Latest Updates
-
வக்ரமாகும் சனிபகவான்: ஜூலை முதல் 138 நாட்களுக்கு இந்த 4 ராசிக்கு தொழில் வளரும், வருமானம் அதிகரிக்கும்! -
வெயில் காலத்தில் ஏன் அடிக்கடி சண்டை வருது? தம்பதிகளே, இந்த ஒரு விஷயத்தை கவனிங்க! -
திருமண சீசன்ல வெயில், மழையால் கவலையா? பட்ஜெட் வீணாகாம இருக்க இந்த 5 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க! -
வயசானாலும் இளமையா தெரியணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்குகளை போடுங்க.. -
1 கப் உளுந்து இருந்தா, ஈவ்னிங் டைம்-ல இப்படி செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
பாபா வாங்கா கணிப்புப்படி, அடுத்த 6 மாதம் இந்த 5 ராசிக்கு ராஜவாழ்க்கை தான்.. உங்க ராசி இதுல இருக்கா? -
ஜூன் மாத வானிலை மாற்றமா? இந்த 5 வாஸ்து செடிகள் இருந்தா வீடே குளிர்ச்சியாகவும் அதிர்ஷ்டமாகவும் மாறும்! -
அடிக்குற வெயிலுக்கு மாம்பழத்தை இப்படி சர்பத் செஞ்சு குடிங்க.. குளுகுளுன்னு இருக்கும்.. -
உங்களுக்கு மாரடைப்பு வரக்கூடாதா? அப்ப டாக்டர் சொல்ற இந்த டயட்டை ஃபாலோ பண்ணுங்க.. -
சுக்கிர பெயர்ச்சியால் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 5 ராசிக்காரர்களுக்கு செல்வம் இரட்டிப்பாகும்..
உடலுறவுக்கு முன் கையை நன்றாக கழுவுவதால் கிடைக்கும் நன்மைகள் என்ன தெரியுமா? இனிமே மறக்காதீங்க...!
ஆரோக்கியமான மற்றும் திருப்திகரமான உடலுறவுக்கு தயாராகும் முன் நீங்கள் நினைவில் கொள்ள வேண்டிய விஷயங்கள் சில உள்ளன. அவை உறவிற்கு முன்கூட்டியே செய்ய வேண்டியதாகவும் இருக்கலாம், பின்னர் செய்ய வேண்டியதாகவும் இருக்கலாம். உடலுறுவுக்கு முன் நீங்கள் செய்ய வேண்டிய முக்கியமான விஷயங்களில் ஒன்று கைகளை நன்றாக கழுவுவது.
உடலுறவுக்கு முன் கைகளை கழுவுவதைத் தவிர்ப்பது, அந்தரங்க பாகங்கள் மூலம் பரவக்கூடிய கிருமிகளை உங்கள் உடலுக்குள் நுழைய அனுமதிக்கும். நீங்கள் மட்டுமல்ல உங்கள் துணையும் கைகளைக் கழுவுவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இல்லையெனில் அந்த வைரஸ்கள் மற்றும் பாக்டீரியாக்கள் அனைத்தும் உங்கள் துணையின் கைகள் மூலம் உங்கள் உடலில் நுழையலாம்.

உங்கள் மூலம் வீட்டிற்கு பரவக்கூடிய தொற்றுகள்
சமீபத்திய ஆய்வுகள், உங்கள் உடலுக்குள் நுழைந்து உங்கள் பிறப்புறுப்பு அல்லது சிறுநீர் பாதையை பாதிக்கக்கூடிய தீங்கு விளைவிக்கும் கிருமிகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது. பாக்டீரியா பிறப்புறுப்பு தொற்றுகள், ஈஸ்ட் தொற்றுகள் அல்லது சிறுநீர் பாதை நோய்த்தொற்றுகள் (UTI) இவற்றில் அடங்கும். மேலும்,
* MRSA
* இ - கோலி
* சால்மோனெல்லா
* க்ளோஸ்ட்ரிடியம் டிஃபிசில் (சி. டிஃபிசில்)
* கேம்பிலோபாக்டர்
* நோரோவைரஸ்
* ரோட்டா வைரஸ்
* சளி மற்றும் காய்ச்சல் வைரஸ்கள்
உங்கள் தொலைபேசி கணக்கிலடங்கா கிருமிகளைக் கொண்டிருக்கலாம்
சில மணிநேரங்களுக்கு முன்பே நீங்கள் குளித்திருந்தாலும் அதன்பின் உங்கள் கைபேசியை உபயோகித்திருந்தால் அல்லது டிவி பார்த்தால், உடலுறவில் ஈடுபடுவதற்கு முன் முதலில் கைகளைக் கழுவ வேண்டும். உங்கள் டிவி ரிமோட்டும் உங்கள் ஃபோனும் நீங்கள் நாள் முழுவதும் தொடும் அசுத்தமான மேற்பரப்புகள் என்பதைதெரிந்து கொள்ளுங்கள். பொது கழிப்பறை இருக்கையில் காணப்படும் கிருமிகளின் அளவை விட 10 முதல் 20 மடங்கு வரை தொலைபேசிகளில் இருக்கலாம் என்று ஆராய்ச்சி கண்டறிந்துள்ளது. எனவே ஒரு தடவை ஸ்க்ரோல் செய்தாலும் உடலுறவுக்கு முன் கைகளைக் கழுவலாம்.
செல்லப்பிராணிகள் இருந்தால் கைகழுவ வேண்டும்
வீட்டில் நாய்கள் அல்லது பூனைகள் இருந்தால், அவற்றை கொஞ்சிய பிறகு, உங்கள் துணையுடன் உடலுறவில் ஈடுபடும் முன் கைகளை கழுவுங்கள். உங்கள் செல்லப்பிராணிகளில் வாழக்கூடிய ஒட்டுண்ணிகள் மூலம் 240 க்கும் மேற்பட்ட நோய்கள் மனிதர்களுக்கு பரப்பப்படலாம். உங்கள் கைகளை கழுவுவதைத் தவிர்த்தால், உங்கள் பிறப்புறுப்பில் சிறிய வட்டப்புழுக்கள் அல்லது ரிங்வோர்ம்களை நீங்கள் பெறலாம்.
கைகளை நன்றாக கழுவுவதை உறுதிசெய்து கொள்ளுங்கள்
உங்கள் கைகளை சரியாக கழுவுவதற்கான அடிப்படை விதி, உங்கள் கையின் அனைத்து பகுதிகளையும் சோப்பு மற்றும் தண்ணீரால் நன்கு துடைக்க வேண்டும். உங்கள் கைகளின் பின்புறம், உங்கள் விரல்கள், விரல் நகங்கள் மற்றும் மணிக்கட்டுக்கு இடையில் என அனைத்து பகுதிகளையும் கழுவ வேண்டும். குறைந்தது 20 வினாடிகளுக்கு கையை தேய்க்கவும். ஸ்க்ரப்பிங் செய்த பிறகு தண்ணீரில் நன்கு கழுவவும், சுத்தமான துண்டு மூலம் உங்கள் கைகளைத் துடைக்கவும்.
சானிடைசரை பயன்படுத்தலாமா?
ஆல்கஹால் அடிப்படையிலான கை சுத்திகரிப்பான்கள் அனைத்து வகையான வைரஸ்களுக்கும் எதிராக செயல்படாது. எனவே உங்கள் கைகளை கழுவுவதற்கு சோப்பு மற்றும் தண்ணீரைப் பயன்படுத்துவது சிறந்தது. இருப்பினும், அது கைவசம் இல்லாதபோது, சானிடைசரைப் பயன்படுத்தலாம்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications

