கல்லீரலின் ஆரோக்கியம் கெட்டுப் போக முக்கிய காரணம் எது தெரியுமா?

கொழுப்பு வளர்சிதை மாற்றத்தில் மிக முக்கிய பங்கு வகிப்பது நம் கல்லீரலில் வாழும் மைட்டோகாண்ட்ரியா தான். இது ஒரு ஆற்றலின் இருப்பிடம் அல்லது சக்தி மையம் என்றே கூறலாம்.

எல்லாரும் கொழுப்பை கரைக்க வேண்டும், தொப்பையை குறைக்க வேண்டும் என்று நினைத்தாலே டயட் முறைகளைத் தான் பின்பற்றுகின்றனர். ஆற்றலை அதிகரிப்பது, கார்போஹைட்ரேட் உணவை தவிர்ப்பது, கலோரி குறைந்த உணவுகள் என்று ஏகப்பட்ட டயட் முறைகள் இருக்கின்றன. ஆனால் இவையெல்லாம் உண்மையில் நமக்கு நன்மை அளிக்கிறதா? அல்லது தீமை அளிக்கிறதா? என்பதை நாம் தெரிந்து கொள்வதில்லை.

Does High-Fructose Diet Damage Liver Mitochondria?

நாம் உண்ணும் உணவில் உள்ள சத்துக்கள் குளுக்கோஸ் ஆக மாற்றம் செய்யப்பட்டு உடலுக்கு ஆற்றலாக மாற்றப்படுகிறது. ஆனால் நாம் எல்லா நேரமும் இந்த ஆற்றல் முழுவதையும் பயன்படுத்துவதில்லை. இந்த மீதமுள்ள குளுக்கோஸை கொழுப்பாக மாற்றி உடலில் சேமித்து வைக்கப்பட்டு, தேவைப்படும் போது இந்த கொழுப்பு எரிக்கப்பட்டு மீண்டும் ஆற்றலாக மாற்றப்படுகிறது. இந்த கொழுப்பு வளர்சிதை மாற்றத்தில் மிக முக்கிய பங்கு வகிப்பது நம் கல்லீரலில் வாழும் மைட்டோகாண்ட்ரியா தான். இது ஒரு ஆற்றலின் இருப்பிடம் அல்லது சக்தி மையம் என்றே கூறலாம்.

இந்த செயல்கள் ஒழுங்காக நடந்தால் மட்டுமே நம்மால் ஆரோக்கியமாக வாழ முடியும். ஒருவேளை உங்கள் கல்லீரல் கொழுப்பை எரிப்பதை நிறுத்தினால் என்னவாகும்?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கல்லீரல் செயல்பாடு தடைபடுதல்

கல்லீரல் செயல்பாடு தடைபடுதல்

நமது கல்லீரல் சரியாக கொழுப்பை கரைக்காவிட்டால் உடல் பருத்து குண்டாக ஆரம்பித்து விடுவோம். உடல் பருமனுக்கு முக்கியமான காரணம் உங்கள் கல்லீரல் கொழுப்புச் செயல்பாட்டில் சரிவர இயங்காமல் இருப்பது தான் என்கிறார்கள் மருத்துவர்கள்.

ப்ருக்டோஸ் உணவு

ப்ருக்டோஸ் உணவு

நீங்கள் அதிக ப்ருக்டோஸ் உணவை எடுத்துக் கொண்டால், உங்கள் கல்லீரலின் கொழுப்பு எரியும் சக்தி பலவீனமடைந்து கல்லீரல் மெதுவாக சேதமடையக்கூடும் என்று சமீபத்திய ஆராய்ச்சி கூறுகிறது. இந்த ஆராய்ச்சி குறித்த தகவல்கள் 'செல் வளர்சிதை மாற்றம்' என்ற பத்திரிகையில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஆராய்ச்சியின் படி, குளுக்கோஸ் உங்கள் கல்லீரலுக்கு நல்லது என்றாலும், ப்ருக்டோஸ் உங்கள் கல்லீரலுக்கு மிகவும் மோசமானது, மற்றும் இரண்டும் சர்க்கரையின் வெவ்வேறு வடிவங்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் உயர் ப்ருக்டோஸ் டயட் என்றால் கல்லீரல் பாதிப்படைய வாய்ப்புள்ளது.

