீக்கம் செய்ய உதவும்.
வாஷிங் மிஷினில் பாக்டீரியா இருக்கும்
சலவை இயந்திரத்தில் பாக்டீரியாக்கள் உள்ளன. ஈ.கோலி மற்றும் சால்மோனெல்லா, ஸ்டேஃபிலோகோகஸ் ஆரியஸ் மற்றும் பல போன்ற அனைத்து வகையான பாக்டீரியாக்களும் நமது சலவை இயந்திரங்களில் இனப்பெருக்கம் செய்ய முடியும். நாம் துவைக்கும் அழுக்குத் துணிகளே இந்தக் கிருமிகளின் ஆதாரம்.
ஆய்வுகளின் படி சுத்தமான உள்ளாடைகளில் கூட 10,000 உயிருள்ள பாக்டீரியாக்கள் இருக்கலாம். சலவை இயந்திரத்தில் இருந்து பயன்படுத்தப்படும் 2 டேபிள்ஸ்பூன் தண்ணீரில் சுமார் ஒரு மில்லியன் பாக்டீரியாக்கள் உள்ளன. இந்த பாக்டீரியாக்கள் நீங்கள் அதில் துவைக்கும் ஆடைக்கு பரவலாம்.
உள்ளாடைகள் பாக்டீரியாவை பரப்பலாம்
உள்ளாடைகள் உண்மையிலேயே மிகவும் அசுத்தமான ஆடைகளில் ஒன்றாகும், மேலும் அவை ஹெபடைடிஸ் ஏ வைரஸ், நோரோவைரஸ், ரோட்டா வைரஸ், சால்மோனெல்லா மற்றும் ஈ.கோலை போன்ற பல்வேறு கிருமிகளைக் கொண்டு செல்லும் மலப் பொருட்களின் தடயங்களையும் கொண்டிருக்கலாம்.
UTI-யைத் தடுக்க உள்ளாடைகளை அயர்ன் செய்ய வேண்டும்
அயர்னிங் சிறுநீர் பாதை நோய்த்தொற்றுகளை ஏற்படுத்தக்கூடிய பாக்டீரியாக்களை அழிக்க உதவுகிறது. நீங்கள் தற்போது பூஞ்சை தொற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்தால், உங்கள் உள்ளாடைகளை அணிவதற்கு முன் அவற்றை அயர்ன் செய்வது நல்லது.
உள்ளாடைகளை எப்படி அயர்ன் செய்ய வேண்டும்?
உள்ளாடைகள் மெல்லிய மற்றும் மென்மையான துணிகளிலிருந்து தயாரிக்கப்படுகின்றன, எனவே அவற்றை கவனமாக துவைக்க செய்ய வேண்டும். உள்ளாடைகள் சரியாக வெயிலில் காய்ந்தவுடன், துணியை சரிபார்த்து, அதற்கேற்ப அயர்ன்பாக்சில் வெப்பநிலையை செட் செய்யவும். உங்களுக்கு சந்தேகம் இருந்தால், குறைந்தபட்ச வெப்பநிலையை அமைக்கவும், பின்னர் அதை அதிகரிக்கலாம்.
அவற்றை கவனமாக அயர்ன் செய்து, மடித்து டிராயரில் வைக்கவும். உங்கள் உள்ளாடை அலமாரியை தவறாமல் சுத்தம் செய்து, மூலைகளில் தூசி இல்லை என்பதை உறுதிப்படுத்தவும். ஒவ்வொரு வருடமும் உங்கள் உள்ளாடைகளை மாற்றுவதை வழக்கமாக வைத்துக் கொள்ளுங்கள்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications

