Latest Updates
-
பொரி மிச்சமிருந்தா இந்த மாதிரி மொறுமொறுனு வடை சுடுங்க - டீ, காபியோட சாப்பிட சூப்பரா இருக்கும் -
லென்ஸ் போட்டிருக்கீங்களா? இந்த தவறுகளை செய்யாதீங்க.. பார்வைக்கே ஆபத்தாயிடும் - எச்சரிக்கும் கண் டாக்டர்! -
பாபா வங்கா கணிப்பு படி 2027-ல் உலகத்தில் நடக்கப்போகும் மாற்றங்களும், அழிவுகளும் - ஷாக் ஆகாதீங்க -
நவம்பரில் சிம்ம ராசிக்கு செல்லும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டி பறக்கப்போறாங்க.. -
நாயர் கடை வெங்காய சட்னி - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
அக்டோபர் 21, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு திடீர் அதிர்ஷ்டம் அடிக்கப்போகுதாம் -
புதன் உதயத்தால் தொழில் வாழ்க்கையில் புதிய உச்சத்தை தொடப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
November Matha Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. நவம்பர் மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
2 கப் சுண்டல் இருந்தா இந்த மாதிரி கொண்டைக்கடலை மசாலா வடை செய்யுங்க - மொறுமொறுனு சூப்பரா இருக்கும் -
Hair Care Tips: முடி ராக்கெட் வேகத்தில் வளரணுமா? அப்ப இந்த விதைகளில் ஒன்றை தினமும் உணவில் சேர்த்துக்கோங்க
நீங்க தினமும் யூஸ் பண்ணுற வாட்டர் பாட்டிலில் கிருமிகளே இருக்கக்கூடாதா? இதை யூஸ் பண்ணி கழுவுங்க...!
நாம் அன்றாடம் பயன்படுத்தும் ஒரு பொருளாக நம்முடைய வாட்டர் பாட்டில் மாறிவிட்டது. நாம் எப்போதும் அவற்றை எடுத்துச் செல்கிறோம் மற்றும் நம்முடைய உடலுக்குத் தேவையான திரவங்களைக் கொடுப்பதில் நம்முடனேயே இருக்கும் வாட்டர் பாட்டில் முக்கியப்பங்கு வகிக்கிறது. ஆனால் நீங்கள் சரியான நேரத்தில் மற்றும் சரியான முறையில் பாட்டில்களை சுத்தம் செய்யாவிட்டால் அதுவே உங்களுக்கு ஆபத்தாகும் என்பது உங்களுக்குத் தெரியுமா?
வாரம் அல்லது மாதத்திற்கு ஒருமுறை வாட்டர் பாட்டிலை சுத்தம் செய்வதையே நாம் வழக்கமாகக் கொண்டிருக்கிறோம். தண்ணீர் பாட்டில்களில் பாக்டீரியா மற்றும் பூஞ்சை விரைவாக வளரும் என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும், அவை எப்போதும் ஈரப்பதமாகவோ அல்லது உள்ளே இருந்து ஈரமாகவோ இருக்கும்.

தண்ணீர் பாட்டிலை சுத்தம் செய்து பராமரிக்க நாம் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். வெறும் சோப்பு மட்டும் பயன்படுத்துவது ஒருபோதும் உங்கள் வாட்டர் பாட்டிலை முழுமையாக சுத்தப்படுத்தாது. எனவே வேறுசில பொருட்கள் உங்கள் தண்ணீர் பாட்டிலை திறம்பட சுத்தம் செய்ய உதவும்.
தண்ணீர் பாட்டில்களுக்கு ஏன் சிறப்பு கவனிப்பு தேவை?
வாட்டர் பாட்டிலுக்குள் பாக்டீரியா மிக விரைவாக வளரும். கிருமிகள் மற்றும் பூஞ்சை ஈரமாக இருக்கும் இருண்ட மற்றும் மூடிய இடங்களில் வளரும். ஒரு வாரம் தொடர்ந்து தண்ணீர் பாட்டில்களை சுத்தம் செய்யாவிட்டால் 300,000 பாக்டீரியா செல்கள் உருவாகும் என்று ஒரு ஆய்வு குறிப்பிடுகிறது. எனவே தண்ணீர் பாட்டிலை சரியான முறையில் சுத்தம் செய்வதில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.
