For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கொரோனாவில் இருந்து நம்மை காக்கும் பாதுகாப்பு மாஸ்க்குகளை பராமரிப்பது எப்படி?

வைரஸிலிருந்து நம்மை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள சரியான முகமூடிகள், பிபிஇ கருவிகள், கையுறைகள் போன்றவை இருப்பது அவசியம். ஆனால் அவற்றை சரியாக எப்படி பராமரிப்பது என்பது நிறைய பேருக்கு தெரிவதில்லை.

|

இந்தியாவில் COVID-19 பாதிப்பிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள நமக்கு அனைத்து தேவைகளும் அவசியமாகிறது. நாம் பயன்படுத்தும் பிபிஇ கருவிகள், முகமூடிகள் போன்ற அத்தியாவசியமான தேவைகளுக்கு பிளாஸ்டிக் பயன்பாடு தேவைப்படுகிறது. உலகளாவிய தொற்று நோய் அச்சுறுத்தலில் இருந்து நம்மை காத்துக் கொள்ள தனிமைப்படுத்துதல், சமூக விலகல் போன்றவை தேவைப்படுகிறது. வீடுகளுக்கு வெளியே நம் சுற்றுப்புறங்களை நாம் கவனமாக கவனிக்க வேண்டியதும் அவசியமாகிறது.

How PPE Kits, Masks And Other COVID-19 Safety Guards Have Impacted The Surroundings

சாலைகளில் போக்குவரத்து குறைவாக இருப்பதால் நமக்கு குறைந்த காற்று மாசுபாடு இருந்தாலும் முகமூடிகள், பாதுகாப்பு கருவிகள், முக கவசங்கள் போன்றவற்றால் நம் அன்றாட வாழ்க்கையில் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரித்து வருவதை காணலாம். வைரஸிலிருந்து நம்மை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள சரியான முகமூடிகள், கியர்கள், பிபிஇ கருவிகள், கையுறைகள் போன்றவை இருப்பது அவசியம். ஆனால் அவற்றை சரியாக எப்படி பராமரிப்பது, எப்படி அகற்றுவது என்பது நிறைய பேருக்கு தெரிவதில்லை. அதற்கு நம் சுற்றுப்புறங்களை பிளாஸ்டிக் இல்லாத நிலையில் வைக்க வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
முகமூடிகள், ஆரோக்கியம் மற்றும் காற்று மாசுபாடு

முகமூடிகள், ஆரோக்கியம் மற்றும் காற்று மாசுபாடு

பெரும்பாலான முகமூடிகள் பாலியஸ்டர் மற்றும் பாலிகார்பனேட் போன்ற துணிகளால் ஆனவை. இந்த முகமூடிகள் பாக்டீரியாக்களை தூரமாக வைக்க பயன்படுகிறது. இதில் பயன்படுத்தப்படும் பொருட்கள் முகமூடியை திரவ எதிர்ப்பு ஆக்குகிறது. எனவே பருத்தி அடிப்படையிலான ஃபேஸ் மாஸ்க்குகளைப் பயன்படுத்துவது நல்லது. இது உங்க சுற்றுப்புறத்தை தூய்மையாக வைக்க உதவி செய்யும். குறிப்பாக COVID-19 நோயாளியுடன் தொடர்பு இல்லாதவர்களுக்கு துணி முகமூடிகளை சோப்பு நீரில் கழுவி மீண்டும் பயன்படுத்த வைத்துக் கொள்ளலாம்.

கவனத்தில் வைக்க வேண்டியவை

கவனத்தில் வைக்க வேண்டியவை

நாம் கவனத்தில் வைக்க வேண்டிய முக்கியமான காரணிகள் என்னவென்றால் பயன்படுத்தப்பட்ட முகமூடிகளை முறையாக அப்புறப்படுத்தா விட்டால் வைரஸ் சுற்றுச் சூழலுக்கு வெளிப்பட வாய்ப்பு உள்ளது. இது விரைவாக பரவுவதற்கு வழிவகுக்கும்.

பெரும்பாலான முகமூடிகள், கருவிகள் மற்றும் பிற பாதுகாப்பு COVID-19 கியர், ஒரு முறை பயன்பாடாக இருக்கிறது. எனவே இதை உணர்ந்து பயன்படுத்துவது நல்லது. எனவே பாதுகாப்பு பயன்பாட்டு கருவிகளை சுற்றுப்புறங்களுக்கு ஆபத்தாக மாற்றாமல் இருக்க குறிப்பிட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

COVID-19 பாதுகாப்பு கருவிகளை பாதுகாப்பாக அகற்றுவதை உறுதி செய்ய சில செய்ய வேண்டியவை மற்றும் செய்யக் கூடாதவற்றை பின்பற்ற வேண்டும்.

செய்ய வேண்டியவை

செய்ய வேண்டியவை

* உங்க முகமூடிகள், கையுறைகள், திசுக்கள் மற்றும் சானிட்டைசர் காலியான பாட்டில்களை மூடியுள்ள குப்பை தொட்டிகளில் மட்டுமே போட வேண்டும்.

* முடிந்த வரை மறுபடியும் பயன்படுத்தும் முகமூடிகளை பயன்படுத்துங்கள். இது நிறைய மாஸ்க் குப்பைகளில் போவதை தடுக்கும். அதே மாதிரி COVID-19 நோயாளிகளுடன் தொடர்புடைய நபருக்கு N95 முகமூடிகள் அவசியம். அதே மாதிரி ஆல்கஹால் வகை சானிட்டைசரை பயன்படுத்துங்கள்.

* பயன்பாட்டு பொருட்களை மூடி உள்ள குப்பை தொட்டியில் போட பழகுங்கள்.

* அகற்றுவதற்கு என்று தனி பெட்டிகள், கொள்கலன்களை பயன்படுத்துங்கள்.

செய்யக் கூடாதவை

செய்யக் கூடாதவை

* பயன்படுத்தப்பட்ட பாதுகாப்பு கருவிகளை திறந்த மற்றும் பொது இடங்களில் நிராகரிக்க வேண்டும்.

* பாலிப்ரொப்பிலீனால் செய்யப்பட்ட மாஸ்க் மற்றும் பிற பாதுகாப்பு கிட்களை பயன்படுத்தாதீர்கள். ஏனெனில் இவற்றை அப்புறப்படுத்துவது என்பது கடினமான ஒன்று.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

How PPE Kits, Masks And Other COVID-19 Safety Guards Have Impacted The Surroundings

In fear of getting affected with the global pandemic, we certainly have overlooked the fact that our surroundings get affected by various factors.
Desktop Bottom Promotion