For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்களுக்கு அடிக்கடி பசி எடுக்குதா? அதுக்கு என்ன காரணம் தெரியுமா? நீங்க என்ன பண்ணனும் தெரியுமா?

முறையான உணவுப் பழக்கத்திற்குச் செல்வதன் மூலம் உங்களை அதிகமாகக் கட்டுப்படுத்த வேண்டாம். ஏனெனில், இது உங்களுக்கு கிடைக்கக்கூடிய ஊட்டச்சத்துகள் கிடைக்காமல்போக வாய்ப்புள்ளது.

|

நம் அனைவரின் வாழ்க்கையிலும் மிகவும் முக்கியமானது உணவு. ஏனெனில், உணவுதான் நம் உடல் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக்கொள்ளும்போது, அது உங்களுக்கு பல நன்மைகளை வழங்குகிறது. நாம் உணவுடன் உணர்வுபூர்வமாக இணைந்திருக்கிறோம். நாம் பிறந்த நாள் முதல் உணவால்தான் வளர்க்கப்படுகிறோம். இது நம் உடலின் செயல்பாட்டிற்கு எரிபொருளைப் பயன்படுத்த வேண்டும் என்ற உண்மையைத் தவிர, இது நம் வாழ்வில் முக்கியமான விஷயமாகிறது. ஆனால் பலருக்கு, உணவு ஒரு உணர்ச்சிபூர்வமான கட்டாயமாக மாறி, அவர்கள் அதிகமாக சாப்பிடுகிறார்கள். இது அவர்களின் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும்.

How to Stop Overeating: Tips to Avoid Eating Too Much in Tamil

அதிகமாகச் சாப்பிடுபவர்களில் சிலர் பிங்கி-ஈட்டிங் கோளாறு எனப்படும் மருத்துவக் கோளாறால் பாதிக்கப்படுகின்றனர். அவர்கள் ஒரு குறுகிய காலத்தில் ஒரு பெரிய அளவில் கட்டாயமாக சாப்பிட்டு பின்னர் குற்ற உணர்ச்சியை உணர்கிறார்கள். மேலும் அவர்கள் இதை ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் செய்கிறார்கள். நாள் முழுவதும் அதிகளவில் சாப்பிடுபவர்கள் அல்லது உணர்ச்சிவசப்படும்போது அதிகமாக சாப்பிடுபவர்களும் உள்ளனர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
இந்த பழக்கம் எப்படி தொடங்குகிறது?

இந்த பழக்கம் எப்படி தொடங்குகிறது?

டி.வி. முன் அமர்ந்து நொறுக்குத் தீனிகளை உண்பது போன்ற கெட்ட பழக்கத்தின் விளைவாக நீங்கள் அதிகமாகச் சாப்பிடத் தொடங்கலாம். இன்னும் பலருக்கு, அதிகமாக சாப்பிடுவதற்கு உணர்ச்சிப் பிரச்சனை முக்கிய காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. மற்றொரு குழு மக்கள் தங்கள் உணவைக் கட்டுப்படுத்தத் தொடங்கிய பிறகு பாதிக்கப்படுகின்றனர். ஒரு குறிப்பிட்ட நேரத்திற்குப் பிறகு உணவைப் பராமரிப்பது அவர்களுக்கு கடினமாக இருக்கும்போது, ​​அவர்கள் 'மோசமான' உணவுகளுக்கு மாறுகிறார்கள். இறுதியில் கட்டுப்பாடு மற்றும் அதிகப்படியான உணவு சாப்பிடுவதில் சிக்கிக் கொள்கிறார்கள்.

உணவுக்கு அடிமையாதல்

உணவுக்கு அடிமையாதல்

ஆம், 'உணவுக்கு அடிமையாதல்' என்ற சொல் இப்போது மக்களிடையே பிரபலமாகிவிட்டது. சர்க்கரை, கொழுப்பு மற்றும் உப்பு அதிக அளவில் உள்ள சில உணவுகள் மூளையில் சில மாற்றங்களை ஏற்படுத்துகின்றன என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். ஆதலால், சரியான அளவில் எடுத்துக்கொள்வது உங்கள் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். அதிகமாக சாப்பிடும் பிரச்சனையை சமாளிக்க, இங்கே கொடுக்கப்பட்டுள்ள உதவிக்குறிப்புகளைப் பின்பற்றவும்.

