Latest Updates
-
துவரம் பருப்பு தோசையும், வேர்க்கடலை சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
இன்றைய ராசிபலன் 15 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு நஷ்டமும், தோல்விகளும் நிறைந்த நாளாக இருக்குமாம் -
Aani Matha Rasipalan 2026: ஆனி மாதம் எந்த ராசிக்கு சூப்பராவும், யாருக்கு மோசமாவும் இருக்கும் தெரியுமா? -
உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. உங்களோட சூப்பர் பவர் என்னன்னு சொல்றோம்.. -
பால் இல்லாமல் ஒருவாட்டி இப்படி டீ போடுங்க.. அப்புறம் பாருங்க.. அடிக்கடி இந்த டீ போடுவீங்க.. -
இந்த 5 ராசிக்காரர்கள் 30 வயதிற்குள்ளேயே வாழ்வில் நல்ல உயரத்தை அடைவார்களாம்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
சிக்கனையும், பூண்டையும் வெச்சு.. ஒருடைம் இந்த வறுவல் செய்யுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்.. -
மாதுளம் பழ டீ குடிப்பதால் கிடைக்கும் நன்மைகளை பட்டியலிட்ட டாக்டர்.பிரகாஷ்! -
ஜூன் 18-ல் நடக்கும் குரு நட்சத்திர பெயர்ச்சியால் இந்த 4 ராசிக்கு பணம் மற்றும் தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படும். -
அடுத்தமுறை சிக்கன் வாங்குனா.. இப்படி மசாலா அரைச்சு குழம்பு வையுங்க.. இட்லிக்கு டக்கரா இருக்கும்..
உடல் எடை குறைப்பிற்கு வாழைக்காயை எப்படி சாப்பிடலாம் தெரியுமா?
வாழைப்பழம் பிடிக்கும் அளவிற்கு வாழைக்காய் நிறைய பேருக்கு பிடிப்பதில்லை.ஆனால், வாழைக்காயில் உள்ள சத்துக்கள் குறித்து தெரிந்தால் யாரும் அதை வேண்டாம் என்று ஒதுக்க மாட்டார்கள்.
வாழைப்பழம் என்பது பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் பழங்களில் ஒன்று. ஆனால், வாழைப்பழம் பிடிக்கும் அளவிற்கு வாழைக்காய் நிறைய பேருக்கு பிடிப்பதில்லை. ஏனென்றால், வாழைப்பழத்தை போல் அது இனிப்பாக இருக்காது. ஆனால், வாழைக்காயில் உள்ள சத்துக்கள் குறித்து தெரிந்தால் யாரும் அதை வேண்டாம் என்று ஒதுக்க மாட்டார்கள். குழந்தைகளுக்கு முதலில் கொடுக்கப்படும் பழமும் வாழைப்பழமாக தான் இருக்கும். உடல் எடை குறைப்பு தொடங்கி, பல்வேறு வகையில் உடலிற்கு நன்மைகளை வாரி வழங்கிட கூடியது வாழைப்பழம்.

மஞ்சள் வாழைப்பழம், பழுத்த வாழைப்பழத்தை போலவே, வாழைக்காய் மற்றும் பச்சை வாழைப்பழத்தில் சத்துக்கள் அதிகம் உள்ளது. இப்போது வாழைக்காயில் உள்ள சத்துக்கள் மற்றும் பயன்பாடுகள் குறித்து தெரிந்து கொள்வோம்...

பச்சை வாழைப்பழம் அல்லது வாழைக்காயில் உள்ள நன்மைகள்
இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் வாழைக்காய் பல்வேறு வகைகளில் உட்கொள்கின்றனர். இதன் சுவை அவ்வளவு நன்றாக இல்லாவிட்டாலும், அதை பல வகைகளில குழம்பு, பொரியல், சிப்ஸ் என சாப்பிடுகின்றனர். வாழைக்காயில், பழுத்த வாழைப்பழத்தில் உள்ளது போலவே அதிகப்படியன ஊட்டச்சத்துகள் உள்ளன. ஆனால், வாழைப்பழத்தை விட வாழைக்காயில் தான் அதிகப்படியான மாவுச்சத்தும், குறைந்த அளவில் சர்க்கரையும் உள்ளது. அதனால் தான், நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு, இரத்த அழுத்தம் பிரச்சனை உள்ளவர்களுக்கும் வாழைக்காய் நல்லது. இப்போது வாழைக்காயின் பிற நன்மைகள் குறித்து தெரிந்து கொள்வோம்...

