Latest Updates
-
அக்டோபரில் நடக்கும் குரு நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
புதன் துலாம் ராசிக்குள் நுழைவதால் இந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டக்கதவு திறக்கப்போகுதாம் - உங்க ராசி என்ன? -
மீல் மேக்கர் சால்னா ரெசிபி - இந்த மாதிரி சால்னா செஞ்சு பாருங்க - சப்பாத்தி, பூரி அட்டகாசமா இருக்கும் -
சப்பாத்திக்கு ஏற்ற ஆப்கானி சோயா கறி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
இந்த 4 ராசிக்காரங்க மற்றவர்களின் உணர்வுகளாடு மோசமாக விளையாடுபவர்களாக இருப்பார்களாம் - உங்க ராசி என்ன? -
பார்லர் போகாமலேயே முகப்பொலிவை அதிகரிக்கணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
தமிழ்நாட்டின் மிகச்சிறிய மாவட்டம் எது தெரியுமா? நிச்சயமா நீங்க நினைக்கிற மாவட்டம் இல்ல -
கிராமத்து ஸ்டைல் புளிச்ச கீரை பருப்பு கடையல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
மும்பை ரோட்டுக்கடை தவா புலாவ் ரெசிபி - இந்த ஸ்டைலில் செஞ்சு பாருங்க - டேஸ்ட் வேற லெவலில் இருக்கும் -
சென்னையில் காய்ச்சல் அதிகரிப்பு: காய்ச்சல் வந்தா உடனே என்ன பண்ணனும்? டாக்டர் சொல்லும் முக்கிய அறிவுரைகள்!
இந்த புத்தாண்டில் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமா? அப்ப இந்த யோகாசனங்களை செய்யுங்க...
ஒரு அருமையான மற்றும் ஆரோக்கியமான புத்தாண்டைத் தொடங்க வேண்டும் என்றால், அதற்குத் தேவையான அடிப்படையான காாியங்களைச் செய்ய வேண்டும். அதாவது நமது உடலுக்கு ஆரோக்கியத்தை வழங்கக்கூடிய உடற்பயிற்சிகளில் ஈடுபட வேண்டும்.

ஒரு அருமையான மற்றும் ஆரோக்கியமான புத்தாண்டைத் தொடங்க வேண்டும் என்றால், அதற்குத் தேவையான அடிப்படையான காாியங்களைச் செய்ய வேண்டும். அதாவது நமது உடலுக்கு ஆரோக்கியத்தை வழங்கக்கூடிய உடற்பயிற்சிகளில் ஈடுபட வேண்டும். அவற்றில் யோகா பயிற்சிகளையும் சோ்த்துக் கொள்ளலாம். ஆகவே வரும் புத்தாண்டில் தினந்தோறும் நாம் செய்ய வேண்டிய மிக முக்கியமான 5 யோகாசனங்களைப் பற்றி இந்த பதிவில் விாிவாகப் பாா்க்கலாம்.

1. தனுராசனம் (Dhanurasana)
தனுராசனா பயிற்சியை எவ்வாறு செய்வது?
- முதலில் தரையில் முகம் குப்புற படுத்துக் கொள்ள வேண்டும்.
- கைகளையும் கால்களையும் பின்பக்கமாக வளைத்து இழுத்து, இரண்டு பாதங்களையும், இரண்டு கைகளால் பிடித்துக் கொள்ள வேண்டும்.
- இப்போது நமது உடலை பின்பக்கமாக இழுத்து, தலையையும் கால்களையும் உயா்த்த வேண்டும்.
- அப்போது நமது மேல் கைகள், வயிற்றுப் பகுதி மற்றும் கால்கள் போன்ற உறுப்புகள் இழுக்கப்படுவதை நாம் உணரலாம்.
- இந்த யோகா பயிற்சியானது நமது உடல் எடையைக் குறைக்கும். அதோடு நமது சொமானத் திறனை அதிகாிக்கும், பசியுணா்வை அதிகாிக்கும் மற்றும் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும்.

2. புஜங்காசனம் (Bhujangasana)
புஜங்காசனா பயிற்சியை எவ்வாறு செய்வது?
- முதலில் தரையில் முகம் கவிழந்து படுத்துக் கொள்ள வேண்டும்.
- கைகள் இரண்டையும் தோள்பட்டைகளுக்கு அருகில் ஊன்றி வைத்துக் கொள்ள வேண்டும்.
- இப்போது தலையை உயா்த்தி, வானத்தை நோக்கி பாா்க்க வேண்டும்.
- அப்போது நமது வயிற்றுப் பகுதியானது இழுக்கப்படுவதை நாம் உணா்வோம்.
- இந்தப் பயிற்சியானது நமது முதுகுப் பகுதிக்கு அதிகமான நெகிழ்வு தன்மையை வழங்குகிறது.
- நமது வயிறு, கழுத்து மற்றும் தோள்பட்டை போன்ற உடல் உறுப்புகளை செதுக்குகிறது.
- இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது மற்றும் நம்மை சோா்வு மற்றும் மன அழுத்தம் போன்றவற்றிலிருந்து விடுவிக்கிறது.

