Latest Updates
-
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம்
இதுவரை நாம் தவறான முறையில் சாப்பிட்டு வந்த சில ஆரோக்கியமான உணவுகள்!
ஒரு ஆரோக்கியமான உணவை சாப்பிடுவதன் நோக்கமே அதில் உள்ள அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் அனைத்தையும் பெற வேண்டும் என்பதற்காகத் தானே?
ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட்டால் மட்டும் போதாது, அதை சரியான வழியில் சாப்பிட வேண்டும். ஒரு ஆரோக்கியமான உணவை சாப்பிடுவதன் நோக்கமே அதில் உள்ள அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் அனைத்தையும் பெற வேண்டும் என்பதற்காகத் தானே? நீங்கள் அவற்றை சரியான வழியில் சாப்பிடாமல் இருந்தால், பின் எவ்வாறு அதில் உள்ள சத்துக்களைப் பெற முடியும்.

பலருக்கும் இந்த முக்கியமான விஷயம் தெரிவதில்லை. இதனால் தான் இன்று வரை நாம் அனைவரும் தவறான வழியிலேயே உணவுகளை உட்கொண்டு வந்துள்ளோம். இனிமேல் இந்த தவறைத் தவிர்ப்பதற்காக, தமிழ் போல்ட் ஸ்கை இதுவரை நாம் தவறாக சாப்பிட்டு வந்த சில உணவுகளை எப்படி சாப்பிட வேண்டும் என்பதைக் கொடுத்துள்ளது. அதைப் படித்து தெரிந்து இனி அவ்வாறு சாப்பிடும் பழக்கத்தைக் கொள்ளுங்கள்.

ஏன் சரியான சமையல் முறை முக்கியமானது?
சில உணவுகளை பச்சையாக சாப்பிடுவதே நல்லது. அதே சமயம் சில உணவுகளை நன்கு சமைத்து சாப்பிட வேண்டும். சமைப்பதன் மூலம் உணவுப் பொருட்களில் உள்ள சத்துக்கள் அழிக்கப்பட்டுவிடும் என்பது ஒரு கட்டுக்கதை. உண்மை என்னவெனில், சரியான சமையல் முறையில் சமைப்பதன் மூலம் உணவுப் பொருட்களில் உள்ள சத்துக்கள் தக்க வைக்கப்படும்.

தக்காளி
தக்காளியில் லைகோபைன் என்னும் அற்புதமான ஆன்டி-ஆக்ஸிடன்ட் உள்ளது. இந்த லைகோபைன் பல்வேறு நோய்களான புற்றுநோய், கட்டிகள், மாரடைப்பு போன்றவற்றில் இருந்து உடலைப் பாதுகாக்கிறது. பொதுவாக பச்சை காய்கறிகளை சமைக்காமல் சாப்பிடுவதே மிகவும் நல்லது; சமைப்பதன் மூலம் அதில் உள்ள சத்துக்கள் அழிக்கப்படும் என்று சொல்வதைக் கேட்டிருப்பீர்கள். இருப்பினும், தக்காளியைப் பொறுத்தவரை இது உண்மையல்ல. ஆய்வின் படி, சமைத்த தக்காளியை விட சமைக்காத தக்காளியில் தான் லைகோபைன் அதிகம் உள்ளது.

பூண்டு
வெள்ளைப் பூண்டில் நன்மையளிக்கக் கூடிய அல்லிசின் என்னும் பொருள் உள்ளது. இது நாள்பட்ட உடல்நல பிரச்சனைகளான புற்றுநோய், உயர் இரத்த அழுத்தம், சர்க்கரை நோய் மற்றும் இதய நோய் போன்றவற்றைத் தடுக்கும். இதோடு இந்த அல்லிசின் காற்றில் படும்போது செயல்படுத்தப்படுகிறது. ஆகவே பூண்டு பற்களின் தோலை உரித்து, சிறு துண்டுகளாக்கி சிறிது நேரம் கழித்து பயன்படுத்துங்கள். இதனால் அல்லிசின் செயல்படுத்தப்பட்டு, பூண்டின் நன்மைகளைப் பெற முடியும்.

ப்ராக்கோலி
ப்ராக்கோலி மிகவும் ஆரோக்கியமான காய்கறிகளுள் ஒன்று. பெரும்பாலானோர் ஆரோக்கியத்தை மேம்படுத்த ப்ராக்கோலியை வாங்கி சாப்பிடுவார்கள். அதுவும் ப்ராக்கோலியை நீரில் போட்டு வேக வைத்து சாப்பிடுவதை விட, ஆவியில் வேக வைத்தோ அல்லது பச்சையாகவோ சாப்பிடுவது தான் நல்லது. ஏனெனில் நீரில் வேக வைக்கும் போது, ப்ராக்கோலியில் உள்ள அத்தியாவசிய சத்துக்களான வைட்டமின் சி, குளோரோஃபில் மற்றும் இதர ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அழிக்கப்பட்டுவிடும். எனவே இதன் முழு சத்துக்களைப் பெற விரும்பினால் ஆவியில் வேக வைத்து சாப்பிடுங்கள்.

கிவி
கிவி பழத்தை வாங்குபவர்கள் செய்யும் முதல் தவறு, அதன் தோலை நீக்கிவிடுவது தான். கிவி பழத்தை தோலுடன் சாப்பிடுவதே நல்லது. ஸ்மூத்தி, சாலட் என்று எது செய்வதாக இருந்தாலும், அதை தோலுடன் சேர்த்துக் கொள்ளங்கள். ஏனெனில் கிவி பழத்தின் தோலில் ஊட்டச்சத்துக்களான ஃபோலேட் மற்றும் வைட்டமின் ஈ போன்றவை அதிகம் உள்ளது. கிவி பழத்தை தோல் நீக்கி சாப்பிடுவதை விட தோலுடன் சாப்பிடும் போது 50% நார்ச்சத்து, 32% வைட்டமின் ஈ, 34% ஃபோலேட் போன்றவை அதிகம் கிடைக்கும். எனவே இனிமேல் கிவி பழத்தை தோலுடன் சாப்பிடுங்கள்.

ஆளி விதைகள்
ஆளி விதைகள் ஒமேகா-3 கொழுப்பு அமிலம் நிறைந்த சூப்பர் உணவுப் பொருளாக கருதப்படுகிறது. அதோடு ஆளி விதையில் நார்ச்சத்து, லிக்னன்கள் மற்றும் பைட்டோ நியூட்ரியண்ட்டுகள் போன்ற ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சத்துக்கள் உள்ளது. ஆனால் பலர் செய்யும் பெரிய தவறு என்னவெனில், அதை முழுசாக சாப்பிடுவார்கள். இந்த விதைகளை அப்படியே சரியாக அரைக்காமல் விழுங்கும் போது, வயிற்றால் அதை ஜீரணிக்க முடியாது. ஆகவே ஆளி விதைகளை இனிமேல் சாப்பிடுவதாக இருந்தால், முதலில் ஒருமுறை மிக்ஸியில் போட்டு அரைத்து, பின் சாப்பிடுங்கள். இதனால் எளிதில் ஜீரணித்து, உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் கிடைக்கும்.



Click it and Unblock the Notifications
