Latest Updates
-
தலைசுற்ற வைக்கும் இந்தியாவிலுள்ள வினோதமான திருமண சடங்குகள் - இப்படிலாம் கல்யாணம் பண்ணுனா அவ்வளவுதான் -
1 வருடம் கழித்து சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பணத்தையும், புகழையும் கொண்டு வரப்போகுது! -
சத்தான ரவா கீரை அடை - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணி பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 13 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு கவலைகள் துரத்தும் நாளாக இருக்குமாம் -
சுக்கிர பெயர்ச்சியால் உருவாகும் மாளவ்ய ராஜயோகம்: செப்டம்பரில் இந்த 4 ராசிக்கு பண மழை கொட்டும்! -
சிம்ம ராசியில் உருவாகும் புதாதித்ய யோகம் இந்த 3 ராசிக்காரர்களின் கஷ்டங்களை தீர்க்கப்போகுதாம் - உங்க ராசி என்ன? -
கர்நாடகா தக்காளி தம்பிலி ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
இந்த 4 ராசி பெண்கள் எங்கு சென்றாலும் மகாராணியாக ஆட்சி செய்வார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஹோட்டல் ஸ்டைல் மக்கானா கிரேவி - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி செஞ்சு பாருங்க.. -
தலைமுடி அடர்த்தியா வளரணுமா? அப்ப கறிவேப்பிலையை இந்த எண்ணெய்களுடன் சேர்த்து யூஸ் பண்ணுங்க..
2DG : கொரோனாவுக்கான புதிய பவுடர் வடிவ தடுப்பு மருந்து.. எப்போது கிடைக்கும்? எப்படி சாப்பிடுவது? விலை என்ன?
ஆன்டி-கோவிட் மருந்தான 2-டியோக்ஸி-டி-குளுக்கோஸ் (2-டிஜி), பவுடர் வடிவில் ஒரு சிறிய பாக்கெட்டில் அடைக்கப்பட்டு விற்கப்படுகிறது. இந்த பவுடரை நீரில் கலந்து வாய்வழியாக உட்கொள்ள வேண்டும்.
என்ன தான் கொரோனா தடுப்பூசி மக்களிடையே போடப்பட்டு வந்தாலும், கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே தான் இருக்கிறது. இப்படி கொரோனா வழக்குகள் அதிகரித்து வருவது வேதனை அளிக்கும் விதமாக உள்ளது. இதனிடையே கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களுக்கு மருத்துவமனைகளில் போதுமான படுக்கைகள் கிடைக்காமலும், ஆக்சிஜன் குறைபாட்டினாலும் பலர் உயிரை இழக்கின்றனர்.

இதைத் தடுக்கும் பொருட்டு, ஹைதராபாத்தின் டாக்டர் ரெட்டியின் மருந்து நிறுவனத்துடன் இணைந்து, டிஆர்டிஓ அமைப்பின் ஆய்வகமான இன்ஸ்டிடியூட் ஆப் நியூக்ளியர் மெடிசின் அண்ட் அலையட் சயின்சஸ் (ஐ.என்.எம்.ஏ.எஸ்) உருவாக்கிய கோவிட் தடுப்பு மருந்தான 2-டியோக்ஸி-டி-குளுக்கோஸுக்கு (2-டிஜி) இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஜெனரல் (டி.சி.ஜி.ஐ) அவசரகால பயன்பாட்டுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.

2-டிஜி பவுடர் எம்மாதிரியான நன்மையை செய்ய வல்லது?
ஆன்டி-கோவிட் மருந்தான 2-டிஜி ஒரு பவுடர் வடிவத்தில் ஒரு சிறிய பாக்கெட்டில் அடைக்கப்பட்டு விற்கப்படும். இந்த பவுடர் நீரில் கலந்து வாய்வழியாக எடுக்கக்கூடியவாறு இருக்கும். இது உடலில் கொரோனா வைரஸ் மூலம் பாதிக்கப்பட்ட செல்களைக் கண்டறிந்து ஒருங்கிணைத்து, வேறு செல்கள் பாதிக்கப்படாமல் தடுத்து கொரோனா வைரஸ் வளர்ச்சியைத் தடுக்கிறது. ஆகவே இந்த மருந்து ஆக்சிஜன் சிலிண்டரை சார்ந்திருப்பதைக் குறைக்கவும், மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளை விரைவில் குணமடையவும் உதவும் என்று இந்திய அரசாங்கம் எதிர்பார்க்கிறது.

2-டிஜி பவுடர் எப்படி வேலை செய்கிறது?
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு 2-டிஜி பவுடரைக் கொண்டு சிகிச்சை அளித்ததில், அதிக மக்கள் RT-PCR சோதனையின் முடிவில் நெகட்டிவ் பெற்றிருப்பது தெரிய வந்தது. மேலும் இந்த மருந்து வைரஸின் ஆற்றல் உற்பத்தி மற்றும் வளர்சிதை மாற்ற எதிர்வினைகளை நிறுத்தி, அதைப் வளரவிடாமல் தடுக்கிறது.

2-டிஜி பவுடரை எவ்வாறு உட்கொள்வது?
ஆன்டி-கோவிட் மருந்தான 2-டியோக்ஸி-டி-குளுக்கோஸ் (2-டிஜி), பவுடர் வடிவில் ஒரு சிறிய பாக்கெட்டில் அடைக்கப்பட்டு விற்கப்படுகிறது. இந்த பவுடரை நீரில் கலந்து வாய்வழியாக உட்கொள்ள வேண்டும்.

2-டிஜி மருந்து எவ்வளவு பயனுள்ளதாக இருக்கும்?
கொரோனா இரண்டாம் அலையில் ஏராளமான நோயாளிகள் கடுமையான ஆக்சிஜன் குறைபாட்டினால் சிரமப்பட்டு, ஆக்சிஜன் சிலிண்டரை சார்ந்து இருக்கின்றனர். அதோடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டிய கட்டாயத்திலும் உள்ளனர். ஆனால் இந்த 2-டிஜி பவுடர் உடலினுள் சென்று கொரோனாவால் பாதிக்கப்பட்ட செல்களை அடையாளம் கண்டுபிடித்து ஒருங்கிணைத்து, புதிதாக வேறு எந்த செல்களும் பாதிக்கப்படாமல் தடுத்து, வைரஸ் வளர்ச்சியையும் தடுக்கும். அதோடு இது கோவிட்-19 நோயாளிகள் மருத்துவமனையில் தங்க வேண்டிய அவசியத்தையும் குறைக்கும்.

விலை எவ்வளவு?
அறிக்கையின் படி, 2-டிஜி பவுடரின் விலை நிர்ணயம் இன்னும் அறிவிக்கப்படவில்லை. ஆனால் ஒரு சிறிய பாக்கெட்டின் விலை இந்திய மதிப்பின் படி ரூ. 500-600 வரை இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே டாக்டர் ரெட்டியின் மருந்து நிறுவனம் மற்றும் டிஆர்டிஓவின் ஆய்வகமும் ஏற்கனவே மருத்துவமனைக்கு ஒரு குறிப்பிட்ட அளவு மருந்துகளைத் தயாரிக்கத் தொடங்கியுள்ளது. அதில் முதற்கட்டமாக பத்தாயிரம் மருந்துகள் தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன.



Click it and Unblock the Notifications