Just In
- 2 hrs ago
சர்க்கரை நோயாளிகள் வெல்லம் சாப்பிடலாமா? அப்படி சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா?
- 2 hrs ago
மிதுனம் செல்லும் புதனால் அடுத்த 15 நாட்கள் இந்த ராசிகளுக்கு செம சூப்பரா இருக்கப் போகுது...
- 3 hrs ago
இந்த 5 ராசிக்காரர்கள் மிகவும் அப்பாவிகளாக இருப்பார்களாம்... இவங்கள சமாளிப்பது ரொம்ப கஷ்டமாம்!
- 4 hrs ago
ஜூலை மாதம் உங்க ஆரோக்கியம் எப்படி இருக்கப்போகுது தெரியுமா? இந்த 5 ராசிக்காரங்களுக்கு ஆபத்து அதிகமாம்...!
Don't Miss
- Finance
ஒரே நேரத்தில் 8000 பேருக்கு பதவி உயர்வு: ஆச்சரியத்தில் தலைமை செயலக பணியாளர்கள்
- News
என் கேரக்டரே இது தான்! எதைப்பற்றியும் கவலைப்படும் ஆள் நானில்லை -அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
- Movies
Rocketry public Review : யார் இந்த நம்பி நாராயணன்?.. மாதவனுக்கு குவியும் பாராட்டு!
- Sports
எனக்கே ஸ்கெட்ச்சா?? இங்கிலாந்து அணியை அலறவிட்ட டிராவிட்.. இந்திய ப்ளேயிங்11ல் இதை கவனித்தீர்களா??
- Technology
iPhone வச்சிக்கிட்டு ஓவர்-சீன் போடுறாங்களா? "இதை" சொல்லுங்க.. அடங்கிடுவாங்க!
- Automobiles
முன்பதிவு தொடங்கியது... இந்த காருக்காகதான் இந்தியாவே வெயிட்டிங்.... இவ்ளோ கம்மியான விலையில் வரப்போகுதா!
- Travel
அழகும் சாகசமும் நிறைந்த சுதாகட் கோட்டையில் ட்ரெக்கிங் செய்யலாம் வாருங்கள்!
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
தினமும் 2 வேக வைத்த முட்டையை சாப்பிடுவதால் பெறும் நன்மைகள் குறித்து தெரியுமா?
புரோட்டீன் உணவு என்றாலே நினைவிற்கு வரும் முதல் உணவு முட்டையாகத் தான் இருக்கும். அப்படிப்பட்ட முட்டையை தினமும் சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. அதுவும் குளிர்காலத்தில் முட்டையை சாப்பிடுவது இன்னும் நல்லது. குளிர்காலத்தில் தினமும் 2 முட்டையை சாப்பிடுவது உடலுக்கு வெதுவெதுப்பைக் கொடுக்கும்.
பொதுவாக குளிர்காலத்தில் நாம் பல்வேறு நோய்த்தொற்றுகளுக்கு ஆளாவோம். ஏனெனில் பெரும்பாலான தொற்று நுண்ணுயிரிகள் குளிர்ந்த மற்றும் வறண்ட நிலையில் எளிதில் செழித்து வளரும், எனவே நம்மைத் தாக்கும் வாய்ப்புகள் அதிகம். ஆகவே குளிர்காலத்தில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகளைத் தேர்ந்தெடுத்து சாப்பிட வேண்டும்.
அதுவும் முட்டையை சாப்பிட்டால் ஜலதோஷத்தின் அபாயம் குறையும் மற்றும் குளிர்காலத்தில் முட்டையை அன்றாடம் உட்கொள்வதால் பாக்டீரியாக்களால் ஏற்படும் நோய்கள் எதுவும் வராது. இது தவிர இன்னும் பல நன்மைகள் கிடைக்கும். அதுவும் முட்டையை ஆம்லெட் செய்து சாப்பிடுவதை விட வேக வைத்து சாப்பிடுவதே நல்லது. இதனால் முட்டையின் முழு சத்துக்களையும் பெற முடியும். இப்போது வேக வைத்த முட்டையை குளிர்காலத்தில் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்துக் காண்போம்.