சோப்புகள்
டிஷ் சோப்பைப் பயன்படுத்துவது எந்தவொரு பாட்டில் அல்லது ஜாடியையும் சுத்தம் செய்வதற்கான ஒரு பாரம்பரிய முறையாகும். பாத்திரம் கழுவும் சோப்பைப் பயன்படுத்தி, பாட்டிலின் உள்ளே பிழிந்து சுத்தம் செய்யலாம். இது ஒரு பிரபலமான மற்றும் மிகவும் எளிதான மற்றும் பயனுள்ள வழியாகும்.
வினிகர்
வினிகரில் பல பொருட்களில் உள்ள அழுக்கு மற்றும் பாக்டீரியாக்களை ஆழமாக சுத்தப்படுத்தி நீக்கும் பண்புகள் உள்ளன. ஆடைகளில் உள்ள விடாப்பிடியான கறைகளைக் கூட வினிகரை பயன்படுத்தி . எனவே, அதே வழியில், தண்ணீர் பாட்டிலை சுத்தம் செய்ய வினிகரைப் பயன்படுத்தலாம்.
ஹைட்ரஜன் பெராக்சைடு முறை
தண்ணீர் பாட்டில்களை சுத்தம் செய்ய ஹைட்ரஜன் பெராக்சைடைப் பயன்படுத்தலாம் என்று பலருக்குத் தெரியாது. நம் உடலில் உள்ள காயங்களை சுத்தப்படுத்தவும், குணப்படுத்தவும் இந்த திரவம் பிரபலமானது, உங்கள் தண்ணீர் பாட்டில் மிகவும் பழமையானதாகவும், துர்நாற்றம் வீசுவதாகவும் இருந்தால் இதனை பயன்படுத்தி சிறப்பாக சுத்தம் செய்யலாம். இந்த முறை உங்கள் வாட்டர் பாட்டிலை சுத்தம் செய்வது மட்டுமல்லாமல், பாக்டீரியாக்களை நீக்கவும் உதவுகிறது.
பேக்கிங் சோடா
பேக்கிங் சோடா என்பது எந்தவொரு பாத்திரத்தையும் நன்கு சுத்தம் செய்ய உதவும் ஒரு பொருளாகும். நீங்கள் பழைய மற்றும் மோசமான நிலையில் உள்ள பாட்டிலைப் பயன்படுத்த விரும்பினால், பாட்டிலை மீண்டும் சுத்தமாக்க இதனை பயன்படுத்தலாம். மேலும் உங்கள் பாட்டிலில் அடையாளங்கள் அல்லது எண்ணெய் கிரீஸ் இருந்தால், இது அதனை விரைவாக வெளியேற்றும்.
எலுமிச்சை மற்றும் வேப்பிலை
ஒரு பாத்திரத்தில் வேப்பிலை மற்றும் எலுமிச்சையை நன்கு கொதிக்க வைக்கவும். பின் அதனை நன்கு ஆறவைத்து பாட்டிலில் ஊற்றி 20 நிமிடம் ஊற வைக்கவும். அதன்பின் பாட்டிலை நன்கு வழக்கம் போல சோப்பு கொண்டு கழுவவும். இது பாட்டிலில் இருக்கும் பாக்டீரியா மற்றும் நுண்ணுயிரிகளை நீக்க உதவும்.
ஆல்கஹால்
உங்கள் பாட்டிலின் வெளிப்புறத்தில் சில விடாப்பிடியான கரைகள் இருந்தால் அதனை ஆல்கஹாலை பயன்படுத்தி நீக்கலாம். ஒரு சிறிய காட்டன் துணியை ஆல்கஹாலில் நனைத்து வாட்டர் பாட்டிலில் கரைகள் இருக்கும் இடத்தை நன்கு அழுத்தித் துடைக்கவும்.
மேலே சொன்ன குறிப்புகள் உங்கள் வாட்டர் பாட்டிலை நன்றாக சுத்தம் செய்ய உதவுவதோடு அதிலுள்ள கிருமிகளையும் கொல்லும். சூடான அல்லது வெதுவெதுப்பான நீரை உபயோகிப்பது கூடுதல் பலன்களை அளிக்கும்.



Click it and Unblock the Notifications