உயர் ப்ருக்டோஸ் டயட் என்றால் என்ன?

உயர் ப்ருக்டோஸ் டயட் என்றால் என்ன?

ப்ருக்டோஸ் என்பது ஒரு வகை சர்க்கரை. இது பழங்கள், காய்கறிகள் மற்றும் இயற்கை இனிப்பு வகைகளில் காணப்படுகிறது. ஆனால் இப்படி இயற்கையாக கிடைக்கும் ப்ருக்டோஸ் மட்டுமே ஆரோக்கியத்திற்கு நல்லது. ஆனால் நவீன காலங்களில் செயற்கை ப்ருக்டோஸ் இனிப்புகள் ஏராளமான உணவுப் பொருட்களில் சேர்க்கப்படுகின்றன. இந்த செயற்கை ப்ருக்டோஸ் ஆரோக்கியத்திற்கும் கல்லீரலுக்கும் தீங்கு விளைவிக்கக் கூடியது. நமது கல்லீரலை ஆரோக்கியமாக வைத்திருக்கவும் உடல் பருமனை குறைக்கவும் நினைத்தால் இந்த உயர் ப்ருக்டோஸ் உணவுகளை தவிர்ப்பது நல்லது.

உயர் ப்ருக்டோஸ் உணவுகளின் பட்டியல்:

உயர் ப்ருக்டோஸ் உணவுகளின் பட்டியல்:

* சோடா பானங்கள் மற்றும் குளிர் பானங்கள்

* பாக்கெட்டில் அடைக்கப்பட்ட ஜூஸ்கள்

* டோஃபி, கேன்டி, மிட்டாய்கள், ஜெல்லி

* இனிப்பு யோகார்ட்

* உறைந்த ஜங்க் உணவுகள்

* பழ ஜாம், தக்காளி சாஸ்

* ஐஸ்கிரீம்

* ஸ்போர்ட்ஸ் பானம்

* காபி க்ரீம்

* சாலட் டிரஸ்ஸிங்

* ஸ்நாக்ஸ்

மேற்கண்ட உணவுகளை தவிர்ப்பது உங்கள் ஆரோக்கியத்திற்கு நல்லது.

மருத்துவர்களின் கருத்து

மருத்துவர்களின் கருத்து

ஹார்வர்ட் மருத்துவப் பள்ளி பேராசிரியரும் ஆராய்ச்சியாளருமான சி. ரொனால்ட் கான் இது குறித்து கூறும் போது "அதிக கலோரிகள் உணவை அதிகரிப்பதைப் போலவே, ப்ருக்டோஸ் உணவுகள் கல்லீரலைச் சுற்றி கொழுப்பை அதிகரிக்கிறது. இந்த ஆராய்ச்சியிலிருந்து நாம் காணும் மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், மிக உயர்ந்த ப்ருக்டோஸ் கொண்ட உணவுகளை நாம் உண்ணக்கூடாது. குளுக்கோஸ் கொண்ட உணவுகள் மட்டுமே கல்லீரலுக்கு நன்மை பயக்கும். ஏனெனில் அவை கொழுப்பு எரியும் செயல்முறையை துரிதப்படுத்துகின்றன. எனவே ப்ருக்டோஸுக்கு பதிலாக, குளுக்கோஸ் நிறைந்த உணவுகளை நீங்கள் சாப்பிட வேண்டும். வேண்டுமெனில் இயற்கையாகவே கிடைக்கும் ப்ருக்டோஸ் உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள்" என்று மக்களுக்கு வலியுறுத்தியுள்ளார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Desktop Bottom Promotion