For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அப்படி என்ன பழம் இது? இதுல இவ்ளோ சத்து இருக்குனு இத்தன நாளா தெரியாம போச்சே…

ரோஜா பூ அனைவருக்கும் தெரிந்த ஒன்று. அது என்ன ரோஜா ஆப்பிள். இந்த பழம் ஆப்பிள் குடும்பத்தை சார்ந்தது அல்ல. பெயர் மட்டும் தான் ஆப்பிளே தவிர, சுவை மற்றும் பிற விஷயங்கள் அனைத்தும் கொய்யாப்பழத்தை போன்றது.

|

ரோஜா பூ அனைவருக்கும் தெரிந்த ஒன்று. அது என்ன ரோஜா ஆப்பிள். இந்த பழம் ஆப்பிள் குடும்பத்தை சார்ந்தது அல்ல. பெயர் மட்டும் தான் ஆப்பிளே தவிர, சுவை மற்றும் பிற விஷயங்கள் அனைத்தும் கொய்யாப்பழத்தை போன்றது. தினமொரு ஆப்பிள் சாப்பிட்டால் மருத்துவரை நாட வேண்டியது இருக்காது என்பது போல தான், இந்த ரோஜா ஆப்பிளும் தன்னுள் எண்ணிலடங்கா சத்துக்களை மறைத்து வைத்துள்ளது.

Health Benefits Of Rose Apple That You May Not Know

வெளிநாடுகளில் பெரும்பாலானோர் சாப்பிட்டு வரும் இந்த பழம் பற்றி, நமக்கு தான் இத்தனை நாட்கள் தெரியாமல் போய்விட்டது. இந்த பழமானது, கோயில் மணி வடிவத்தில் ரோஸ் நிறத்தில் இருக்கும். இதற்கு தண்ணீர் ஆப்பிள் என்ற பெயரும் உண்டு. இந்தியாவில் இதனை ஜாம் பழம் என்று அழைக்கின்றனர். இந்த பழம் சுவையில் மட்டும் சிறந்ததல்ல, மருத்துவ பலன்களிலும் பெரும் இடத்தை வகிக்கிறது என்றே சொல்ல வேண்டும். ஏனென்றால், இதிலுள்ள சத்துக்கள் அப்படி, வாருங்கள், இப்போது ரோஜா ஆப்பிளின் மருத்துவ குணங்களைப் பற்றி விரிவாக எடுத்துரைக்கிறேன். இதை படித்துவிட்டாவது, இதை எங்காவது பார்த்தால் வாங்கி சாப்பிட மறவாதீர்கள்....

நீரிழிவு நோய், புற்றுநோய் தடுப்பு, குறைந்த நோய் எதிர்ப்பு சக்தி, செரிமான பிரச்சனைகள், வலிப்புத்தாக்கங்கள் உள்ளிட்ட எண்ணற்ற பிரச்சனைகளை சரி செய்ய உதவும் பாரம்பரிய மருந்துகளில் இந்த பழம் பயன்படுத்தப்படுகிறது என்பது எத்தனை பேருக்கு தெரிந்திருக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ரோஜா ஆப்பிளில் உள்ள ஊட்டச்சத்துக்களின் பட்டியல்

ரோஜா ஆப்பிளில் உள்ள ஊட்டச்சத்துக்களின் பட்டியல்

ஒவ்வொரு பழத்திலும், நம் உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கக்கூடிய எண்ணற்ற வைட்டமின்கள், ஊட்டச்சத்துக்கள் மறைந்துள்ளன. அவற்றுள் சில,

* வைட்டமின் சி மற்றும் ஏ

* நியாசின்

* கால்சியம்

* பொட்டாசியம்

* மெக்னீசியம்

* பாஸ்பரஸ்

* புரதம்

* நார்ச்சத்து

ரோஜா ஆப்பிளின் மருத்துவ பயன்பாடுகள்:

ரோஜா ஆப்பிளின் மருத்துவ பயன்பாடுகள்:

முன்பு கூறியது போலவே, இந்த பழம் எண்ணற்ற மருந்துகளில் பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக, நாட்டு மருத்துவத்தில் பெரும் பங்கை வகிக்கிறது.

* மலேசியாவில் த்ரஷ் சிகிச்சைக்கு ரோஜா ஆப்பிள் மரத்தின் பட்டையை கொண்டு தயாரிக்கப்படும் ஒரு வகை காபி பயன்படுத்தப்படுகிறது.

* இதன் சாறு மூளை மற்றும் கல்லீரல் பிரச்சினைகளுக்கு ஒரு தீர்வினை பெற உதவுகிறது.

* ரோஜா ஆப்பிளின் பூக்கள் காய்ச்சலை விரட்ட உதவுகின்றன.

* அதன் இலைகளில் கண்களில் வரும் புண் மற்றும் வாத நோய்க்கு சிகிச்சையளிக்க உதவக்கூடிய டையூரிடிக் மற்றும் எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளன.

* ரோஸ் ஆப்பிள் பழத்தின் விதைகள் வயிற்றுப்போக்கை சரிசெய்ய உதவுகிறது.

* கியூபாவின் பூர்வீகத்தில், ரோஸ் ஆப்பிள் வேரை கால்-கை வலிப்பு பிரச்சனை சிகிச்சைக்கு பயன்படுத்தப்படுகிறது.

* கொலாம்பிய மக்கள் ரோஜா ஆப்பிள் விதைகளை வலி நிவாரணியாக பயன்படுத்துகின்றனர்.

