For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நீங்க பகலில் அடிக்கடி தூங்குவீங்களா? அப்ப இரத்த அழுத்தம் & பக்கவாதம் ஏற்படும் அபாயம் அதிகமாம்!

குட்டித் தூக்கம் ஆரோக்கியத்திற்குத் தீமையல்ல. ஆனால் இரவில் போதுமான தூக்கம் இல்லாததால் பகலில் தூங்கும் போது அது ஒரு பிரச்சனையாக மாறும் என்று ஆய்வு கூறுகிறது.

|

தூக்கம் நம் வாழ்வின் இன்றியமையாத செயல். நல்ல தூக்கம் நம் உடல் ஆரோக்கியத்தை பராமரிக்க உதவும். தூக்கமின்மை நமக்கு பல்வேறு உடல்நல சிக்கல்களை ஏற்படுத்தலாம். ஆனால், சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வு நீங்கள் தூங்குவது உங்கள் உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தும் எனக் கூறுகிறது. இப்போது, இது நம்மில் பலருக்கு வினோதமாகத் தோன்றலாம். நாம் அனைவரும் தூங்குவதை விரும்புகிறோம். இரவு நேரங்களில் தூங்குவது உங்கள் ஆரோக்கியத்திற்கு நல்லது. ஆனால், பெரும்பாலான மக்கள் பகல் நேரங்களில் தூங்குவதை பழக்கமாக கொண்டிருக்கிறார்கள்.

Frequent napping can pose risk to health in tamil

நம்மில் பலர் பகல் நேரங்களில் குட்டித் தூக்கம் போடுகிறோம். இருப்பினும், அடிக்கடி குட்டித் தூக்கம் போடுவது உங்கள் ஆரோக்கியத்தை எவ்வாறு பாதிக்கும் என்பதை ஒரு ஆய்வு கண்டறிந்துள்ளது. அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷன் இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், அடிக்கடி தூங்குவது இரத்த அழுத்தம் மற்றும் பக்கவாதம் அபாயத்துடன் எவ்வாறு இணைக்கப்படுகிறது என்பதை இக்கட்டுரையில் காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஆய்வில் கண்டறிந்தது என்ன?

ஆய்வில் கண்டறிந்தது என்ன?

அடிக்கடி தூங்குவது உயர் இரத்த அழுத்தம் மற்றும் பக்கவாதம் ஏற்படுவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கும் என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. தூக்கம் நம் ஆரோக்கியத்திற்கு நல்லது. குட்டித் தூக்கம் என்பது ஒரு குறுகிய கால தூக்கமாகும். இது பெரும்பாலும் பகல் நேரத்தில் தூங்குவதை குறிக்கிறது. ஒரு இரவு தூக்கம் போலல்லாமல், குட்டித் தூக்கம் லேசானது மற்றும் எளிதில் நாம் முழித்து விடுவோம். பல வீடுகளில் மதிய உணவுக்குப் பிறகு மக்கள் தூங்குகிறார்கள். தூக்கம் செரிமானத்துடன் தொடர்புடையது. இருப்பினும், பல ஆரோக்கிய நன்மைகள் இருந்தபோதிலும், பல மணிநேரம் அல்லது அடிக்கடி தூங்குவது உங்கள் ஆரோக்கியத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தலாம்.

தூக்கம் பற்றி ஆய்வு என்ன சொல்கிறது?

தூக்கம் பற்றி ஆய்வு என்ன சொல்கிறது?

குட்டித் தூக்கம் ஆரோக்கியத்திற்குத் தீமையல்ல. ஆனால் இரவில் போதுமான தூக்கம் இல்லாததால் பகலில் தூங்கும் போது அது ஒரு பிரச்சனையாக மாறும் என்று ஆய்வு கூறுகிறது. இதனுடன் பொதுவான புரிதல் என்னவென்றால், இரவில் இருக்கும் தூக்கமின்மை பிரச்சனை ஒரு நபரின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் பாதிக்கிறது. போதிய தூக்கமின்மை, மீண்டும் செயலில் இறங்குவதற்கு முன் தன்னைப் புத்துணர்ச்சியடையச் செய்யும் பொருட்டு உடலுக்கு சரியான இடைவெளியைக் கொடுக்காது.

ஆய்வின் விவரங்கள்

ஆய்வின் விவரங்கள்

ஆய்வின் தொடக்கத்தில் உயர் இரத்த அழுத்தம் அல்லது பக்கவாதம் இல்லாத யுகே பயோபேங்க்-இல் இருந்து 3,58,451 பங்கேற்பாளர்களிடம் ஆய்வு செய்யப்பட்டது. ஒருபோதும் பகல் நேரங்களில் தூங்காதவர்களுடன் ஒப்பிடுகையில், அடிக்கடி தூங்குவது அத்தியாவசிய உயர் இரத்த அழுத்தம், பக்கவாதம் மற்றும் இஸ்கிமிக் பக்கவாதம் ஆகியவற்றின் அதிக ஆபத்துடன் தொடர்புடையது என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர். நான்கு வருடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், பங்கேற்பாளர்கள் இரத்தம், சிறுநீர், உமிழ்நீர் மாதிரிகள் மற்றும் தூக்கத்தின் காலம் ஆகியவற்றின் அடிப்படையில் தொடர்ந்து ஆய்வு செய்யப்பட்டனர்.

