Latest Updates
-
உலகமே 2026-ல் இருக்கும்போது இந்த நாடு மட்டும் 2018-ல்தான் இருக்காம் - எந்த நாடு? ஏன் தெரியுமா? -
ராகு-சந்திர சேர்க்கை: இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்! -
அரிசி உப்புமா - 15 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
செப்டம்பர் 23, 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களின் குடும்பத்தில் பல பிரச்சினைகள் வரப்போகுதாம் -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 01 வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! உங்க ராசி இதுல இருக்கா? -
சூரியனின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
2 கேரட்டும், தயிரும் இருந்தா இந்த ஆந்திரா ஸ்டைல் கேரட் பச்சடியை செஞ்சு பாருங்க - வேற லெவல் சைடிஷா இருக்கும் -
3 கேரட் இருந்தா.. இப்படி கீ ரோஸ்ட் ட்ரை பண்ணுங்க.. சப்பாத்திக்கு அல்டிமேட்டா இருக்கும்.. -
இந்தியாவின் முதல் போட்டோகிராபர் யார்? அவர் எந்த ராஜாவிடம் வேலை செய்தார் தெரியுமா? -
வீட்டில் கொசுக்கள் வரக்கூடாதா? அவற்றை விரட்ட இந்த செடிகளை வீட்டுல வாங்கி வையுங்க..
எக்காரணம் கொண்டும் தயிருடன் இந்த பொருட்களை சேர்த்து சாப்பிட்ராதீங்க.. இல்லன்னா கஷ்டப்படுவீங்க..
பலருக்கு தயிரை ஒருசில உணவுப் பொருட்களுடன் சேர்த்து சாப்பிடக்கூடாது என்பது தெரியாது. தயிரை தவறான உணவுகளுடன் சேர்த்து உட்கொள்வது ஆபத்தானது மற்றும் சருமத்தை மோசமாக பாதிக்கும்.
இந்தியர்கள் விரும்பி சாப்பிடும் ஓர் உணவுப் பொருள் தான் தயிர். இந்த தயிர் பாலை நொதிக்க வைப்பதன் மூலம் தயாரிக்கப்படுகிறது. பலர் தயிரை வெறுமனே சாப்பிடுவார்கள். நல்ல க்ரீமியான, சுவையான தயிர் பல ஆரோக்கிய நன்மைகளை உள்ளடக்கிய உலகிலேயே ஒரு ஆரோக்கியமான உணவாக கருதப்படுகிறது.

தயிரில் பல ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. இதில் பாஸ்பரஸ் மற்றும் கால்சியம், வைட்டமின் பி2 வைட்டமின் பி12, மக்னீசியம் மற்றும் பொட்டாசியம் போன்றவை அதிகமாக உள்ளன. தயிரில் உள்ள புரோபயோடிக்குகள் செரிமான மண்டலத்தின் சரியான செயல்பாட்டிற்கு உதவுகிறது.
ஆனால் பலருக்கு தயிரை ஒருசில உணவுப் பொருட்களுடன் சேர்த்து சாப்பிடக்கூடாது என்பது தெரியாது. தயிரை தவறான உணவுகளுடன் சேர்த்து உட்கொள்வது ஆபத்தானது மற்றும் சருமத்தை மோசமாக பாதிக்கும். மோசமான உணவுச் சேர்க்கைகள் உடல் ஆரோக்கியத்தையும் பாதிக்கும். இப்போது எந்த உணவுப் பொருட்களை எல்லாம் தயிருடன் சேர்த்து சாப்பிடக்கூடாது என்பதைக் காண்போம்.

தயிருடன் வெங்காயம்
மக்கள் பெரும்பாலும் பிரியாணி போன்றவற்றிற்கு சைடு டிஷ்ஷாக வெங்காயத்தை தயிரில் சேர்த்து கலந்து ரெய்தா தயாரித்து சாப்பிடுகிறார்கள். வெங்காயம் உடலில் வெப்பத்தை உற்பத்தி செய்கிறது மற்றும் தயிர் குளிர்ச்சியாக இருப்பதால், இந்த பழக்கத்தை உடனே நிறுத்த வேண்டும். ஏனெனில் இவை சில நேரங்களில் சிலருகிகு சருமத்தில் தடிப்புகள், அரிக்கும் தோலழற்சி அல்லது எக்சிமா, சொரியாசிஸ் மற்றும் பிற சரும அழற்சிகளை ஏற்படுத்தும்.

