Latest Updates
-
Solar Eclipse 2026: ஆண்டின் கடைசி சூரிய கிரகணம்: 12 ராசிக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
சுக்கிரன் சொந்த ராசிக்குள் நுழைவதால் வெற்றிகளையும், செல்வத்தையும் குவிக்கப்போகும் 3 ராசிகள் யார் தெரியுமா? -
Aadi Amavasai 2026: ஆடி அமாவாசை ஸ்பெஷல் பரங்கிக்காய் பாயாசம் ரெசிபி - செஞ்சு பாருங்க - செமையா இருக்கும் -
எப்பவும் ஒரே மாதிரி பாஸ்தா செய்யாம, இப்படி முட்டை பொடிமாஸ் பெப்பர் பாஸ்தா செய்யுங்க.. அள்ளும்.. -
Aadi Amavasai 2026: ஆடி அமாவாசை நாளில் மறந்தும் இந்த 7 விஷயங்களை செஞ்சுடாதீங்க.. -
இந்த 4 ராசி ஆண்கள் ரொம்ப கவர்ச்சியானவர்களாக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 வருடம் கழித்து சிம்ம ராசிக்கு செல்லும் புதன்: ஆகஸ்ட் இறுதியில் இந்த 4 ராசிக்கு செல்வம் குவியப்போகுது! -
Aadi Amavasai 2026: தர்ப்பணம் என்றால் என்ன? ஆடி அமாவாசை அன்று ஏன் அவசியம் தர்ப்பணம் கொடுக்க வேண்டும் -
மூட்டு வலி நீங்க, இரத்தம் ஊற உதவும் முருங்கைக்கீரை கொள்ளு சூப் - எப்படி செய்யணும் தெரியுமா? -
சனிபெயர்ச்சியால் 2027-ல் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
அஸ்வகந்தாவை இப்படி சாப்பிட்டா உடல் எடை இருமடங்கு வேகத்தில் குறையுமாம்...
அஸ்வகந்தா உடலில் ஒரு குறிப்பிட்ட வேலையை மட்டும் செய்யாமல், உடலில் பல வேலையை செய்கிறது. இதனால் இது உடல் எடையை வேகமாகவும், ஆரோக்கியமாகவும் குறைக்க உதவுகிறது.
நாம் அனைவருமே அஸ்வகந்தாவைப் பற்றி கேள்விப்பட்டிருப்போம். அஸ்வகந்தாவை 'இந்தியன் ஜின்செங்' என்றும் அழைப்பார்கள். இது ஆயுர்வேதத்தில் பல நூற்றாண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வரும் மூலிகையாகும். பொதுவாக அஸ்வகந்தா ஆண்மையை அதிகரிக்க, பாலியல் பிரச்சனைகளை போக்குவதில் சிறந்தது என்பது அனைவருக்கும் தெரியும்.

ஆனால் அஸ்வகந்தா ஏராளமான நன்மைகளைக் கொண்டுள்ளது. குறிப்பாக இன்று ஏராளமான மக்கள் அவதிப்பட்டு வரும் உடல் பருமனைக் குறைக்க பெரிதும் உதவுகிறது. ஒருவரது உடல் எடை அதிகமாக இருந்தால், அது பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். குறிப்பாக இரத்த அழுத்தம், சர்க்கரை நோய், இதய நோய், மூட்டு வலி போன்ற பல பிரச்சனைகளை சந்திக்க வைக்கும்.

அஸ்வகந்தா எப்படி உடல் எடையைக் குறைக்க உதவுகிறது?
அஸ்வகந்தா உடலில் ஒரு குறிப்பிட்ட வேலையை மட்டும் செய்யாமல், உடலில் பல வேலையை செய்கிறது. இதனால் இது உடல் எடையை வேகமாகவும், ஆரோக்கியமாகவும் குறைக்க உதவுகிறது. இப்போது அஸ்வகந்தா உடல் எடையைக் குறைக்க எப்படி உதவுகிறது மற்றும் அஸ்வகந்தாவை எப்படி உட்கொள்ள வேண்டும் என்பதையும் காண்போம்.

மன அழுத்தத்தைக் குறைக்கும்
உடல் பருமன் ஏற்படுவதற்கான முதன்மையான காரணங்களில் ஒன்று மன அழுத்தம். ஒருவர் அதிக மன அழுத்தம் அடையும் போது, ஜங்க் அல்லது பதப்படுத்தப்பட்ட உணவுகளை சாப்பிட வேண்டுமென்ற ஆசை எழும். இந்த உணவுகளில் உடலுக்கு கேடு விளைவிக்கும் கெட்ட கொழுப்புக்கள் அதிகம் உள்ளதால், அது உடல் எடை அதிகரிப்புக்கு வழிவகுக்கும். அஸ்வகந்தா மன அழுத்தத்தில் இருந்து நிவாரணம் அளிக்க உதவி புரிந்து, எடை இழப்பை ஊக்குவிக்கிறது.

நல்ல தூக்கத்தைப் பெற உதவும்
ஒருவருக்கு போதுமான அளவு தூக்கம் கிடைக்காவிட்டால், அது உடலில் ஹார்மோன் சமநிலையின்மை மற்றும் உடல் பருமனுக்கு வழிவகுக்கும். அஸ்வகந்தா தூக்கமின்மையால் அவதிப்படுபவர்களுக்கு போதுமான தூக்கத்தைப் பெற உதவுகிறது.

செரிமானம் மேம்படும்
ஒருவரது செரிமானம் சிறப்பாக இல்லாவிட்டால், உண்ணும் உணவுகளில் உள்ள கொழுப்புக்கள் சரியாக ஜீரணமாகாமல் உடலில் அப்படியே தங்கி உடல் பருமனை உண்டாக்கும். அஸ்வகந்தா செரிமானம் தொடர்பான அனைத்து பிரச்சனைகளையும் போக்கும். இதன் மூலம் உடல் எடையைக் குறைக்க உதவும்.

ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் நிறைந்தது
அஸ்வகந்தாவில் எடை இழப்பிற்கு தேவையான ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் உள்ளன. ஒருவரது மெட்டபாலிசம் மற்றும் ஆற்றலை வேகப்படுத்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மிகவும் அவசியம். இவை உடல் வீக்கத்தைக் குறைத்து, உடலில் தேங்கியுள்ள கொழுப்பை எரிக்க உதவுகிறது.

அஸ்வகந்தாவை உட்கொள்வது எப்படி?
தற்போது அஸ்வகந்தா கேப்ஸ்யூல் வடிவில் கிடைக்கிறது. ஆனால் அஸ்வகந்தாவை இப்படி உட்கொள்வதை விட, உலர்ந்த அஸ்வகந்தா இலையில் இருந்து தயாரிக்கப்படும் பொடியை உட்கொள்வது மிகவும் நல்லது. அதுவும் தினமும் அஸ்வகந்தா பொடியை உட்கொண்டு வந்தால், உடல் எடையில் மிகப்பெரிய மாற்றத்தைக் காணலாம். அஸ்வகந்தா பொடியை எப்படி உட்கொள்வது என்று நீங்கள் கேட்கலாம். ஒரு டம்ளர் வெதுவெதுப்பான பாலில் ஒரு டீஸ்பூன் அஸ்வகந்தா பொடியை சேர்த்து, சிறிது தேன் மற்றும் ஏலக்காய் பொடியை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். இந்த பாலை தினமும் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இப்படி தினமும் காலையில் குடித்து வந்தால், உடல் எடை இருமடங்கு வேகத்தில் குறையும்.



Click it and Unblock the Notifications