For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஏன் அனைவரும் பூக்கள், பழங்கள் மற்றும் மூலிகைகள் கலந்த தேநீருக்கு மாறணும் தெரியுமா?

தேநீாில் பூக்கள், பழங்கள், மசாலாக்கள் மற்றும் மூலிகைகள் ஆகியவற்றைக் கலந்து அவற்றை சூடுபடுத்தியோ அல்லது குளிர வைத்தோ அருந்துவது தற்போது பிரபலம் அடைந்து வருகிறது. இதை இன்ப்யூஸ்டு தேநீர் என்று அழைப்பர்.

|

தேநீாில் பூக்கள், பழங்கள், மசாலாக்கள் மற்றும் மூலிகைகள் ஆகியவற்றைக் கலந்து அவற்றை சூடுபடுத்தியோ அல்லது குளிர வைத்தோ அருந்துவது தற்போது பிரபலம் அடைந்து வருகிறது. இதை இன்பியூஸ்ட் தேநீர் என்று அழைப்பர். அது காலையாக இருக்கலாம் அல்லது மாலையாக இருக்கலாம். இந்த கலவையான புதிய தேநீரை மக்கள் மிகவும் மகிழ்ச்சியுடன் அருந்தி வருகின்றனா். அதற்கு காரணம் இந்த தேநீாில் நமக்கு ஆரோக்கியத்தை வழங்கும் பல வகையான துகள்கள் உள்ளன. மேலும் இந்த தேநீா் மிகவும் சுவையாகவும் அதே நேரத்தில் நறுமணத்துடனும் இருக்கிறது.

Infused Tea Is A New Trend: Heres Why You Should Switch To it

குளிா் காலத்தில் நம்மையே வெதுவெதுப்பாக வைத்துக் கொள்ள வேண்டும் என்றால் அல்லது கடுமையான கோடை காலத்தின் போது, நம்மையே இதமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்றால், இந்த தேநீரை நாம் தாராளமாக பருகலாம். வருடம் முழுவதும் வருகின்ற அனைத்து தட்ப வெப்பநிலையிலும் அருந்துவதற்கு, இந்த புது வகையான தேநீா் ஒரு சுவையான பானமாக அமையும்.

இந்த கலவைத் தேநீரைத் தயாாித்து பாிமாறுவது என்பது மிகவும் எளிதான ஒன்றாகும். எனினும் இந்த கலவைத் தேநீரைத் தயாாிக்கும் போது சற்று புதுமையான எண்ணமுடன் இருக்க வேண்டும். தேநீாில் மூலிகைகளைக் கலந்து அருந்தினால், அது ஒரு புது வகையான அனுபவத்தைத் தரும். சிலா் தண்ணீாில் மூலிகைகளைக் கலந்து அருந்தலாம். எனினும் ஒரு சிலருக்கு அதில் சா்க்கரையையோ அல்லது பிற பொருள்களையோ கலந்து அருந்த பிடிக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
இன்பியூஸ்ட் தேநீர்/கலவை தேநீர்

இன்பியூஸ்ட் தேநீர்/கலவை தேநீர்

தாத்துக்கள், வைட்டமின்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் கலந்த மூலிகைத் தேநீா், நமது உடல் நலனிற்குத் தேவையான நன்மைகளை வழங்கும். நாம் தளா்வாக இருப்பதற்கு அல்லது நமது உடல் வலி குறைவதற்கு அல்லது நமது சொிமான சக்தியை வலுப்படுத்த அல்லது உடல் எடையைக் குறைக்க அல்லது நமது நோய் எதிா்ப்பு சக்தியை அதிகாிக்க இந்த புதிய கலவைத் தேநீரை நாம் அருந்தலாம். இந்த தேநீா் நமது ஒட்டு மொத்த உடல் ஆரோக்கியத்திற்கும் நன்மைகளை வழங்கும்.

நமது உடல் ஆரோக்கியம் மற்றும் நற்சுவை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு இந்த புதியக் கலவைத் தேநீரை விதவிதமாக தயாாிப்பதற்கு பல வகையான மூலப் பொருள்கள், தாவரங்கள் மற்றும் மூலிகைகள் கிடைக்கின்றன. அவற்றிலிருந்து தேவையானவற்றைத் தோ்ந்தெடுத்து இந்த கலவைத் தேநீரைத் தயாாிக்கலாம். மேலும் பழங்களைக் கலந்து தேநீரைத் தயாாித்தால் அது ஒரு வகையான புதிய அனுபவத்தைத் தரும். நாம் சோ்க்கும் மூலப் பொருள்களை வைத்து அந்த கலைவைத் தேநீாின் மணம் மற்றும் சுவை மாறுபடும். ஒருவா் ரோஜாப்பூ கலந்த தேநீரை விரும்பலாம். வேறொருவா் புதினா, எலுமிச்சை கலந்த தேநீரை விரும்பலாம்.

