Latest Updates
-
செப்டம்பர் 29, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவரப்போகுதாம் -
புதன் துலாம் ராசியில் வக்ர பெயர்ச்சியை தொடங்கப்போவதால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம் -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும் -
அக்டோபர் மாத சூரிய பெயர்ச்சி: இந்த 6 ராசிக்காரங்க அடுத்த 1 மாதம் கவனமா இருக்கணும்! -
சைக்கோவாக நடந்து கொள்ளும் 4 ஆபத்தான ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
1/2 மூடி தேங்காய் இருந்தா.. இத ஒரு டைம் ட்ரை பண்ணுங்க.. 15 நாள் வரை வெச்சு சாப்பிடலாம்.. -
சிக்கனின் விலை 2.5 லட்சம், மீனின் விலை 5 லட்சம் - உலகின் காஸ்டலியான அசைவ உணவுகள் - ஷாக் ஆகாதீங்க -
உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. அக்டோபர் மாசம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
பொறிச்ச குழம்பு - இத ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. எல்லாத்துக்கும் வெச்சு சாப்பிடலாம்.. -
சாதம் சாப்பிட்டும் சுகர் அதிகரிக்கக்கூடாதா? அப்ப டாக்டர் சொல்ற இந்த ட்ரிக்கை ஃபாலோ பண்ணுங்க..
டாய்லெட்டை விட அதிக கிருமிகள் கொண்ட உங்கள் போனை கழிவறைக்கு எடுத்து சென்றால் என்ன நடக்கும் தெரியுமா?
இன்றைய இளைஞர்கள் பல மோசமான வாழ்க்கை முறைகளை பின்பற்றுகின்றனர். அதில் மிகவும் முக்கியமானது கழிவறையில் மொபைல் போன் உபயோகிக்கும் பழக்கம். கிட்டதட்ட அனைத்து இளைஞர்களும் இந்த மோசமான பழக்கத்தைக் கொண்டுள்ளனர்.
இந்த பழக்கத்தை இளைஞர்கள் தெரிந்தே வைத்திருக்கிறார்கள். ரீல்களை ரசித்தல், வாட்ஸ் அப்பை நோண்டுவது மற்றும் மெசேஜ்களுக்கு பதிலளித்தல் போன்று பல வேலைகளை கழிவறையில் அமர்ந்து செய்கிறார்கள். ஆனால் கழிவறையில் கைபேசியுடன் அமர்ந்திருப்பது, கொடிய நோய்க்கிருமிகளுக்கு உங்களை ஆளாக்கும்.

இந்த மோசமான பழக்கத்தை ஏன் நிறுத்த வேண்டும்?
கழிப்பறை இருக்கைகள் கிருமிகள் இனப்பெருக்கம் செய்யும் முக்கிய இடங்களாகும். நாம் கழிப்பறை இருக்கையில் அமர்ந்து ஸ்க்ரோலிங் செய்யும் போது, கைகளில் நிறைய கிருமிகளை எடுத்துக்கொண்டு, இறுதியில் அதை நம் வாய், கண்கள் மற்றும் மூக்கில் வைக்கிறோம். அறிக்கைகளின்படி, கிருமிகள் மொபைல் ஃபோன் திரைகளில் 28 நாட்கள் வரை உயிருடன் இருக்கும்.
ஸ்மார்ட்ஃபோன்கள் கழிப்பறை இருக்கைகளை விட பத்து மடங்கு அதிகமான கிருமிகளைக் கொண்டிருக்கும் என்று சமீபத்திய ஆய்வுகள் கண்டறிந்துள்ளது, மேலும் தொடுதிரைகள் தொற்று நோய்களின் பிறப்பிடமாக இருப்பதால் 'டிஜிட்டல் யுகத்தின் கொசு' என்று அழைக்கப்படுகிறது. ஒரே தொலைபேசியை பலரும் உபயோகிக்கும் போது, அதன் அபாய அளவு அதிகரிக்கிறது.
என்னென்ன கிருமிகள் பரவும்?
கழிப்பறை இருக்கையில் பொதுவாகக் காணப்படும் கிருமிகள் ஸ்டேஃபிளோகோகஸ் ஆரியஸ் ஆகும். கழிப்பறை இருக்கைகளில் இருக்கும் ஸ்டேஃபிளோகோகஸின் பிற மாறுபாடுகள் மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கும். இவை பெரும்பாலும் சிறுநீர் பாதை நோய்த்தொற்றுகளை ஏற்படுத்துகின்றன. மேலும் கழிப்பறை இருக்கை மூலம் E.coli மற்றும் Enterococcus, salmonella, shigella மற்றும் campylobacter போன்ற தொற்றுநோய்களும் ஏற்படும்.
என்னென்ன தொற்றுநோய்கள் ஏற்படும்?
கழிப்பறை இருக்கயிலேயே அதிக கிருமிகள் இருக்கும்போது, மேலும் போனை உபயோகிப்பது மூலம் நீங்கள் சந்திக்கும் ஆபத்துகள் மேலும் அதிகரிக்கிறது. வயிற்று வலி, வயிற்றுப்போக்கு மற்றும் புட் பாய்சன் போன்ற பல சிக்கல்கள் உங்களுக்கு ஏற்படலாம். மேலும் நீங்கள் புண்கள் போன்ற தோல் நோய்த்தொற்றுகள், சைனசிடிஸ் போன்ற சுவாச நோய்த்தொற்றுகள் போன்றவற்றைப் பெறவும் வாய்ப்புள்ளது.
வேறென்ன பாதிப்புகளை ஏற்படுத்தும்?
கழிப்பறை இருக்கையில் ஃபோனை வைத்து உட்காருவது, தேவைக்கு அதிகமாக நீண்ட நேரம் உட்கார வைக்கும். இந்த பழக்கத்திற்கு எதிராக பல சுகாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.கழிவறை இருக்கைகளில் அதிக நேரம் உட்காருவது, மலக்குடலில் அதிக அழுத்தத்தை ஏற்படுத்துவதால், மூல நோய் அபாயத்தை அதிகரிக்கிறது. "உங்கள் ஆசனவாயைச் சுற்றியுள்ள நரம்புகள் அழுத்தத்தின் கீழ் நீண்டு, வீக்கம் அல்லது வீக்கமடையலாம். கழிப்பறையில் நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பதால், மலக்குடலின் கீழ் பகுதியில் அதிக அழுத்தத்தால் மூல நோய் உருவாகலாம்," என்று நிபுணர்கள் விளக்குகிறார்கள்.
எப்படி பாதுகாப்பாக இருக்க வேண்டும்?
நாம் அனைவரும் கழிவறையைப் பயன்படுத்திய பிறகு கை கழுவுவதை பின்பற்றுகிறோம், ஆனால் நம்மில் பலர் தொலைபேசி சுகாதாரத்தைத் தவிர்க்கிறோம். கழிப்பறையைப் பயன்படுத்திய பிறகு கைகளை சரியாகக் கழுவ வேண்டும் மற்றும் தொலைபேசிகளை கழிவறையில் அவசியம் தவிர்க்க வேண்டும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications


