For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பால் மற்றும் சர்க்கரையை சேர்த்து சாப்பிட்டா என்ன நடக்கும் தெரியுமா? அதிர்ச்சியாகாம படிங்க...!

இதய ஆரோக்கியத்தை அதிகரிக்க நீங்கள் பால் குடிப்பவராக இருந்தால், சர்க்கரை அல்லது ஏதேனும் இனிப்புப் பொருட்களைச் சேர்ப்பதைத் தவிர்க்கவும். மாறாக ஓட்ஸ், பாதாம் அல்லது கொழுப்பு நீக்கப்பட்ட/குறைந்த கொழுப்புள்ள பால் போன்ற சைவ பா

|

இந்திய சமையல் கலாச்சாரத்தில் பால் ஒரு முக்கிய அங்கமாக இருந்து வருகிறது. பெரும்பாலான இந்தியர்களுக்கு, காலை உணவு அல்லது உறங்கும் நேரத்தில் ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான பாலில் சிறிது சர்க்கரை சேர்த்து குடிப்பது தினசரி பழக்கமாக இருந்து வருகிறது. ஏனென்றால், பால் குடிப்பதால் கிடைக்கும் எண்ணற்ற நன்மைகளைப் பற்றி குழந்தை பருவத்திலிருந்தே நமக்குக் கற்பிக்கப்பட்டுள்ளது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் தினமும் பால் குடித்து வருகிறார்கள். ஆனால், பல ஆண்டுகளாக கதை மாறிவிட்டது என்பதை அறிந்தால் நீங்கள் அதிர்ச்சியடைவீர்கள்.

​Do you know what happens when you mix sugar and milk in tamil

ஆமாம், சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரையுடன் பால் குடிப்பது உங்கள் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்று நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள். சர்க்கரை மற்றும் பாலைக் கலந்து குடிப்பதைத் தவிர்க்க வல்லுநர்கள் பரிந்துரைக்கும் சில காரணங்கள் பற்றி இக்கட்டுரையில் காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பாலில் சர்க்கரை சேர்த்தால் என்ன நடக்கும்?

பாலில் சர்க்கரை சேர்த்தால் என்ன நடக்கும்?

பாலில் சர்க்கரை சேர்த்து அருந்துவது, கலோரிகளை மட்டுமே உங்களுக்கு வழங்குகிறது. ஊட்டச்சத்துக்கள் இல்லாத சேர்க்கப்பட்ட சர்க்கரையால் உங்களுக்கு பாதிப்புதான் ஏற்படும். சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரைகள் எடை அதிகரிப்பு மற்றும் வளர்சிதை மாற்ற நோய்க்குறிக்கு பங்களிக்கின்றன. மேலும், இது இதய நோய், பக்கவாதம் மற்றும் வகை 2 நீரிழிவு போன்ற பல்வேறு சுகாதார நிலைமைகளின் ஒரு நபரின் ஆபத்தை அதிகரிக்கிறது.

செரிமானத்தை பாதிக்கலாம்

செரிமானத்தை பாதிக்கலாம்

பால் மற்றும் வெள்ளை சர்க்கரையின் கலவையானது செரிமானத்தை பாதிக்கும். மேலும் அமிலத்தன்மை, மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு மற்றும் பைல்ஸ் போன்ற நோய்களைத் தூண்டும். குறிப்பாக, லாக்டோஸ் சகிப்புத்தன்மை இல்லாத நிலையில், கலவையில் சர்க்கரையைச் சேர்ப்பது செரிமானத்தை மிகவும் கடினமாக்குகிறது மற்றும் இது ஒட்டுமொத்த செரிமான ஆரோக்கியத்தையும் பாதிக்கிறது. மேலும் படுக்கை நேரத்தில் சர்க்கரை கலந்த பால் குடிப்பதால், செரிமானம் கடினமாகி, அஜீரணம் மற்றும் மலச்சிக்கல் ஏற்படலாம்.