ரோஜா ஆப்பிளின் நன்மைகள்:

ரோஜா ஆப்பிளின் நன்மைகள்:

நீரிழிவை கட்டுப்படுத்தும்

ரோஜா ஆப்பிள்களில் ஒரு ஆல்கலாய்டு ‘ஜம்போசின்'உள்ளது. இது ஸ்டார்ச் வழிமுறையை சர்க்கரையாக மாற்றிடும். நாவல் பழத்தைப் போலவே, நீரிழிவு நோயாளிகளும் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த இந்த பழத்தை சாப்பிடலாம்.

சிறந்த இதய ஆரோக்கியம்

சிறந்த இதய ஆரோக்கியம்

ரோஜா ஆப்பிளில் அதிகப்படியான நார்ச்சத்து உள்ளதால், அது கொழுப்புச்சத்துக்களை சீராக்க உதவிடும். இதன் மூலம், இதயம் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களும் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைக்கப்படும், அதாவது, மாரடைப்பு, பக்கவாதம் போன்றவை ஏற்படாது.

புற்றுநோயை தடுக்க

புற்றுநோயை தடுக்க

ரோஜா ஆப்பிளில் உள்ள வைட்டமின் சி மற்றும் வைட்டமின் ஏ பிற சேர்மங்களுடன் இணைந்து புற்றுநோயில் இருந்து ஒருவரது உடலை பாதுகாத்திடும். அதுமட்டுமல்லாது, பல ஆய்வுகளின் முடிவுகளின் படி, ரோஜா ஆப்பிளானது, மார்பக புற்றுநோய் மற்றும் பெருங்குடல் புற்றுநோய்க்கு நல்ல தீர்வினை வழங்குவது தெரிய வந்துள்ளது.

சிறந்த நோய் எதிர்ப்பு சக்தி

சிறந்த நோய் எதிர்ப்பு சக்தி

ரோஜா ஆப்பிளில் பூஞ்சை எதிர்ப்பு மற்றும் ஆன்டி-பாக்டீரியல் பண்புகள் உள்ளதால், அவை உடலை நோய் தொற்றுகளில் இருந்து காத்திடும். அதுமட்டுமின்றி. உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை வலுவாக்கிடும்.

சீரான செரிமானம்

சீரான செரிமானம்

நார்ச்சத்தை தன்னுள் அதிகமாக கொண்டுள்ள ரோஜா ஆப்பிள், அனைத்து வகையான செரிமான பிரச்சனைகளை சுலபமாக தீர்த்துவிடும். வயிற்றுப்போக்கு மற்றும் மலச்சிக்கல் போன்ற செரிமானப் பாதையில் உள்ள சிக்கல்களை நீக்கவும் இவை உதவக்கூடியது.

ரோஜா ஆப்பிள் சாப்பிடுவதன் பிற நன்மைகள்:

ரோஜா ஆப்பிள் சாப்பிடுவதன் பிற நன்மைகள்:

* சிறுநீர்ப்பை நோய்த்தொற்றுகளுக்கு சிகிச்சையளிக்க

* நுரையீரல் மற்றும் சிறுநீரகங்களின் நச்சுத்தன்மைகளை நீக்க

* கர்ப்ப காலத்தில் நீரிழப்புகளை தவிர்க்க

* சருமத்தை நீரேற்றத்துடன் வைத்திருக்க மற்றும் சரும சுரப்பு உற்பத்தியை ஒழுங்குபடுத்த

* முகப்பருக்களுக்கு சிகிச்சையளிக்க

* புற ஊதா கதிர்களில் இருந்து சருமத்தைப் பாதுகாக்க

* வெயிலின் தாக்கத்தில் இருந்து பாதுகாக்க

* எலும்புகளை பலப்படுத்த

* கூந்தல் ஆரோக்கியத்தை மேம்படுத்த

* மெலிந்த முடி, வழுக்கை பிரச்சனைகளுக்கு தீர்வளிக்க உதவிடுகிறது.

ரோஜா ஆப்பிளினால் பக்கவிளைவு ஏதேனும் ஏற்படக்கூடுமா?

ரோஜா ஆப்பிளினால் பக்கவிளைவு ஏதேனும் ஏற்படக்கூடுமா?

ரோஜா ஆப்பிளை பொறுத்தவரை, அநேக சத்துக்களையும், ஆரோக்கிய பலன்களையும் மட்டுமே அள்ளி கொடுக்கக்கூடியது. சாப்பிடுவது அமுதாகவே இருந்தாலும், அளவிற்கு மீறினால் அதுவும் நஞ்சாகும் அல்லவா? அப்படி தான், அளவிற்கு அதிகமாக சாப்பிடும் போது மட்டுமே ரோஜா ஆப்பிள் கேடு விளைவிக்கக்கூடும். ரோஜா ஆப்பிளின் விதைகள், இலைகள் மற்றும் வேர் ஆகியவற்றில் ப்ருசிக் அமிலம் அல்லது சயனைடு அதிகமாக உள்ளது. இவை அதிகமாக உடலில் சேரும் பட்சத்தில் அதிகப்படியான ஆபத்து என்றே கூற வேண்டும். ஒருவர் பாதுகாப்பாக இருப்பதோடு, நன்மைகளை அனுபவிக்க வேண்டுமென்ற ஆசையில் இருந்தால், ரோஜா ஆப்பிளை அதிக எண்ணிக்கையில் சாப்பிடுவதை தவிர்த்தே ஆக வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Health Benefits Of Rose Apple That You May Not Know

Here we listed some of the health benefits of rose apple that you may not know. Read on...
Desktop Bottom Promotion