ஆலோசனை உதவி

ஆலோசனை உதவி

உங்கள் சொந்த பிரச்சனையில் இருந்து விடுபடுவது எளிதல்ல. குறிப்பாக அது உணர்ச்சி மன அழுத்தத்தால் ஏற்பட்டால், அதிலிருந்து நீங்கள் மீண்டு வர மிகவும் சிரமபடலாம். அதிகப்படியான உணவை சாப்பிடுவதற்கான காரணங்களைக் கண்டறிய உணவு நிபுணர் அல்லது ஆலோசகரின் உதவியைப் பெறலாம்.

உங்களை நீங்களே கேள்வி கேட்டுக்கொள்ளுங்கள்

உங்களை நீங்களே கேள்வி கேட்டுக்கொள்ளுங்கள்

உங்களுக்கு ஒரு குறிப்பிட்ட உணவின் மீது ஆழ்ந்த ஏக்கம் இருந்தால், உங்களுக்கு உண்மையில் பசிக்கிறதா என்று நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள். உங்கள் புலன்கள் உங்களுக்கு பசி உள்ளதை உணர்த்தும்போது மட்டுமே உணவை உண்ண வேண்டும். கட்டாயத்தின் காரணமாக அல்லது பசிக்காத போது உணவை எடுத்துக்கொள்ள வேண்டாம்.

உங்களை நீங்களே நேசிக்கவும்

உங்களை நீங்களே நேசிக்கவும்

குற்ற உணர்வு மற்றும் தன்னைத்தானே சபித்துக் கொள்ளும் உணர்வுகளை விட்டுவிடுங்கள். 'உணவுக்கு அடிமையாவதற்காக' உங்களை நீங்களே குற்றம் சாட்ட வேண்டாம். ஏனெனில், பிரச்சனையைத் தீர்ப்பதற்கு பதிலாக நீங்கள் உண்மையில் அதை வளர்க்கிறீர்கள். இது உங்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தலாம். ஆதலால், உங்களை நீங்கள் நேசிக்க கற்றுக்கொள்ள வேண்டும்.

உங்களை அதிகமாக கட்டுப்படுத்தாதீர்கள்

உங்களை அதிகமாக கட்டுப்படுத்தாதீர்கள்

முறையான உணவுப் பழக்கத்திற்குச் செல்வதன் மூலம் உங்களை அதிகமாகக் கட்டுப்படுத்த வேண்டாம். ஏனெனில், இது உங்களுக்கு கிடைக்கக்கூடிய ஊட்டச்சத்துகள் கிடைக்காமல்போக வாய்ப்புள்ளது. அதேநேரம் இயற்கையாகவே ஆரோக்கியமற்ற உணவை உண்பதை நீங்களே தவிர்ப்பீர்கள். எனவே, உங்களை இழக்காதீர்கள்.

'நல்ல' அல்லது 'கெட்ட' உணவு எதுவும் இல்லை

'நல்ல' அல்லது 'கெட்ட' உணவு எதுவும் இல்லை

உங்கள் உணவை வில்லன் என்ற முத்திரையைக் கொடுத்து, அதை வெறுக்க முயற்சிக்காதீர்கள். நீங்கள் தீமையை எதிர்த்துப் போராடுவது போல, உணவுகள் மீதான உங்கள் அணுகுமுறையில் நீங்கள் மிகவும் அகநிலையாக மாறினால், விஷயங்கள் உங்களுக்கு மோசமாகிவிடும். ஒரு உணவை உணவாகக் கருதுங்கள். மேலும் ஊட்டச்சத்தை அளிக்கும் உணவுகளை நீங்கள் சாப்பிட்டால், உடல் செயல்பாடுகளில் ஈடுபடுங்கள். இதனால் உங்கள் உடல் அதை சமநிலைப்படுத்துகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

How to Stop Overeating: Tips to Avoid Eating Too Much in Tamil

Are You A Compulsive Eater? Here are the Tips To Stop Overeating in tamil.
Story first published: Wednesday, July 6, 2022, 16:35 [IST]
Desktop Bottom Promotion