For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்க ராசிக்கு எந்த யோகாசனம் செய்வது நல்லது-ன்னு தெரியுமா?

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21 ஆம் தேதி சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. ஆகவே இக்கட்டுரையில் ஒவ்வொரு ராசிக்கும் பொருத்தமான யோகாசனங்கள் என்னவென்பதைக் காண்போம்.

|

யோகா என்றால் உடலும் மனமும் ஒன்றிணைவது என்று பொருள். யோகா நிலையில் உடல், மனம், உணர்ச்சி மற்றும் ஆன்மா ஆகியவை அனைத்தும் இணக்கமாக இருக்கும். அதாவது யோகா நாம் உடல் ரீதியாக ஆரோக்கியமாக இருக்க உதவுவது மட்டுமல்லாமல், அமைதியாகவும், நல்ல மன நிலையில் இருக்கவும் உதவுகிறது. நீங்கள் தினமும் யோகா செய்ய விரும்பினால், நாங்கள் உங்களுக்கு உதவ உள்ளோம்.

International Yoga Day 2022: Best Yoga Asanas For Your Zodiac Sign In Tamil

வேத ஜோதிடத்தில், யோகா என்பது ஒரு கிரகம், அடையாளம் அல்லது வீடு, இடம், அம்சம் அல்லது இணைப்பு மூலம், குறிப்பாக சூரியன் (ஆன்மா) மற்றும் சந்திரன் (மனம்) ஆகியவற்றின் மூலம் மற்றொரு கிரகத்தின் உறவாக வரையறுக்கப்படுகிறது. மேலும் ஜோதிடத்தில் உள்ள ஒவ்வொரு ராசியும் உடலின் ஒரு குறிப்பிட்ட பகுதியைக் குறிக்கின்றன. எனவே தான் அந்த பகுதியுடன் தொடர்புடைய உடல்நல பிரச்சனைளை சந்திக்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21 ஆம் தேதி சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. ஆகவே இக்கட்டுரையில் ஒவ்வொரு ராசிக்கும் பொருத்தமான யோகாசனங்கள் என்னவென்பதைக் காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மேஷம் - சாவாசனம்

மேஷம் - சாவாசனம்

மேஷ ராசிக்காரர்களுக்கு உடலிலேயே தலை மற்றும் மூளை அதிகம் பாதிக்கப்படக்கூடிய பகுதிகள் ஆகும். இந்த ராசிக்காரர்கள் மன அழுத்தம், உயர் இரத்த அழுத்தம், ஒற்றைத் தலைவலி, தலைவலி மற்றும் பக்கவாதம் ஆகியவற்றால் பாதிக்கப்பட அதிக வாய்ப்புள்ளது. இந்த ராசிக்காரர்கள் தங்கள் மனதையும், உடலையும் சாந்தப்படுத்த ஏற்ற யோகாசனங்களில் ஒன்று சாவாசனம் ஆகும்.

ரிஷபம் - பர்யங்காசனம்

ரிஷபம் - பர்யங்காசனம்

ரிஷபம் தொண்டை சக்கரத்தை ஆளுகிறது. இந்த ராசிக்காரர்கள் சளி, தொண்டை புண் மற்றும் காது வலி ஆகியவற்றால் அதிகம் பாதிக்கப்படுவார்கள். தைராய்டு சுரப்பியுடனான உறவு காரணமாக, இந்த ராசிக்காரர்கள் திடீரென உடல் பருமன் அல்லது எடை குறைவை அனுபவிப்பார்கள். இந்த ராசிக்காரர்களுக்கான சிறந்த ஆசனம் பர்யங்காசனம். ஏனெனில் இது தொண்டையில் இரத்த ஓட்டத்தை அதிகரித்து, தைராய்டு சுரப்பியின் செயல்பாட்டை மேம்படுத்துகிறது.

மிதுனம் - விபரீத காரணி ஆசனம்

மிதுனம் - விபரீத காரணி ஆசனம்

மிதுன ராசி நுரையீரல், தோள்பட்டை மற்றும் கைகளைக் கட்டுப்படுத்துகிறது. ஆகவே இந்த ராசிக்காரர்கள் சுவாச பிரச்சனைகளுடன், நோயெதிர்ப்பு பிரச்சனைகளையும் சந்திப்பார்கள். மேலும் இவ்ர்கள் பலவீனமான நரம்பியல் அமைப்பைக் கொண்டிருப்பதால், அமைதியற்றவர்களாகவும், மன பதற்றத்துடனும் இருப்பார்கள். இந்த ராசிக்காரர்களுக்கு ஏற்ற யோகாசனம் என்றால், அது விபரீத காரணி ஆசனம் ஆகும். ஏனெனில் இந்த ஆசனம் நியூரான்களைத் தூண்டுகிறது. இது கவலை மற்றும் பிற நரம்பியல் கோளாறுகளுக்கு சிகிச்சை அளிக்க உதவுகிறது.