எடை அதிகரிப்பு

எடை அதிகரிப்பு

உணவைத் தவிர்த்துவிட்டு, வெள்ளைச் சர்க்கரையுடன் ஒரு டம்ளர் பாலைக் குடிப்பதன் மூலம், உடல் எடையைக் குறைக்க முயற்சிப்பவராக நீங்கள் இருந்தால், உங்கள் உடல் எடையைக் குறைக்கும் முயற்சிகளை நீங்களே அழித்துவிடுகிறீர்கள். இந்த கலவையில் அதிக கலோரி உள்ளடக்கம் இருப்பதால், இது வளர்சிதை மாற்றத்தை பாதிக்கிறது மற்றும் மெதுவாக செயல்படுகிறது. இது எடை அதிகரிப்பு மற்றும் உடலில் கொழுப்பு படிவதற்கு வழிவகுக்கிறது. எனவே, நீங்கள் உடல் எடையை குறைக்க முயற்சிக்கிறீர்கள் என்றால், குறைந்த கொழுப்புள்ள பால் அல்லது சைவ பால் தேர்வு செய்து, சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரையை சேர்க்காமல் குடிக்கவும்.

கொழுப்பு கல்லீரல்

கொழுப்பு கல்லீரல்

வெதுவெதுப்பான பாலுடன் சர்க்கரையை கலந்து குடிப்பது பானத்தின் சுவையை அதிகரிக்க சிறந்த வழியாகும். ஆனால் 1 டேபிள் ஸ்பூன் சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரையில் சுமார் 60 கலோரிகள் உள்ளது மற்றும் அதை 1 கிளாஸ் ஃபுல் கிரீம் பால் கலோரிகளுடன் இணைத்தால் நீங்கள் ஆச்சரியப்படும் அளவிற்கு 149 கலோரிகள் இருக்கும். இவை உங்கள் ஆரோக்கியத்திற்கு பேரழிவை ஏற்படுத்தும். இரண்டையும் கலந்து உருவாக்கப்படும் கலோரிகள் மற்றும் கொழுப்பு உள்ளடக்கம் கல்லீரலின் மேற்பரப்பில் கொழுப்பு மூலக்கூறுகள் படிவதற்கு வழிவகுக்கும். இது கொழுப்பு கல்லீரல் நிலைக்கு வழிவகுக்கிறது. இது நீண்ட காலத்திற்கு கல்லீரல் நோய்களாக மாறும்.

இதயத்திற்கு நல்லதல்ல

இதயத்திற்கு நல்லதல்ல

பால் மிதமான நுகர்வு உடலில் உள்ள எல்டிஎல் கொழுப்பைக் குறைக்கவும் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவும் என்று பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆனால், பாலில் வெள்ளைச் சர்க்கரையைச் சேர்ப்பது இதற்கு நேர்மாறானது. இந்த கலவையில் அதிக கலோரி மற்றும் கொழுப்பு உள்ளடக்கம் இருப்பதால், இது தமனிகளில் கொழுப்பு படிவதற்கு வழிவகுக்கிறது மற்றும் அவற்றை அடைக்கிறது. இருப்பினும், தமனிகளில் அடைப்பு ஏற்படுவதற்கு படுக்கை நேரத்தில் பால் குடிப்பதால் மட்டுமல்ல, உட்கார்ந்த வாழ்க்கை முறை மற்றும் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையும் காரணமாகும்.

இதய ஆரோக்கியத்திற்கு என்ன செய்ய வேண்டும்?

இதய ஆரோக்கியத்திற்கு என்ன செய்ய வேண்டும்?

இதய ஆரோக்கியத்தை அதிகரிக்க நீங்கள் பால் குடிப்பவராக இருந்தால், சர்க்கரை அல்லது ஏதேனும் இனிப்புப் பொருட்களைச் சேர்ப்பதைத் தவிர்க்கவும். மாறாக ஓட்ஸ், பாதாம் அல்லது கொழுப்பு நீக்கப்பட்ட/குறைந்த கொழுப்புள்ள பால் போன்ற சைவ பால்களைத் தேர்ந்தெடுக்கவும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

​Do you know what happens when you mix sugar and milk in tamil

Do you know what happens when you mix sugar and milk in tamil?
Story first published: Tuesday, August 23, 2022, 12:17 [IST]
Desktop Bottom Promotion