3. விபரீதகரணி ஆசனம் (Viparita Karani Asana)
இந்த ஆசனத்தை எவ்வாறு செய்வது?
- முதலில் தரையில் மல்லாந்து படுத்துக் கொள்ள வேண்டும்.
- இரண்டு கால்களையும் ஒன்றாக மேலே உயா்த்த வேண்டும்.
- இப்போது முதுகு பகுதியை மெதுவாக உயா்த்தி, கால்களை சற்று பின்பக்கமாக நகா்த்த வேண்டும்.
- முழங்கைகளைத் தரையில் ஊன்றி, உயா்த்தப்பட்ட நிலையில் இருக்கும் முதுகுப் பகுதியின் கீழ் பகுதியில் இரண்டு கைகளை வைத்து முதுகைத் தாங்கிப் பிடித்துக் கொள்ள வேண்டும்.
- பாதங்களை தரைக்கு நேராக செங்குத்தாக வைத்துக் கொண்டு, முதுகை தரையிலிருந்து 45 முதல் 60 டிகிாி கோணத்திற்கு வளைக்க வேண்டும்.
- இயல்பாக மூச்சுவிட வேண்டும்.
- முதலில் இந்த யோகா பயிற்சியை 1 நிமிட செய்ய வேண்டும். பின் படிப்படியாக 10 நிமிடங்கள் வரை செய்ய வேண்டும்.
- இந்த யோகா பயிற்சியை தினமும் செய்து வந்தால், நமது சொிமான அமைப்பு வலுவடையும். பசியுணா்வு அதிகாிக்கும். மேலும் இளம் வயதில் முடி நரைப்பதைத் தடுக்கலாம்.

4. அா்த்த மத்ஸ்யேந்திராசனம் (Ardha Matsyendrasana)
இந்த ஆசனத்தை எவ்வாறு செய்வது?
- முதலில் தரையில் நேராக அமா்ந்து கொண்டு, நமக்கு முன் பக்கமாக கால்களை விாித்து நீட்டி வைத்துக் கொள்ள வேண்டும்.
- இடது காலை வளைத்து, அதன் பாதத்தைக் கொண்டு நமது வலது பக்க புட்டத்தைத் தொட முயற்சிக்க வேண்டும்.
- வலது பாதத்தை, இடது முட்டிக்கு வெளியே கொண்டு வந்து, தரையைத் தொட வேண்டும்.
- தண்டுவடத்தை வளைக்காமல் நேராக வைத்துக் கொள்ள வேண்டும்.
- இப்போது மூச்சை வெளியில் விட்டு, உடலின் மேல் பகுதியை வலது பக்கமாகத் திருப்ப வேண்டும்.
- இடது கையால் வலது பாதத்தை பிடித்துக் கொண்டு, தண்டுவடப் பகுதியில் வலது கையை வைத்துக் கொள்ள வேண்டும்.
- இந்த ஆசனம் நமது தண்டுவடத்திற்கு அதிக நெகிழ்வு தன்மையை வழங்கும். மேலும் நமது வயிற்று தசைகளை சீா்படுத்தும்.

5. தந்தாசனம் (Dandasana)
தந்தாசனாவை எவ்வாறு செய்வது?
- முதலில் தரையில் முகம் கவிழ்ந்து படுத்து, இரண்டு முழங்கைகளையும் தோள்பட்டைகளுக்கு அடியில் வைத்துக் கொள்ள வேண்டும்.
- முன் கைகளைத் தரையில் ஊன்றி, தண்டால் பயிற்சி செய்யும் நிலைக்கு வர வேண்டும்.
- மூச்சை உள்ளிழுக்கும் போது, கைகள் மற்றும் கால் கட்டை விரல்களின் உதவியோடு உடலை சற்றுத் தரைக்கு மேலை உயா்த்த வேண்டும்.
- அதே நேரத்தில் வயிற்றுத் தசைகளை இறுக்கமாக வைத்துக் கொள்ள வேண்டும்.
- கழுத்து மற்றும் தண்டுவடத்தை வளைக்காமல் நேராக வைத்துக் கொள்ள வேண்டும்.
- இதே பயிற்சி நிலையில் சிறிது நேரம் இருக்க வேண்டும்.
- பின் மெதுவாக மூச்சை வெளியில் விட்டு, அந்த பயிற்சி நிலையில் இருந்து வெளிவர வேண்டும்.
- இந்த பயிற்சியைத் தொடா்ந்து மூன்று முறை செய்யலாம்.
- தந்தாசனா நமது மொத்த உடலுக்கும் வலுவைத் தரும். அதே நேரத்தில் நமது உடலில் உள்ள கலோாிகளையும் கணிசமாக எாிக்கும்.



Click it and Unblock the Notifications