கடகம் - சிசுவாசனம்

கடகம் - சிசுவாசனம்

கடக ராசி மார்பு பகுதியை ஆளுகிறது. இந்த ராசிக்காரர்கள் வலுவான உணர்ச்சியைக் கொண்டிருப்பார்கள் மற்றும் மனச் சோர்விற்கு அதிகம் ஆளாவார்கள். இவர்கள் தங்களின் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த வெறித்தனமாக சாப்பிடுவார்கள். இதனால் இவர்களுக்கு செரிமான பிரச்சனைகள் அதிகம் ஏற்படும். இந்த ராசிக்காரர்களுக்கு ஏற்ற யோகாசனம் சிசுவாசனம் ஆகும். இந்த ஆசனம் பதட்டத்தைக் குறைப்பதற்கும், ஓய்வெடுப்பதற்கும், நரம்புகளை அமைதிப்படுத்துவதற்கும் உதவுகிறது. அதோடு செரிமான அமைப்பை மேம்படுத்தவும் உதவுகிறது.

சிம்மம் - தடாசனம்

சிம்மம் - தடாசனம்

சிம்ம ராசிக்காரர்கள் இதய பிரச்சனைகள், படபடப்பு மற்றும் உயர் இரத்த அழுத்தம் ஆகியவற்றிற்கு அதிகம் ஆளாவார்கள். இந்த ராசிக்காரர்கள் ஆழமாக மூச்சை உள்ளிழுத்து வெளிவிடுவது, தங்களுக்குள் இருக்கும் கோபத்தைக் குறைத்து, மனதை சாந்தமாக வைத்திருக்கவும், யதார்த்தத்திற்கு திரும்பவும் உதவுகிறது. இந்த ராசிக்காரர்களுக்கு ஏற்ற ஆசனம் தடாசனம். இந்த ஆசனம் இதய ஆரோக்கியத்திற்கு மட்டுமின்றி கீழ் முதுகை வலுவாக்கவும் உதவுகிறது.

கன்னி - கபல்பதி பிராணயாமம்

கன்னி - கபல்பதி பிராணயாமம்

கன்னி ராசிக்காரர்களின் தொடர்ச்சியான இயக்கம் மற்றும் செயல்பாடு வயிற்று எரிச்சல் மற்றும் அல்சரைக் கூட ஏற்படுத்தும். கன்னி ராசிக்காரர்கள் போதுமான அளவு ஓய்வு எடுக்காவிட்டால், அது குடல் அழற்சியை ஏற்படுத்தும். இந்த ராசிக்காரர்களுக்கு ஏற்ற யோகாசனம் கபல்பதி பிராணயாமம் ஆகும். இந்த ஆசனம் செய்வது செரிமானத்திற்கு உதவுவதோடு, அனைத்து வகையான இரைப்பை குடல் பிரச்சனைகளையும் நீக்கும்.

துலாம் - புஜங்காசனம்

துலாம் - புஜங்காசனம்

துலாம் ராசி சிறுநீரக மண்டலத்தை ஆட்சி செகிறது. இந்த ராசியைச் சேர்ந்தவர்கள் சிறுநீரகம், அட்ரீனல் சுரப்பி மற்றும் தோல் பிரச்சனைகளுக்கு அடிக்கடி ஆளாவார்கள். இவர்கள் ஆரோக்கியமான உணவு மற்றும் உடலில் உள்ள சக்கரங்களை சமநிலைப்படுத்த வேண்டியது முக்கியம். இந்த ராசிக்காரர்களுக்கு ஏற்ற ஆசனம் புஜங்காசனம் ஆகும். இந்த ஆசனம் அடிவயிற்று உறுப்புக்களை தூண்டுவதற்கும், டென்சன் மற்றும் சோர்வை போக்குவதற்கும் உதவுகிறது. மேலும் இந்த ஆசனம் நோயெதிர்ப்ப சக்தியை மேம்படுத்தவும் உதவுகிறது.

