For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நிமிடத்தில் நெஞ்சு சளியில் இருந்து நிவாரணம் அளிக்கும் அற்புத மருந்து!

சளி, மூக்கடைப்பு, இருமலில் இருந்து நிவாரணம் பெற பலரும் பயன்படுத்தும் ஓர் பொருள் தான் விக்ஸ் வேப்பரப். ஆனால் விக்ஸ் போன்ற ஒரு மருந்தை வீட்டிலேயே ஆரோக்கியமான பொருட்களைக் கொண்டு தயாரிக்கலாம்.

|

தற்போது பனிப் பொழிவு அதிகம் உள்ளதால், பலருக்கும் எளிதில் சளி, இருமல் போன்றவை பாடாய் படுத்துகிறது. ஒருவருக்கு சளி, இருமல் போன்ற பிரச்சனை எளிதில் தொற்றுகிறது என்றால், அவர்களது நோயெதிர்ப்பு மண்டலம் பலவீனமாக உள்ளது என்று அர்த்தம். சளி, மூக்கடைப்பு, இருமலில் இருந்து நிவாரணம் பெற பலரும் பயன்படுத்தும் ஓர் பொருள் தான் விக்ஸ் வேப்பரப். கடைகளில் விற்கப்படும் இந்த பொருள் ஆரோக்கியமற்றது என்பதால் மருத்துவர்கள் அதிகம் இதைப் பரிந்துரைப்பதில்லை.

DIY Decongestant To Ward Off Cold, Cough and Chest Congestion In Minutes!

ஆனால் மூக்கடைப்பு மற்றும் சளிக்கு நிவாரணம் அளிக்கும் விக்ஸ் போன்ற ஒரு மருந்தை வீட்டிலேயே ஆரோக்கியமான முறையில் மருத்துவ குணம் நிறைந்த பொருட்களைக் கொண்டு நாம் எளிதில் தயாரிக்கலாம். உங்களுக்கு அதை எப்படி தயாரிப்பது, எந்த பொருட்களைப் பயன்படுத்துவது என்று தெரிந்து கொள்ள வேண்டுமானால், இக்கட்டுரையைத் தொடர்ந்து படியுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஏன் விக்ஸைப் பயன்படுத்த பரிந்துரைப்பதில்லை?

ஏன் விக்ஸைப் பயன்படுத்த பரிந்துரைப்பதில்லை?

கடைகளில் விற்கப்படும் பொரும்பாலான வேப்பரப்புகளில் பெட்ரோலியம், கற்பூரம் மற்றும் சில சருமத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் கெமிக்கல்கள் நிறைந்துள்ளது. எனவே தான் இந்த பொருட்களைப் பயன்படுத்த பரிந்துரைப்பதில்லை. முக்கியமாக குழந்தைகளுக்கு இம்மாதிரியான பொருட்களை அறவே பயன்படுத்தக்கூடாது.

இப்போது இயற்கைப் பொருட்களைக் கொண்டு வீட்டிலேயே சளிக்கு நிவாரணம் அளிக்கும் வேப்பரப்பை எப்படி தயாரிப்பது என்று காண்போம். இந்த வேப்பரப் நெஞ்சு மற்றும் மூக்கில் உள்ள சளியை வெளியேற்றி, உடனடி நிவாரணம் அளிக்கும்.

அத்தியாவசிய நறுமண எண்ணெய்கள்

அத்தியாவசிய நறுமண எண்ணெய்கள்

அத்தியாவசிய நறுமண எண்ணெய்கள் உடல் ஆரோக்கியத்திற்கான ஒரு வரப்பிரசாதம். இது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ உதவி புரியும். நறுமண எண்ணெய்கள் சரும பராமரிப்பு மற்றும் செரிமான பிரச்சனைகளில் இருந்து விடுவிப்பதோடு, சளி பிரச்சனைக்கும் நல்ல தீர்வை அளிக்கக்கூடியது. இப்போது இயற்கையான வேப்பரப்பை எப்படி தயாரிப்பது என்று காண்போம்.

தேவையான பொருட்கள்:

தேவையான பொருட்கள்:

* தேங்காய் எண்ணெய் - 1/4 கப்

* லாவெண்டர் எண்ணெய் - 10-15 துளிகள்

* யூகலிப்டஸ் எண்ணெய் - 10-15 துளிகள்

* டீ-ட்ரீ ஆயில் - 2-3 துளிகள்

* புதினா எண்ணெய் - 5-10 துளிகள்

* எலுமிச்சை எண்ணெய் - 10-12 துணிகள்

தயாரிக்கும் முறை:

தயாரிக்கும் முறை:

* ஒரு சிறிய பௌலில் தேங்காய் எண்ணெயை எடுத்துக் கொள்ள வேண்டும்.

* பின் அதில் மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து நறுமண எண்ணெய்களையும் ஒவ்வொன்றாக சேர்த்து, நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

* பின்பு இந்த கலவையை காற்றுப்புகாத ஜாடி அல்லது சிறிய பாட்டிலில் ஊற்றி சேகரித்துக் கொள்ள வேண்டும்.

* பிறகு அந்த பாட்டிலை குளிர்ச்சியான இடத்தில் வைக்கவும். உங்களுக்கு உடனடியாக பயன்படுத்த வேண்டுமானால், அதை ஃப்ரிட்ஜில் வைத்திடுங்கள்.

* இந்த வேப்பரப்பை சூரிய ஒளி படாமல் வைத்தால், குறைந்தது 6 மாதங்கள் வரை நன்றாக இருக்கும்.

குறிப்பு

குறிப்பு

* இந்த கலவையை குழந்தைகளிடம் இருந்து தொலைவில் வைத்திடுங்கள்.

* உங்களுக்கு சென்சிடிவ் சருமம் என்றால், முதலில் சருமத்தின் சிறு பகுதியில் தடவிப் பார்த்து, எவ்வித பாதிப்பும் இல்லாவிட்டால் பின் பயன்படுத்துங்கள்.

நன்மைகள்:

நன்மைகள்:

வீட்டில் தயாரிக்கப்பட்ட இந்த வேப்பரப்பைப் பயன்படுத்துவதால் பெறும் நன்மைகளாவன:

* உடனடி நிவாரணம் எவ்வித பக்கவிளைவுமின்றி கிடைக்கும்

* சுவாச பிரச்சனைகள் சரியாகும்.

* மாசுபடுத்திகள் மற்றும் ஒவ்வாமைகளை விலக்கி வைக்கும்.

* அமைதியான இரவு தூக்கத்தை பெற உதவும்.

* வலி மற்றும் வீக்கத்தை எளிதாக்கும்.

* குழந்தைகளுக்கு பயன்படுத்த பாதுகாப்பானது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

DIY Decongestant To Ward Off Cold, Cough and Chest Congestion In Minutes!

Stop buying vapour rubs from the market and try this DIY decongestant instead. It is safe, herbal and highly beneficial.
Story first published: Saturday, January 18, 2020, 14:54 [IST]
Desktop Bottom Promotion