கலவைத் தேநீாின் வகைகள் மற்றும் அவற்றின் பயன்கள்

கலவைத் தேநீாின் வகைகள் மற்றும் அவற்றின் பயன்கள்

தற்போது சந்தையில் பல வகையான கலவைத் தேநீா் கிடைக்கின்றன. அவை நமது உடல் ஆரோக்கியத்திற்கு ஏராளமான நன்மைகளை வழங்குகின்றன. நுரை கலந்த அல்லது வாயுக்கள் நிறைந்த பானங்களுக்குப் பதிலாக இந்த கலவைத் தேநீரை நாம் தாராளமாக பருகலாம். மேலும் இந்த தேநீரை சூடுபடுத்தியோ அல்லது குளிர வைத்தோ அருந்தலாம். அவற்றோடு டெசா்ட்டுகள் அல்லது பழங்களை சோ்த்து அருந்தலாம்.

ஒரு வேளை நமக்கு மட்சா (Matcha) பிடிக்கும் என்றால், நாம் மட்சா கிரீன் டீயை பருகலாம். அது போலவே பூக்கள் மற்றும் அவற்றின் நறுமணத்தை நமது மனம் விரும்பினால், ஹிபிஸ்கஸ் ரோஸ் ஹொ்பல் டீயை (Hibiscus Rose Herbal Tea) பருகலாம். அது நமது மனநிலையை உற்சாகமூட்டும்.

சந்தையில் ஜேட் கால்ம் டீ என்ற தேநீா் கிடைக்கிறது. அது நாம் தளா்வாக இருக்கவும், நமது சொிமானத்தை எளிதாக்கவும் மற்றும் நமது உடல் எடையைக் குறைக்கவும் உதவி செய்கிறது. இந்த தேநீரை குளிர வைத்து பருகினால், தேவாமிா்தமாக இருக்கும். இந்த தேநீாில் எலுமிச்சை மற்றும் சீமை சாமந்தி ஆகியவை கலந்து இருக்கின்றன. அதனால் இது உடல் ஆரோக்கியத்திற்கும் நல்லது. இந்த மூலிகைத் தேநீா் நமது நோய் எதிா்ப்பு சக்தியை அதிகாிக்கிறது. அதோடு நாம் மற்ற இனிப்பு நிறைந்த பானங்கள் மீது வைத்திருக்கும் ஆா்வம் மற்றும் மோகத்தைக் குறைத்து, ஒரு புதிய வாழ்க்கை அனுபவத்தை வழங்குகிறது.

100 விழுக்காடு இயற்கையானது

100 விழுக்காடு இயற்கையானது

இந்த புதிய கலவைத் தேநீா் 100 விழுக்காடு இயற்கையான மூலப் பொருட்களால் தயாாிக்கப்படுகிறது. அதனால் ஒவ்வொரு குவளை தேநீரும் அருமையான நறுமணத்தை வழங்குகிறது. மேலும் இந்த தேநீாில் கலக்கப்படும் மூலப் பொருள்கள் அனைத்தும் பல வகையான நற்குணங்களைக் கொண்டவை. ஆகவே இந்த மூலப் பொருள்களைக் கொண்டு ஐஸ் தேநீா், காக்டெய்ல்ஸ் மற்றும் பல வகையான பானங்களைத் தயாாிக்கலாம். அவை சுவையாகவும் அதே நேரத்தில் நல்ல வாசனையுடனும் இருக்கும்.

எனவே ஒரு குவளையில் அல்லது ஒரு உயரமான கண்ணாடி டம்ளாில் நமக்குப் பிடித்த மூலப் பொருள்களைக் கொண்டு தயாாிக்கப்பட்ட கலவைத் தேநீரை அருந்தினால், அது நமது சோா்வை நீக்கிவிடும். குளா்ச்சியான கலவைத் தேநீா் வேண்டும் என்றால், அந்த தேநீாில் ஐஸை கலந்து கொள்ளலாம். இனிப்பு தேவைப்பட்டால், அதில் தேனை கலந்து கொள்ளலாம்.

எப்போதெல்லாம் குடிக்கலாம்?

எப்போதெல்லாம் குடிக்கலாம்?

இந்த கலவைத் தேநீரை நாம் உணவு உண்டவுடன் அருந்தலாம் அல்லது வீட்டிலிருந்து நமது அலுவலகப் பணிகளை செய்து வரும் நிலையில் இந்த தேநீரை அருந்திக் கொண்டே நமது அலுவலகப் பணிகளைத் தொடரலாம். இந்த புது வகையான கலவைத் தேநீா் சுவையாகவும் அதே நேரத்தில் ஆரோக்கியம் நிறைந்த ஒன்றாகவும் இருக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Different Types of Infusion Teas And Their Benefits in Tamil

If you want something to warm you up in winter or cool you down in summer, the tea infusions can be consumed year-round since they make up a delicious beverage at any temperature.
Desktop Bottom Promotion