தூங்கும் ஆபத்து

தூங்கும் ஆபத்து

இந்த ஆய்வு மட்டுமல்ல, இன்னும் பல ஆய்வுகள் அதிக தூக்கத்தின் அபாயத்தைப் பற்றி தெரிவிக்கின்றன. 1996 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வு, பகல்நேர தூக்கத்தை மனச்சோர்வு அறிகுறிகளுடன் இணைத்துள்ளது. பகலில் அடிக்கடி குட்டித் தூக்கம் போடுபவர்கள் அதிக எடையுடன் இருப்பார்கள் என்றும் அந்த ஆய்வு கூறியது. அடிக்கடி பகல் நேரத்தில் தூங்குபவர்கள் இரவுநேரத்தில் தூக்கமின்மை பிரச்சனையால் அவதிப்பட அதிக வாய்ப்புள்ளது.

இதய நோய் ஆபத்து

இதய நோய் ஆபத்து

மேலும் ஆண் மற்றும் நகர்ப்புற மக்கள், அதிக மனச்சோர்வு அறிகுறிகளைப் பெறுவதற்கும், குறைவான உடல் செயல்பாடு மற்றும் அதிக எடையுடன் இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று ஆய்வு கூறுகிறது. ஐரோப்பிய சங்கத்தில் வழங்கப்பட்ட ஒரு ஆராய்ச்சி ஆய்வில், நீண்ட நேரம் தூங்குபவர்களுக்கு இருதய நோய் பாதிப்பு 34% அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

நீங்கள் எப்படி தூங்க வேண்டும்?

நீங்கள் எப்படி தூங்க வேண்டும்?

ஒரு தூக்கம் பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது. அது பகல் நேரத்தில் உடலுக்கு அழுத்தத்தை அளிக்கும், ஆனால் அது சரியான முறையில் செய்தால் மட்டுமே உங்களுக்கு நல்லது. பகலில் மணிக்கணக்கில் தூங்குவதற்குப் பதிலாக சில நிமிடங்கள் பவர் நேப் எடுக்க வேண்டும் என்று சுகாதார நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். இது குட்டித் தூக்கம் களைப்பைத் தவிர்ப்பதோடு, மூளையின் செயல்திறனைத் திறம்பட வைக்கிறது என்று நிபுணர்கள் கூறுகின்றனர். சிறந்த தூக்க நேரம் 30 நிமிடங்கள் முதல் 60 நிமிடங்கள் வரை இருக்க வேண்டும்.

மக்கள் ஏன் தூங்குகிறார்கள்?

மக்கள் ஏன் தூங்குகிறார்கள்?

மக்கள் களைப்படைவது தூக்கம் வருவதற்கான வெளிப்படையான காரணம். இந்த சோர்வுக்கான ஒரே விளக்கம் இரவில் போதுமான தூக்கம் இல்லாததுதான். கேஜெட்களைப் பயன்படுத்துதல், வெகுநேரம் வரை விழித்திருந்து, அதிகாலை வரை தூங்கும் வாழ்க்கை முறையைப் பின்பற்றுதல், போதைப்பொருள் பயன்பாடு, அதிகப்படியான மது அருந்துதல், அதிக மன அழுத்தம் போன்றவை இன்றைய மக்கள் இரவில் போதுமான தூக்கம் வராமல் இருப்பதற்கான சில பொதுவான காரணங்களாகும்.

இறுதி குறிப்பு

இறுதி குறிப்பு

பலர், பெரும்பாலும் வேலையில் ஈடுபடுபவர்கள், தூக்கம் நேரத்தை வீணடிப்பதாகக் கருதுகிறார்கள் மற்றும் குறைந்த தூக்கத்தில் கூட தங்கள் உடல் இயங்க முடியும் என்று நினைக்கிறார்கள். இருப்பினும், தூக்கம் ஒரு முக்கியமான உயிரியல் செயல்பாடு என்பதை புரிந்து கொள்ள வேண்டும். ஒவ்வொருவரின் வயதை பொறுத்து அவர்களின் தூக்க நேரம் வரையறுக்கப்படுகிறது. ஒரு வயது வந்த மனிதனுக்கு தினமும் குறைந்தது 8 மணிநேர தூக்கம் அவசியம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Frequent napping can pose risk to health in tamil

Here we are talking about the Study links frequent napping to increased risk of high blood pressure and stroke in tamil.
Story first published: Wednesday, July 27, 2022, 15:07 [IST]
Desktop Bottom Promotion