For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்க மூக்குல அடிக்கடி இரத்தம் வருதா? அப்ப வீட்டுல இத பண்ணுங்க... சரியாகிடும்...!

நமது மூக்கு ஒரு உணர்திறன் வாய்ந்த பகுதி மற்றும் சிறிய இரத்த நாளங்களால் நிரம்பியுள்ளது. இது எளிதில் காயமடைந்துவிடும் மற்றும் மூக்கடைப்புக்கு வழிவகுக்கும். மூக்கில் இரத்தம் வருவதற்கு வறட்சியும் ஒரு முக்கிய காரணமாகும்.

|

நம் உடலில் சில பகுதிகளில் இருந்து இரத்தம் வெளியேறுவது நம்மை மிகவும் அச்சத்தில் ஆழ்த்தும். மூக்கு, காது மற்றும் வாயில் இரத்தம் வெளியேறுவது பெரிய நோயின் அறிகுறி அல்லது உயிருக்கு ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தலாம் என்று பயப்படுவோம். பெரியவர்கள் மற்றும் சிரியவர்களை பொறுத்து விளைவுகள் வேறுபடலாம். மூக்கில் இரத்தப்போக்கு ஏற்படுவது என்பது 10 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் அடிக்கடி காணப்படும் ஒரு பொதுவான பிரச்சனையாகும். அவை பொதுவாக ஒரு அடிப்படை பிரச்சனையால் ஏற்படவில்லை என்றாலும், அவை மிகவும் பயமாக இருக்கும்.

Here’s a step by step guide on how to stop a nosebleed in tamil

இது சில நேரங்களில் சாதாரணமானதாகக்கூட இருக்கலாம். எனவே, மூக்கில் இரத்தப்போக்கு ஏற்பட்டால் அதை எவ்வாறு நிறுத்துவது என்பதற்கான வழிகாட்டிகளை இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மூக்கில் இரத்தம் வருவதற்கு என்ன காரணம்?

மூக்கில் இரத்தம் வருவதற்கு என்ன காரணம்?

நமது மூக்கு ஒரு உணர்திறன் வாய்ந்த பகுதி மற்றும் சிறிய இரத்த நாளங்களால் நிரம்பியுள்ளது. இது எளிதில் காயமடைந்துவிடும் மற்றும் மூக்கடைப்புக்கு வழிவகுக்கும். மூக்கில் இரத்தம் வருவதற்கு வறட்சியும் ஒரு முக்கிய காரணமாகும். வறண்ட மற்றும் குளிர்ந்த காலநிலையால் உங்கள் மூக்கில் விரிசல் ஏற்படலாம். இது மூக்கிலிருந்து இரத்தம் வருவதற்கு வழிவகுக்கும். நீங்கள் அடிக்கடி உங்கள் மூக்கினுள் கையை அல்லது துணியை அல்லது ஏதும் பொருளை விடுவதால், அது உங்கள் மூக்கு நரம்பை சிறிது காயப்படுத்தலாம். இது மூக்கில் இரத்தம் வருவதற்கு வழிவகுக்கும். மூக்கில் இரத்தப்போக்கை எவ்வாறு நிறுத்துவது என்பதற்கான படிப்படியான வழிகாட்டி பற்றி இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.

படி 1

படி 1

வரும் முன் காப்பதே சிறந்தது. எனவே உங்களுக்கு அடிக்கடி மூக்கடைப்பு இருந்தால், சிறிது பெட்ரோலியம் ஜெல்லியைப் பயன்படுத்தி உங்கள் மூக்கை ஈரப்பதமாக்குங்கள். உங்கள் விரல் நகங்களை (குறிப்பாக குழந்தைகளுக்கு) சுருக்கமாக வைத்திருங்கள். வறண்ட மற்றும் வெப்பமான காலநிலையில் வெளியே செல்வதைத் தவிர்க்கவும். நிறைய தண்ணீர் (8-10 கண்ணாடிகள்) குடிப்பதன் மூலம் உங்களை நீரேற்றமாக வைத்திருக்கவும்.

படி 2

படி 2

மூக்கிலிருந்து இரத்தப்போக்கு ஏற்பட்டால், முதலுதவிக்காக, மூக்கின் கீழ் மென்மையான பகுதியில் உங்கள் மூக்கை கடுமையாக கிள்ளுங்கள். நேராக உட்காருங்கள், படுக்காதீர்கள். உங்கள் மூக்கை 5 நிமிடங்கள் கிள்ளுங்கள், உங்கள் வாய் வழியாக அமைதியாக சுவாசிக்கவும். உங்கள் தலையில் ஒரு ஐஸ் பேக் அல்லது குளிர்ச்சியான எதையும் வைக்கலாம்.

படி 3

படி 3

மூக்கைக் கிள்ளிய பிறகு, உங்கள் தொண்டைக்குள் இரத்தம் வடிந்தால், அதைத் துப்பவும், அதை விழுங்காமல் இருக்க முயற்சி செய்யவும்.

படி 4

படி 4

5 நிமிடங்கள் கிள்ளிய பிறகும் இரத்தப்போக்கு நிற்கவில்லை என்றால், உங்கள் மூக்கை மேலும் 5 நிமிடங்கள் அப்படியே வைத்திருங்கள். இரத்தப்போக்கு இன்னும் நிற்கவில்லை என்றால், மருத்துவரிடம் விரைந்து செல்லவும்.

படி 5

படி 5

மூக்கில் இரத்தம் வருவது ஒரு பொதுவான பிரச்சனையாகும், பெரும்பாலானவை முதலுதவி மூலம் எளிதில் சமாளிக்க முடியும். கவலை மற்றும் பீதி உங்கள் இரத்த அழுத்தத்தை அதிகரிக்கிறது. இதனால் மேலும் இரத்தப்போக்கு அதிகம் ஏற்படுகிறது. எனவே, அமைதியாக இருக்க முயற்சி செய்யுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Here’s a step by step guide on how to stop a nosebleed in tamil

Here’s a step by step guide on how to stop a nosebleed in tamil.
Story first published: Wednesday, October 26, 2022, 12:58 [IST]
Desktop Bottom Promotion