வேக வைத்த முட்டையில் உள்ள சத்துக்கள்
வேக வைத்த ஒரு முட்டையால் உடலுக்கு 77 கலோரி ஆற்றல் கிடைக்கும். இது மட்டுமின்றி, 0.6 கிராம் கார்போஹைட்ரேட், 5.3 கிராம் கொழுப்பு, 1.6 கிராம் நிறைவுற்ற கொழுப்பு, 2 கிராம் மோனோசாச்சுரேட்டட் கொழுப்பு, 212 மிகி கொலஸ்ட்ரால், 6.3 கிராம் புரோட்டீன், 6 சதவீதம் வைட்டமின் ஏ, 15 சதவீதம் வைட்டமின் பி2, 9 சதவீமம் வைட்டமின் பி12, 7 சதவீதம் வைட்டமின் பி5, 86 மிகி பாஸ்பரஸ் மற்றும் 22 சதவீதம் செலினியம் உள்ளது. இச்சத்துக்கள் அனைத்துமே உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. இப்போது வேக வைத்த முட்டையை தினமும் சாப்பிடுவதால் பெறும் நன்மைகள் குறித்து காண்போம்.

நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்
தினமும் ஒரு வேக வைத்த முட்டையை சாப்பிட்டு வந்தால், உடல் வலிமையாக இருக்கும். முட்டையில் ஆன்டி-ஆக்சிடன்ட்டுகள், வைட்டமின்கள், புரோட்டீன்கள் மற்றும் பல ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இவை அனைத்தும் நோயெதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

இதய ஆரோக்கியத்திற்கு நல்லது
முட்டையில் நிறைய கொலஸ்ட்ரால் உள்ளது. ஆனால் இது இதய ஆராக்கியத்திற்கு தீங்கு விளைவிக்காது. ஏனெனில் இது டயட்டரி கொலஸ்ட்ரால். இது உடலில் கெட்ட கொலஸ்ட்ராலின் அளவை அதிகரிக்காது. ஆகவே தான் இதயம் ஆரோக்கியமாக இருக்க முட்டையை தினமும் சாப்பிடுமாறு அறிவுறுத்தப்படுகிறது.

புரோட்டீன் அதிகம் உள்ளது
ஒரு வேக வைத்த முட்டையில் 6 கிராமிற்கு மேல் புரோட்டீன் உள்ளது. எனவே இதை தினமும் சாப்பிட்டு வந்தால், உடலில் புரோட்டீன் குறைபாடு நீக்கப்படுவதோடு, உடலும் வலிமையாகும். மேலும் புரோட்டீன் உடலில் உள்ள செல்களை சரிசெய்யும் பணியை செய்கின்றன. எனவே உடல் செல்கள் ஆரோக்கியமாக இருக்க தினமும் முட்டையை சாப்பிடுங்கள்.

கண்களுக்கு நன்மை பயக்கும்
முட்டை கண்களின் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. தினமும் 2 முட்டையை உணவில் சேர்த்து வந்தால், கண்களின் ஆரோக்கியத்திற்கு தேவையான கரோட்டினாய்டுகள் கிடைக்கும். இது கண்களின் செல்களில் ஏற்படும் அரிப்பைத் தடுக்கும். இது தவிர, கண் புரை அபாயமும் குறையும்.

எலும்புகள் வலுவாகும்
முட்டைகளில் வைட்டமின் டி ஏராளமான அளவில் உள்ளது. இது எலும்புகளை வலுப்படுத்த மிகவும் முக்கியமான சத்தாகும். முட்டையை தினமும் சாப்பிட்டால், அது சூரியக் கதிர்களிடம் இருந்து கிடைக்கும் வைட்டமின் டி-யை உறிஞ்சுவதற்கு உதவுகிறது. இதன் மூலம் எலும்புகளை வலுவடைந்து, எலும்பு தொடர்பான பிரச்சனைகளின் அபாயம் குறையும்.

குளிர்காலத்தில் முட்டையை சாப்பிட சிறந்த நேரம்
காலை உணவின் போது முட்டையை சாப்பிடுவது அதிக பலனைத் தருவதாக ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகின்றனர். முட்டையை சமைக்க 5-10 நிமிடம் ஆகும். முட்டையில் மக்னீசிம், ஜிங்க், இரும்புச்சத்து மற்றும் புரோட்டீன் போன்றவை போதுமான அளவு இருப்பதால், இதை காலை உணவாக உட்கொண்டால், வயிற்றை நிரப்புவதோடு, நீண்ட நேரம் பசி எடுக்காமலும் தடுக்கும்.