தயிருடன் மீன்
மீன்களுடன் தயிரை சேர்த்து சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் இரண்டுமே புரோட்டீன் அதிகம் நிறைந்த உணவுப் பொருள். எப்போதுமே புரோட்டீன்கள் நிறைந்த இரண்டு பொருட்களையும் ஒன்றாக சாப்பிடக்கூடாது என்று நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். என்டிடிவி அறிக்கையின் படி, தாவர வகை புரோட்டீனுடன், விலங்கு வகை புரோட்டீனை உட்கொள்ளலாம். ஆனால் ஒருபோதும் ஒரே வகையைச் சேர்ந்த புரோட்டீன்களை ஒன்றாக சாப்பிடக்கூடாது. அவ்வாறு சாப்பிட்டால், அது அஜீரண கோளாறு மற்றும் வயிறு தொடர்பான பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.

தயிருடன் பால்
பால் மற்றும் தயிர் ஒரே குடும்பத்தில் இருந்து வந்தவை. அதாவது இரண்டுமே விலங்கு வகை புரோட்டீன்கள். எனவே இவை இரண்டையும் ஒன்றாக எடுக்கக்கூடாது. இல்லாவிட்டால், அது வயிற்றுப்போக்கு, அசிடிட்டி, வயிற்று உப்புசம் மற்றும் வாய்வுத் தொல்லையை ஏற்படுத்தும்.

தயிருடன் உளுத்தம் பருப்பு
டைம்ஸ் ஆப் இந்தியாவின் அறிக்கையின் படி, உளுத்தம் பருப்பை தயிருடன் சேர்த்து சாப்பிட்டால், அது செரிமான மண்டலத்தில் இடையூறை ஏற்படுத்தும். இதன் விளைவாக அஜீரண கோளாறு, வயிற்றுப்போக்கு மற்றும் வயிற்று உப்புசம் போன்றவை ஏற்படும்.

தயிருடன் வறுத்த உணவுகள்
எண்ணெயில் பொரித்த உணவுகளுடன் தயிரை எப்போதுமே சேர்த்து சாப்பிடக்கூடாது. அப்படி சாப்பிட்டால், அது செரிமான செயல்பாட்டை மெதுவாக நடைபெறச் செய்யும் மற்றும் நாள் முழுவதும் சோம்பேறித்தனமாக இருக்க வைக்கும். எனவே இம்மாதிரி சாப்பிடுவதை அறவே தவிர்க்க வேண்டும்.

தயிருடன் மாம்பழம்
வெங்காயத்தைப் போலவே மாம்பழத்தையும் தயிருடன் சேர்த்து சாப்பிட்டால், அது உடலில் வெப்பம் மற்றும் குளிர்ச்சி இரண்டையும் ஒரே வேளையில் உற்பத்தி செய்து சரும பிரச்சனைகள் ஏற்பட வழிவகுப்பதோடு, உடலில் நச்சுக்களை உற்பத்தி செய்யும்.
இது தவிர, தயிரை எப்போதும் இரவு நேரத்தில் சாப்பிடக்கூடாது என்று கூறப்படுகிறது. ஏனெனில் தயிரில் உள்ள புரோட்டீன் மற்றும் ஆற்றல், உடலில் சளியின் அளவை அதிகரிக்கும்.
தயிருடன் வெங்காயத்தை சேர்த்து சாப்பிடுவது நல்லதல்ல. ஏனெனில் தயிர் குளிர்ச்சி பண்புகளைக் கொண்டது, வெங்காயம் உடலில் வெப்பத்தை உற்பத்தி செய்யும். இவ்விரண்டையும் ஒன்றாக உட்கொண்டால், அது சருமத்தில் அரிப்பு, சொரியாசிஸ் போன்ற சரும பிரச்சனைகளை உண்டாக்கும்.
தயிருடன் வாழைப்பழம், ஸ்ட்ராபெர்ரி, மாம்பழம், சப்போட்டா மற்றும் பிற பழங்களை சேர்த்து சாப்பிடலாம். அதுவும் இந்த பழங்களுடன் தயிரை சேர்த்து, சுவைக்கேற்ப சர்க்கரை சேர்த்து அரைத்து ஸ்மூத்தியாக தயாரித்து சாப்பிடலாம்.
தயிரை மீனுடன் சேர்த்து உண்பதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் இவை இரண்டுமே புரோட்டின் நிறைந்தவை. மேலும் விலங்கு புரோட்டீனுடன், தாவர புரோட்டீனை உட்கொள்ளும் போது, அது ஜீரணிக்க கடினமாக இருக்கும். இதன் விளைவாக செரிமான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
உடல் பருமன், இரத்த கோளாறுகள், அழற்சி பிரச்சனைகளைக் கொண்டவர்கள் தயிர் சாப்பிடுவதைத் தவிர்ப்பது நல்லது. தயிரை இரவு நேரத்தில் சாப்பிடக்கூடாது. ஆயுர்வேதத்தின் படி தயிரை தினமும் உட்கொள்ளக்கூடாது.



Click it and Unblock the Notifications