எடை குறைப்பு
உடல் எடை குறைப்பிற்கு வாழைப்பழம் நல்லதா? ஆம், அதுவும் பச்சை வாழைப்பழத்தில் உள்ள மாவுச்சத்து உடல் எடையை குறைப்பிற்கு உதவக்கூடியது. உங்களுக்கு உடல் எடை குறைக்க வேண்டுமென்றால் வாரத்திற்கு 2 முதல் 3 முறையாவது வாழைக்காயை சாப்பிட வேண்டும். அப்படி சாப்பிடுவதால் உடலுக்கு தேவையான கால்சியம் கிடைத்திடும். அதுமட்டுமல்லாது, வாழைக்காயை சாப்பிடுவதால் எலும்புகள் வலுவடைவதோடு, கொழுப்பை வேகமாக குறைத்திட உதவும்.

வயிற்றின் ஆரோக்கியத்திற்கு..
வாழைப்பழத்தில் எத்தனையோ வகைகள் உள்ளன. ஆனால், அவற்றில் வாழைக்காய் தான் தான் வயிற்றிற்கு மிகவும் நல்லது. இதில் நார்ச்சத்து நிறைந்திருப்பதால் மலச்சிக்கல் பிரச்சனைக்கும், ஜீரண கோளாறுகளுக்கும் தீர்வு அளித்திடக்கூடியது. வாழைக்காயில் குறுகிய சங்கிலி கொழுப்பு அமிலம் உள்ளதால், அவை குடலிற்கு மிகவும் நல்லது செய்யக்கூடும். வயிறு சுத்தமில்லாமல் இருக்கும் நேரத்தில் வயிற்று வலி ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம். பச்சை வாழைப்பழம் சாப்பிடுவதன் மூலம் அவை சரியாகக்கூடும். வேண்டுமென்றால, ஏர் ஃப்ரை செய்யப்பட்ட வாழைக்காய் சிப்ஸ் சாப்பிடலாம். ஏர் ஃப்ரை செய்யப்பட்ட சிப்ஸில் எண்ணெயும் குறைவாக இருப்பதால் அவை ஆரோக்கியமான ஸ்நாக்ஸ் ஆகும். பசிக்கும் நேரத்தில் சிறிது சிப்ஸ் எடுத்துக் கொள்ளலாம். அதையும் அளவாக சாப்பிட வேண்டும் என்பதை மட்டும் நினைவில் கொள்ளுங்கள்.

வயிற்றுப்போக்கை தடுத்திடும்
சமீபத்திய ஆய்வு முடிவில், வாழைக்காயை சாப்பிடுவது வயிற்றுப்போக்கிற்கு உடனடி நிவாரணத்தை வழங்கிடும். உண்மையில், வாழைப்பழமானது செரிமானத்தை சுலபமாக்கிடும். மேலும், அதில் பொட்டாசியம் அதிகம் உள்ளது. அதனால், வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கிற்கு உடனடி தீர்வினை வழங்கிடும்.

நாள்பட்ட நோயை தடுத்திடும்
வாழைக்காயானது, நீரிழிவு நோய், உயர் இரத்த அழுத்தம், இதய கோளாறு ஆகியவற்றிற்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களையும் கொண்டுள்ளது. வாழைப்பழத்தில் உள்ள பொட்டாசியம் இரத்த அழுத்தத்தை குறைப்பதோடு, மனஅழுத்தத்தையும் குறைத்திடும். அது தவிர, வாழைப்பழத்தில் உள்ள பெக்டின் மலச்சிக்கலை போக்கி, உடலில் இன்சுலின் சுரப்பை சீராக்கி அனைத்து வித வயிற்று பிரச்சனையையும் சரி செய்திடும். மேலும், வைட்டமின் பி6, வைட்டமின் சி, காப்பர், மெக்னீசியம், மாங்கனீசு மற்றும் பொட்டாசியம் ஆகிய சத்துக்களும் வாழைக்காயில் உள்ளன.

முடிவு
சுருக்கமாக கூற வேண்டுமென்றால், நிச்சயமாக அனைவரும் பச்சை வாழைப்பழம், வாழைக்காயை சாப்பிடுவதை உடனே தொடங்கி ஆக வேண்டும். இந்த சிறிய காயில் இவ்வளவு நன்மைகள் உள்ளது என்றால் அதனை எதற்காக தவிர்க்க வேண்டும். அதிகப்பட்ச சத்துக்களை உள்ளடக்கிய வாழைக்காய் பல்வேறு ஆரோக்கிய பலன்களை வழங்கிடுகிறது. எனவே, அதனை ஏதாவது ஒரு வகையில் சமைத்து உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். அது வேகவைத்து மசித்த வாழைக்காய் முதல் வாழைக்காய் குழம்பு, சிப்ஸ் என எந்தவகையில் இருந்தாலும் சரி. உடலுக்கு ஆரோக்கியத்தை வழங்குவதை எப்படி சாப்பிட்டாலும் நன்மை தான் அளித்திடும்.



Click it and Unblock the Notifications