விருச்சிகம் - சூரிய நமஸ்காரம்

விருச்சிகம் - சூரிய நமஸ்காரம்

விருச்சிக ராசிக்காரர்கள் சிறுநீர்ப்பை மற்றும் இனப்பெருக்க உறுப்புகளில் பிரச்சனையை சந்திப்பார்கள். பெண்களாக இருந்தால் சிறுநீர்ப்பை நோய்த்தொற்றுகள், பி.சி.ஓ.எஸ் போன்றவற்றால் அதிகம் பாதிக்கப்படுவார்கள். இந்த ராசிக்காரர்களுக்கு ஏற்ற யோகாசனம் சூரிய நமஸ்காரம் ஆகும். இந்த ஆசனம் உடலில் பாலியல் செயல்பாட்டை மேம்படுத்தவும், இனப்பெருக்க சுரப்பிகளுடன் தொடர்புடைய உள் பிரச்சனையை அகற்றவும் உதவுகிறது.

தனுசு - சேது பந்தாசனம்

தனுசு - சேது பந்தாசனம்

தனுசு ராசிக்காரர்கள் இடுப்பு, சியாட்டிக் நரம்பு மற்றும் பார்வை கோளாறுகளால் அவதிப்பட வாய்ப்புள்ளது. இவர்கள் சியாட்டிகாவில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இந்த ராசிக்காரர்களுக்கு ஏற்ற யோகாசனம் சேது பந்தாசனம் ஆகும். இந்த ஆசனம் இடுப்பு நெகிழ்வுகளை விரிவுப்படுத்த மற்றும் நீட்டிக்க உதவுகிறது. அதே வேளையில் இது முதுகு தசைகளை வலுப்படுத்துகிறது மற்றும் கீழ் முதுகு வலியை நீக்குகிறது. ஒட்டுமொத்தமாக, இந்த ஆசனம் முதுகு, பிட்டம் மற்றும் தொடை எலும்புகளை வலுவாக்குகிறது மற்றும் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது.

மகரம் - விரபத்ராசனம்

மகரம் - விரபத்ராசனம்

மகர ராசி வேர் சக்கரத்துடன் இணைக்கப்பட்டுள்ளன. இதுவே இந்த ராசிக்காரர்களின் சக்தி சக்கரம் மற்றும் இந்த சக்கரம் சமநிலையில் இருந்தால் தான், அது சக்திவாய்ந்ததாகவும் நம்பிக்கையுடனும் உணர வைக்கும். இந்த ராசிக்காரர்கள் எலும்பு, முழங்கால் மற்றும் மூட்டு பிரச்சனைகளுக்கு ஆளாகிறார்கள். இந்த ராசிக்காரர்களுக்கான சிறந்த ஆசனம் விரபத்ராசனம். இது முதுகு, தொடைகள், முழங்கால்கள், கணுக்கால் மற்றும் கால்களை வலுப்படுத்த உதவுகிறது.

கும்பம் - மத்ஸ்யாசனம்

கும்பம் - மத்ஸ்யாசனம்

கும்ப ராசி கீழ் கால்கள், கணுக்கால் மற்றும் இரத்த ஓட்டம் ஆகியவற்றை ஆளுகிறது. இந்த ராசிக்காரர்களுக்கு நரம்புகள் புடைத்து இருக்கலாம் மற்றும் அவர்கள் கால்களுக்கு அதிக ஓய்வை அளிக்க வேண்டும். இந்த ராசிக்காரர்களுக்கு ஏற்ற யோகாசனம் மத்ஸ்யாசனம் ஆகும். இந்த ஆசனம் உடலில் உள்ள மன அழுத்தம், பிடிப்புகள் மற்றும் அவர்களின் கால்களில் உள்ள நரம்புகளை விரிவுபடுத்துகிறது. முக்கியமாக இந்த ஆசனம் கால்களை ஓய்வெடுக்க அனுமதிப்பதால், இரத்த ஓட்டம் சீராகி, நரம்புகளுக்கு உதவுகிறது.

மீனம் - விராசனம்

மீனம் - விராசனம்

மீன ராசிக்காரர்களுக்கு கால்கள் தான் மிகவும் உணர்திறன் வாய்ந்த பகுதியாகும். இந்த ராசிக்காரர்கள் சுவாசம் தொடர்பான பிரச்சனைகளை சந்திக்கலாம். இந்த ராசிக்காரர்களுக்கு சிறு காலநிலை மாற்றம் கூட ஆரோக்கியத்தில் எதிர்மறை தாக்கதை ஏற்படுத்தும். இந்த ராசிக்காரர்களுக்கு ஏற்ற ஆசனம் விராசனம் ஆகும். இது முழங்கால்கள், கணுக்கால் மற்றும் தொடைகளில் நெகிழ்வுத்தன்மையை அதிகரிக்க உதவுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

International Yoga Day 2022: Best Yoga Asanas For Your Zodiac Sign In Tamil

International Yoga Day 2022: In this article, we will tell you which yoga asanas work best for your zodiac sign? Read on to know more...
Story first published: Tuesday, June 21, 2022, 13:06 [IST]
Desktop Bottom Promotion